ADS 468x60

01 October 2014

மட்டக்களப்பு ஏழைகளின் பூமியாம்.

வகுப்பறையில் வாசிக்கவேண்டியவர்கள்
வழிகலெல்லாம் யாசிக்கிறார்கள்
மட்டக்களப்பு ஏழைகளின் பூமியாம்
புள்ளிவிபரம் காட்டி
போட்டி போட்டு பேசிகிறார்கள்!!! ஐயகோ!!

வயிற்றை நிரப்ப முடியாமல்
வாடியபோதெல்லாம் கழுத்தில்
கயிற்றை இறுக்கி கொலை
செய்யவேண்டியவர்கள் இவர்கள் அல்ல,


வாக்கினையும் வளத்தினையும் சுரண்டி
வங்கிகளில் பணத்தை நிரப்பும்
போக்கத்த பெரியவர்கள்தான் அதை செய்யவேண்டும்!!
மாலைகளை அணிய மட்டுமா
வேலை பார்கிறீர்கள்??- 11
அதுவும் அவர்கள் போடுவதுதான்..

இவர்கள் உழைத்து வாழ்கிறார்கள்
நீங்கள் அவர்களின் உழைப்பை
துழைத்து வாழ்கிறீர்கள்!!

சிறுமை என்றதுக்கே அணிசேர்த்த இம்மண்ணில்
வறுமை என்றதும் ஏன் சேரவில்லை அணி
அணி ஆளமட்டும்தானா சேர்பார்கள் இனி??- 11

பாவம் இந்தக் குழந்தைகள்!!
நிலாச் சோறு திண்டு தெரியாதவர்கள்!
தெரியாதவர்கள்போல் இருக்கிறார்கள்
இது தெரிந்தவர்கள்.

தலைவைத்து தூங்க
தாய்மடி கண்டு அறியாதவர்கள்!

விருப்பிருந்த போதும்
செருப்பணிய முடியாதவர்கள்!

பிறந்தநாளில் கூட பசி
மறந்த நாள் இவர்களுக்கில்லை!!

புள்ளிவிபரம் காட்டி
புகழ் சேர்க்கவா இவர்களை
தள்ளி வைத்திருக்கிறீர்கள்!!

இதுகளும் எங்கள் குழந்தைதானே!
மதுவுக்கு கோடி மாசம் போகிறதாம்
இங்கே!!
மதுவுக்கு கோடி மாசம் போகிறதாம்
மார் தட்டுகிறார்கள் வெட்கம் வெட்கம்!!!
இதைவிட வேறு என்ன இருக்கிறது?

பட்டி தொட்டியெல்லாம் மதுக்கடை-ஆனால்
படிக்க வைக்க இல்லை பொதுப்படை-இவர்கள்
பாழகிப் போவதா இதுக்குவிடை!!!

கோயிலடி குழந்தைகள் கூடும் பாடசாலை
வாயிலடி இன்னும் எமதினத்தின்
பெண்களும் பெரியோரும் நடமாடும்
பொதுச்சாலைகள் எல்லாம் -இன்று
மட்டக்களப்புக்கு ஈனம் புகட்டும்
மதுச்சாலையாக காட்சி தருது!!!

ஏழைக்கு உதவ எழுதப்படித்துவிட்டு
ஏய்த்து பிழைக்கவா நீங்களெல்லாம்
ஏற்றுப் பணி செய்தீர்கள்;!!

பிறை நிலாவுக்கு கறைகள் இல்லை
எல்லாம் வளந்த பிறகுதான்
நீங்களும் அப்படியேதானா???

மரம் வளர்கிறது காய்ப்பதற்காய்
மலர் வளர்கிறது பூப்பதற்காய்
மனிதன் மடடும் வளர்ந்தால் ஏன் ஏய்கிறான்???


சிந்தியுங்கள்!!
சிறகு முளைத்துப் பறக்க
இவர்கள் ஒன்றும் பீனிஸ் பறவைகள் அல்ல
சிறகுடைந்த குஞ்சுகள்!!
இன அழிப்பிலும் இயற்கை அழிப்பிலும்
இன்பங்களை தொலைத்த நெஞ்சுகள்!!

இவர்களின் வியர்வைத்துளிகளில்
விழைந்த அரிசில் அல்லவா
சோற்றை உண்கின்றீர்கள்!

உருகி உருகி உழைப்பில் உருகி
கருகி கருகி பசியில் கருகி
அருகிப் போகும் அறிவுள்ள சந்ததிகள்,
வறுமையை விரட்ட எருமை விரட்டி
சேர்த்த ஒத்தை ரூபாய்களின்
தேசிய வருமானம்தான்
உன்னையும் என்னையும் வளர்த்தது.

வளர்த்து விட்டவனை வார்த்தையில் விரட்டுகிறாய்
அவன் உனக்கு சேவகனல்ல- நீ
அவனுக்கு சேவகன்!!

இன்னும் அவனை உணரவிடாமல் இருக்கவா
தின்னவும் வழியில்லாமல் தெருக்களில் விரட்டுகிறீர்கள்!!!

பாவம் இந்தக் குழந்தைகள்-இவர்கள்
பள்ளியை நிறுத்தி
கொள்ளி சுமக்கிறார்கள்!!!
இன்று இவர்களை விரட்டுகிறீர்கள்
நாளை இந்தக் கறுமங்கள் உங்களையும் விரட்டும்....

மட்டக்களப்பு ஏழைகளின் தேசமல்ல
அன்பால் ஆளவேண்டியவர்கள்
அராஜகத்தால் ஆண்டு
ஏழையாக்கப்பட்ட தேசம்!!!


வந்தோரை வாழவைத்த பூமியில்
இருந்தோர் வாழ முடியாமல் போனதேன் சாமி!!!
வாழ முடியாமல் போனதேன் சாமி!!!

சிந்திப்போம் செயற்ப்படுவோம்

0 comments:

Post a Comment