ADS 468x60

28 December 2015

மட்டு மண்ணே வணக்கம்

காடு மலை மேடு எல்லாம்
கண்ட படி நடந்தேன்
நாடு விட்டு நாடு போயி
நாலு பேரை அறிந்தேன்
கூடு விட்டு கூடு பாய்ந்து
உன்னைத் தேடும் மனமே

வளம் பொங்கும் வயலினில் கால்பட அலைந்தேன்

22 December 2015

பேசு

உன் சிரிப்பொலி கேட்டு பழகிப் போனவன் உன் சினுங்குதல் கேட்டு பருகிப் போனவன்

13 December 2015

அட மடயா!

அட மடயா அறிவிருக்கா
அர குறயா காதலா
பெண் இனமே பூவனமே!
அழகான வலிதான்டா!!

12 December 2015

மாற வைத்தவள்!

நான் வாழ வைக்கப் பிறந்தவன்
வாழத் தவறியவன்
மெல்லிய சிரிப்பில்
மென்மையான பேச்சில்
தூக்கத்தை துலைத்து
இன்பத்தை பருகியவன்

காறை எலும்பு வரை
கறுத்திருந்த குருதிகளை
மாற வைத்தவள்!

கண்கள் இரண்டினுள்ளும்
கண்ணாடி மாட்டிக்கொண்டு
காணும் காட்சியானவள்!

04 December 2015

மற்றவரும் பின்பற்றும் தமிழ் நாகாிகம்..

எல்லோருக்கும் அவரவர் பண்பாடுகள், உணவுவகைகள், கலாசாரம் என்பன மீது ஒரு இறுக்கமான விருப்பு இருப்பது அவர்களது உன்மையான தோற்றத்தை காட்டுவதாய் அமையும். சிலர் அவரவர் இனத்துவத்தினை, கலாசாரத்தினை பேணிக்கொள்ள வெட்க்கப்படுவதனையும் மறைத்துக்கொள்வதனையும் ஒரு நாகரிகமாகக் கொள்ளுகின்றனர்.

இன்றய தமிழ் இளந்தலைமுறையினர் அவற்றை காணமத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை போற்றிவந்த பல நிகழ்வுகள் யுத்தத்துடன் யுத்தமாக அடிபட்டுப் போயிற்று.

எல்லாமாகி!

எதிரியாகின்றேன் சிலநேரம்
உதிரியாகின்றேன்
பிச்சையாகின்றேன் பலருக்கு
கச்சையாகின்றேன்

என்னை உலுக்கிய செய்தி!

















என்னை உலுக்கியது சென்னைச் செய்தி!
விண்ணை பிழந்த மழை
மண்ணை இழுத்துப் போகுது
"கூவங்களை கழுவி
குடியிருப்புகளை கூவமாக்கியுள்ளது"

25 November 2015

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- நான்
அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்...
ஆசையோடே அசைகள் போட்டு
கண்கள் ரெண்டும் மூடிப்பார்க்கிறேன்

16 November 2015

ஏற்றத்தாழ்வு

இன்று வடகிழக்கில் போரினால் மற்றும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஓரளவுக்கு மீண்டிருந்தாலும் அவர்களுடைய ஒட்டுமொத்த குடும்ப நிலை அதிகமாக கிராமப்புறங்களை அண்டிவாழுகின்ற மக்களிடையே மிக மோசமாக காணப்படுகின்றது. இவர்களது குடும்பம் பொதுவாக பெற்றோர், அவர்களுடைய தாய் தந்தை, சில சகோதரர்னகள் மற்றும் பிள்ளைகள் அடங்கலாக 10 பேரினை கொண்ட பொிய ஒரு குடும்பமாகும். இவர்களுடைய சராசாி ஒட்டுமொத்த வருட வருமானம் சுமாா் ரூபாய் 30000/= -50000/= வரையானதாகவும், சிலர் தானிய உற்பத்தியினை தாங்களே செய்து உண்ணுகின்றவர்களாகவும் காணப்படுகின்றனா்.

