ADS 468x60

16 November 2015

ஏற்றத்தாழ்வு

இன்று வடகிழக்கில் போரினால் மற்றும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஓரளவுக்கு மீண்டிருந்தாலும் அவர்களுடைய ஒட்டுமொத்த குடும்ப நிலை அதிகமாக கிராமப்புறங்களை அண்டிவாழுகின்ற மக்களிடையே மிக மோசமாக காணப்படுகின்றது. இவர்களது குடும்பம் பொதுவாக பெற்றோர், அவர்களுடைய தாய் தந்தை, சில சகோதரர்னகள் மற்றும் பிள்ளைகள் அடங்கலாக 10 பேரினை கொண்ட பொிய ஒரு குடும்பமாகும். இவர்களுடைய சராசாி ஒட்டுமொத்த வருட வருமானம் சுமாா் ரூபாய் 30000/= -50000/= வரையானதாகவும், சிலர் தானிய உற்பத்தியினை தாங்களே செய்து உண்ணுகின்றவர்களாகவும் காணப்படுகின்றனா்.
இந்த மக்கள் மிகச்சிறிய வீட்டினுள் மிகக் கஸ்ட்டத்தின் மத்தியில் இவர்கள் அனைவரும் ஒன்றாககவே குடும்பம் நடாத்துகின்றனர். இக்குடும்பத்தில் இருந்து மிகக்குறைந்த அளவானவர்களே கல்வியை தொடர ஏனையவர்கள் தொழிலில் ஈடுபடவேண்டிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவா்களால் ஒரு நாளில் இரண்டு அல்லது ஒரு தடவைதான் சமைத்த உணவினை உண்ண கூடியதாக இருக்கிறது. குறிப்பாக இக்குடும்பங்களது வீட்டில் தூய்மையான குடிநீர், மின்சார வசதிகள் மற்றும் மலசலகூட வசதிகள் என்பன பூரணப்படுத்தாத நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனா்.
மிகக்கொடிய வெயிலில் வாடி கடினமாக வேலை செய்யும் இவர்கள் எப்பொழுதும் அசௌகாியங்களுக்கு ஆளாகுகின்றனா். இதனால் சிறந்த வாழ்வாதாரம், வாழ்க்கை என்பன முயல்கொம்பாகவேஇருந்து வருகின்றது.
அண்மைய தகவலின் படி இலங்கையில் 20% விகிதத்தினர் 54.1% விகித வருமானத்தினை நுகர வறிய 20 விகிதத்தினர் வெறும் 4.5% விகிதத்தினை மாத்திரம் அனுபவிக்கின்றனர். பொருளாதார வளர்ச்சி என்னவோ இருந்துவந்தாலும் அது வசதிபடைத்தவர்க்கே சாதகமாக அமைகின்றது அத்துடன் இந்த தேசத்தின் சந்தை அவ்வாறுதான் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே போடுகின்ற திட்டங்கள், பாதீடுகள் அனைத்தும் மேலிட வர்க்கத்தின் மேலீட்டுக்குத்தானே தவிர ஒட்டுமொத்த மக்களின் முன்னேற்றத்துக்குமா? என்கின்ற கேள்வியை என் மனதில் எழச் செய்கின்றது. இவை சீர்செய்யப்படக்கூடிய மக்களுக்கான பாதீட்டை கொண்டுவர மக்களிடையே இவற்றை தெழிவுபடுத்தி அவர்களுடைய உழைப்பை அவர்களே அனுபவிக்கும் யுகத்தை இவர்கள் தெரிவு செய்த அரசியல் மேதைகள் செய்வார்களா என்பது தான் எனது ஐயம்.

0 comments:

Post a Comment