ADS 468x60

25 November 2015

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- நான்
அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்...
ஆசையோடே அசைகள் போட்டு
கண்கள் ரெண்டும் மூடிப்பார்க்கிறேன்

வயலோடே வாழ்ந்தோம்
செயலோடே சேர்ந்தோம்
வெயில்லை மழையில்லை
உழைப்பால் உயர்தோம்
ஒன்று சேர்ந்தோம் அந்தக்காலம்
நின்று போச்சே இந்தக்காலம்
கதிர் அறுத்து புதிர்பொங்கி
களவெட்டியில் பந்தல் போட்ட

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- நான்
அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்...
ஆசையோடே அசைகள் போட்டு
கண்கள் ரெண்டும் மூடிப்பார்க்கிறேன்

போடியார்கள் எங்கே
வாடியார்கள் எங்கே
இருப்பெல்லாம் கறுப்பாச்சி
இன்பமெல்லாம் போச்சி
முத்திப்போன கதிரப்போல நீ
முகம்குனிந்து சோறுகொண்டு
மத்தியானத்தில் வருவாய்-அத
மண்ணக்க மணக்க தருவாயே!

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- நான்
அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்...
ஆசையோடே அசைகள் போட்டு
கண்கள் ரெண்டும் மூடிப்பார்க்கிறேன்

0 comments:

Post a Comment