ADS 468x60

23 July 2015

போதையிலே பாதை மாறிப் போகாதே!

போகாதே தம்பி போகாதே – நீ
போதையிலே பாதை மாறிப் போகாதே
கண்ட கண்ட போதையெல்லாம் உண்ணுகின்றாயே –உன்
கடைசி நாளை விரலை விட்டு எண்ணுகிறாயே

நல்லவங்க போதையைத்தான் தொட்டதுமில்ல –அத
தொட்டவன லேசிலதான் விட்டதுமில்ல
பையில் உள்ள பணத்தையெல்லாம் போதை குடிக்குது –உன்
பரம்பரயே பசியிலதான் நாளும் துடிக்குது

குடும்பத்தையே தெருவினிலே கொண்டு வருகிது- இது
குடித்தவன அருகினிலே மரணம் நெருங்குது
உடும்பப்போல போதையை நீ இறுகப்ப பிடிப்பதால்- உனை
அடிமையாக்கி ஊருலகில் பெருமை குறைக்கிது

வேலியெல்லாம் பயிரை மேயும் கேலியினாலே –நம்ம
வீடுகளில் கூட ஒரு சுதந்திரம் இல்லே
நீதிகெட்டுப் போன நாட்டில் நிம்மதியில்ல –நல்ல
சேதிகெட்டு நாளும் நாளும் காது உடையிது

0 comments:

Post a Comment