07 November 2015

இயற்கையை அரனாக்குவோம்


இன்று ஒரு வருடத்துக்கு மேலாக பாதுகாத்து வளர்தெடுத்த எமது மரக்கன்றுகளை பார்வையிடக்கிடைத்தது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அது இயற்கை மூடிய இன்ப அரன். கிட்டத்தட்ட 1400 சிறிய நடுத்தர பெரிய குளங்கள் பதியப்பட்டு இருந்துள்ளதாகவும் அதில் இன்று வெறும் நானூறு குளங்களை மாத்திரம் கண்டுபிடித்துள்ளதாகவும் ஏனைய குளங்கள் இருந்த இடமும் தெரியாமல் அழித்து விட்டார்கள் என பேச வல்ல அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

இயற்கையை அரணாக்குவோம்!

இன்று ஒரு வருடத்துக்கு மேலாக பாதுகாத்து வளர்தெடுத்த எமது மரக்கன்றுகளை பார்வையிடக்கிடைத்தது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அது இயற்கை மூடிய இன்ப அரன். கிட்டத்தட்ட 1400 சிறிய நடுத்தர பெரிய குளங்கள் பதியப்பட்டு இருந்துள்ளதாகவும் அதில் இன்று வெறும் நானூறு குளங்களை மாத்திரம் கண்டுபிடித்துள்ளதாகவும் ஏனைய குளங்கள் இருந்த இடமும் தெரியாமல் அழித்து விட்டார்கள் என பேச வல்ல அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

01 November 2015

மகன் தந்தைக்காற்றும் உதவி!

அவையத்துள் முந்தி நிற்கும் இமையம்
உபயங்கள் செய்து வாழும் கண்ணன்
சேய்மையில் இருந்தாலும்
தாய் மண்ணை மறக்கவில்லை..

28 October 2015

வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!

வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே -நமைக் 
காட்டிக் கொடுப்போர் காலடி என்றும் நாடாதே- வெறும்
பேச்சைக் கேட்டு பொம்மைகள் போல ஆடாதே- பொழுது
புலரும் கிழக்கில் வெற்றியின் முழக்கம் வாடாதே - நீ
வீட்டை தவிர வோட்டை எதற்ம் போடாதே!

27 October 2015

நல்லாட்சியில் கிடைத்த மழையோ!

மடை உடைக்கும் வெள்ளம்
நிரம்பியது பள்ளம்
நாட்டிலேதோ பிழை
நாளெல்லாம் மழை
கூழுக்கும் இல்லை வழி
கூறுவது யாரைப் பழி
மறுகாமறுகா பெய்யிது காட்டில்
மக்களெல்லாம் முடங்கினர் வீட்டில்
ஒரே இதுதான் வேலையாப் போச்சி
ஒழிப்பது எப்படி வறுமையை ஆச்சி
தோட்டமும் தொரவும் எங்களுக்கு ஆதாரம்
கிடைக்குமா வெள்ளத்தில் போன சேதாரம்
நாங்களும் நினைத்தோம் இது
நல்லாட்சியில் கிடைத்த மழையோ என்று
முள்ளிவாய்க்கால் முற்றுகைபோல்
அள்ளி வருகிறது ஆத்துவெள்ளம்
தவிர்க்க முடியாத ஒன்று
தவிக்கும் மக்களை நாம்தான் பார்க்கனும்
நேர்த்தியான தகவல் தேவை- அது
நேர்மையாய் உதவி அளிக்கும்

சும்மா எங்களை பார்ப்பவர் தமக்கு சுமைகள் தெரிவது இல்லை!

தமிழாய் பிறக்கவைத்தான்- தெருவில்
தனிமையில் நடக்கவைத்தான்
உறவை மறக்கவைத்து- எங்களை
ஊர் ஊராய் திரியவைத்தான்

அணைக்கும் அம்மா ஆருயிர் அப்பா
அனைத்தும் இழந்தே போனோம்!
உணவிடக் கூட உறவுகள் இழந்து
ஊனமாய் வாழ்க்கையில் ஆனோம்!!

