ADS 468x60

04 March 2015

கையைக் கட்டி நில்லாதே!

கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!

வாழ்கை என்பது வட்டமடா
மேலும் கீழும் ஓட்டமடா
நீயும் ஒருநாள் மேலேவா தோழா!

இனி கவலைக்கு இடமில்லையே- பயமில்லையே
எங்கள் கழுத்தினில் விடமில்லையே- வியப்பில்லையே

உந்தன் வாழ்கையில் ஜெயிக்கும்வரை- நீ
கையைக் கட்டி நில்லாதே
கண்டது எல்லாம் அஞ்சாதே
குட்டக் குட்டக் குனியாதே தோழா!!

காடும் மேடும் உன்னோடு
கடலும் காற்றும் உன்னோடு
இறந்தும் இருப்போம் மண்ணோடு
இறக்கும் வரைக்கும் போராடு
கல்வியும் எமக்கொரு ஆயுதமே!
கைகளில் நீயெடு முன்னேறு
வறுமை எமக்கொரு தடையில்லையே- அட போராடு
இன்று மட்டும்தான் எமக்கு சொந்தம்
நேற்றையதை நினைத்து நீ வருந்தாதே!
மனங்கள் மட்டும் உறுதி கொண்டால்
மழை வெயில் எமக்கில்லை மனிதரில் பதரில்லை!

கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!

மேற்கே சூரியன் உதிக்காது
மேடைப் பேச்சும் உதவாது
வாக்கை அள்ளி வீசுவதால்
வாழ்க்கை ஒன்றும் உயராது....
ஒன்றாய் இருந்தால் ஜெயித்திடலாம்
உதவாக் கரைகளை ஒளித்திடலாம்
மக்கள் கூட்டம் விழித்து விட்டால்- அட அழியாது
நம்பி நம்பியே இழந்து விட்டோம்
நரிகளும் பரிகளும் புலியாச்சு
நம்பிக்கை மட்டும் நமது சொத்து
தடைகளை உடைத்திடு சரித்திரம் படைத்திடு..
கையைக் கட்டி நில்லாதே!
கண்டது எல்லாம் அஞ்சாதே!
குட்டக் குட்டக் குனியாதே தோழா!

வந்தவரை வாழ வைக்கும் மண்ணய்யா

வந்தவரை வாழ வைக்கும் மண்ணய்யா-நம்ம
மாநிலத்தில கிடைக்காதது என்னையா
கலைகள் எல்லாம் எங்களுக்கு மூச்சுங்க-ஒங்கள
ரசிக்க வைக்கும் மட்டக்களப்பு பேச்சிங்க