ADS 468x60

01 November 2015

மகன் தந்தைக்காற்றும் உதவி!

அவையத்துள் முந்தி நிற்கும் இமையம்
உபயங்கள் செய்து வாழும் கண்ணன்
சேய்மையில் இருந்தாலும்
தாய் மண்ணை மறக்கவில்லை..


வித்துக்கள் எல்லாம் முளைப்பதில்லை
முளைத்த வித்தும் சில தளைப்பதில்லை
நீங்கள் விருட்சமான வித்து

கதைப்பவர் மத்தியில் செய்பவன் நீ
நினைப்பவர் மத்தியில் நிற்பவன் நீ
அதனால் நீயும் ஒரு கண்ணன்...

காலத்தின் கோலத்தில் கரைந்த-எம்
கல்வியை கைகொண்டு ஏற்ற
கருசனை கொள்ளும் சேவகன்

கத்தரி கொச்சி வெண்டி செய்தாலும்
கல்வியென்றால் கண்ணாய் இருப்பவர்கள்
ஊரார்- அதுக்கு
இந்த பயிரை மக்கள் பார்கின்றனர்
அநத உயிரை நீங்கள் பார்க்கின்றீர்கள்

இதைப் போல ஒரு நாள் நானும்
உதவவேண்டும் - என்று
கதைப்போர் பெருகியது உங்களால்
பரிசை வேண்டவென- படிப்போர் கூட்டம்
வரிசையில் நீண்டது உங்களால்

சாலையும் சோலையும் இன்று
காலோங்கத் தொடங்கி விட்டது
நாளை உலகை இன்றே உருவாக்க
வேலை செய்யும் உங்களுக்கு
எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

இந்த விருட்சத்தின் விதைகள்
சோலைகளை உருவாக்கட்டும்-அதில்
பறவைகளும் மிருகங்கங்களும்
பசியாறிப் போகட்டும்
மீண்டும் இச்சிறியேனின் வாழ்த்துகள்
உங்கள் பணி தொடரட்டும்

0 comments:

Post a Comment