வீடுகளெல்லாம் காடுகளாச்சி
வெளியே வாழ்க்கை போச்சி
சும்மா எங்களை பார்ப்பவர் தமக்கு
சுமைகள் தெரிவது இல்லை

பள்ளிக்கு செல்ல பார்ப்பவர் இல்ல
படிக்கிற நெலமையும் இல்ல
பசியில வாடிடும் நேரத்தில் கூட
பக்கத்தில் உறவுகள் இல்ல!!

நான் மானல்ல ஓட!













இந்தா வந்திட்டன் பொறுமா
இறங்கி வடிச்சி வாறன்
இறால்க் கூனி சுங்கான்
வறால் கெழுத்தி செல்வன்

மூத்த பிள்ளை நான்தான்
முழுதும் சுமக்கும் பெண்தான்
வீட்டுக்குள்ள இருந்தா
வெறும் பானை சோறிடுமா?

அச்சம் காட்டி என்னை
அறைக்கு உள்ளே பூட்டாதே
பயந்து போகும் மானைத்தான்
பாய்ந்து பிடிக்கும் புலி
நான் மானல்ல ஓட
மறுபடியும் பாயும் வேங்கை

09 August 2015

கொடுக்கிற மக்களுக்கு குடிக்க இல்லையா தண்ணீர்? மன்றாடும் உன்னிச்சை மக்கள்..

 மட்டக்களப்பு என்ற அழகுப் பெண்ணை வேலியாக காத்து நிற்கும் மக்கள் எமது எல்லைக் கிராமத்தவர்கள்தான். யுத்தம், அனர்த்தம், இருள், வறுமை, வேதனை என்னும் பேரிடிகளின் காப்பாக இருந்தவர்கள்,மழையிலும் வெயிலிலும் கல்லிலும் முள்ளிலும் கரத்தாலும் சிரத்தாலும் களனி செய்து உண்ணும்; சோற்றுக்கு நெல் விளைவிப்பவர்கள், மீனும் தேனும் பாலும் கூழும் பசிக்கு தருபவர்கள், வந்தோரையெல்லாம் வாழவைப்பவர்கள் என்ற அடைமொழியின் சொந்தக் காரர்கள், உபசரிப்பதில் உற்சாகமானவர்கள் இந்த உன்னிச்சை கிராம மக்கள்.

23 July 2015

போதையிலே பாதை மாறிப் போகாதே!

போகாதே தம்பி போகாதே – நீ
போதையிலே பாதை மாறிப் போகாதே
கண்ட கண்ட போதையெல்லாம் உண்ணுகின்றாயே –உன்
கடைசி நாளை விரலை விட்டு எண்ணுகிறாயே

நல்லவங்க போதையைத்தான் தொட்டதுமில்ல –அத
தொட்டவன லேசிலதான் விட்டதுமில்ல
பையில் உள்ள பணத்தையெல்லாம் போதை குடிக்குது –உன்
பரம்பரயே பசியிலதான் நாளும் துடிக்குது

குடும்பத்தையே தெருவினிலே கொண்டு வருகிது- இது
குடித்தவன அருகினிலே மரணம் நெருங்குது
உடும்பப்போல போதையை நீ இறுகப்ப பிடிப்பதால்- உனை
அடிமையாக்கி ஊருலகில் பெருமை குறைக்கிது

வேலியெல்லாம் பயிரை மேயும் கேலியினாலே –நம்ம
வீடுகளில் கூட ஒரு சுதந்திரம் இல்லே
நீதிகெட்டுப் போன நாட்டில் நிம்மதியில்ல –நல்ல
சேதிகெட்டு நாளும் நாளும் காது உடையிது

19 July 2015

மனிதன் வளமாக இல்லை

எம்மிடம் மனித வளம் இருக்கிறது ஆனால் மனிதன் வளமாக இல்லை. மனிதன் வளமாக இருக்க பயிற்ச்சியும், வழிகாட்டலும் தேவை. முன்னுக்கு செல்பவர்கள் பின்னுள்ளவரை கைவிட்டுச் செல்லும் பாணியிலான மனோபாவம் எம்மினத்தினரிடையே எப்போது மாறுமோ அப்போது நம் உறவுகள் இந்தக் கோலத்தில் இருக்க மாட்டார்கள். மனம் வைத்து மேம்படுத்துவோம்...
"மனித வள மேம்பாட்டின் நோக்கமானது மனிதவளத்தின் முழுமையை வளர்ப்பதற்காக அறிவூட்டுவதன் ஊடகவும் கல்வி, பயிற்சி சுகாதாரம் அனைத்து மட்டங்களின் ஊடாக வேலை வாய்ப்பு போன்றவற்றின் இணைந்த கொள்கைகளினால் பெறப்படுகின்ற ஒன்றாகும்.

04 March 2015

கையைக் கட்டி நில்லாதே!

கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!

வாழ்கை என்பது வட்டமடா
மேலும் கீழும் ஓட்டமடா
நீயும் ஒருநாள் மேலேவா தோழா!

இனி கவலைக்கு இடமில்லையே- பயமில்லையே
எங்கள் கழுத்தினில் விடமில்லையே- வியப்பில்லையே

உந்தன் வாழ்கையில் ஜெயிக்கும்வரை- நீ
கையைக் கட்டி நில்லாதே
கண்டது எல்லாம் அஞ்சாதே
குட்டக் குட்டக் குனியாதே தோழா!!

காடும் மேடும் உன்னோடு
கடலும் காற்றும் உன்னோடு
இறந்தும் இருப்போம் மண்ணோடு
இறக்கும் வரைக்கும் போராடு
கல்வியும் எமக்கொரு ஆயுதமே!
கைகளில் நீயெடு முன்னேறு
வறுமை எமக்கொரு தடையில்லையே- அட போராடு
இன்று மட்டும்தான் எமக்கு சொந்தம்
நேற்றையதை நினைத்து நீ வருந்தாதே!
மனங்கள் மட்டும் உறுதி கொண்டால்
மழை வெயில் எமக்கில்லை மனிதரில் பதரில்லை!

கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!

மேற்கே சூரியன் உதிக்காது
மேடைப் பேச்சும் உதவாது
வாக்கை அள்ளி வீசுவதால்
வாழ்க்கை ஒன்றும் உயராது....
ஒன்றாய் இருந்தால் ஜெயித்திடலாம்
உதவாக் கரைகளை ஒளித்திடலாம்
மக்கள் கூட்டம் விழித்து விட்டால்- அட அழியாது
நம்பி நம்பியே இழந்து விட்டோம்
நரிகளும் பரிகளும் புலியாச்சு
நம்பிக்கை மட்டும் நமது சொத்து
தடைகளை உடைத்திடு சரித்திரம் படைத்திடு..
கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!

வந்தவரை வாழ வைக்கும் மண்ணய்யா

வந்தவரை வாழ வைக்கும் மண்ணய்யா-நம்ம
மாநிலத்தில கிடைக்காதது என்னையா
கலைகள் எல்லாம் எங்களுக்கு மூச்சுங்க-ஒங்கள
ரசிக்க வைக்கும் மட்டக்களப்பு பேச்சிங்க

28 January 2015

ஆண்டு நூறு வாழ்க

ஆண்டு நூறு வாழ்க
அமைதி இன்பம் சூழ்க
நாடும் செல்வம் யாவும்
நாளும் வந்து கூடும்

06 January 2015

நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா

கண்ணணப்பா கொஞ்சம் நில்லப்பா
நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா
நான் கேட்கும் கேள்விக்கு
நீயுச்சும் சிந்திச்சு சொல்லப்பா பதில் சொல்லப்பா