ADS 468x60

07 November 2015

இயற்கையை அரனாக்குவோம்


இன்று ஒரு வருடத்துக்கு மேலாக பாதுகாத்து வளர்தெடுத்த எமது மரக்கன்றுகளை பார்வையிடக்கிடைத்தது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அது இயற்கை மூடிய இன்ப அரன். கிட்டத்தட்ட 1400 சிறிய நடுத்தர பெரிய குளங்கள் பதியப்பட்டு இருந்துள்ளதாகவும் அதில் இன்று வெறும் நானூறு குளங்களை மாத்திரம் கண்டுபிடித்துள்ளதாகவும் ஏனைய குளங்கள் இருந்த இடமும் தெரியாமல் அழித்து விட்டார்கள் என பேச வல்ல அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.
இந்தக் குளங்களை பாதுகாக்க என அன்று மரங்களை குளக்கட்டுகளில் நட்டு பராமரித்திருந்தனர். அவை கட்டுகளை மண்ணரிப்பில் இருந்து பாதுகாக்கவும் ஊருக்கு அழகினைத் தருவதோடு நல்ல குளிர்சிசியையும் நிழலையும் தந்து மக்களை பயனடைய வைத்து வந்தது. விவசாயக்குழுக்கள், சங்கங்கள் கழகங்கள் ஆலய பரிபாலனங்கள் என்கின்ற பெயரில் அதிகாரிகளின் ஆதரவுடன் எல்லாவற்றையும் அழித்து விட்டனர். இவர்கள் சமுதாய உணர்வோடு வாழாது சுயநல நோக்கத்துக்காக வாழுகின்றவர்கள். எக்கினாலும் விக்கினாலும் ஏசும் இந்த உலகம் இந்தக் கண்மூடித்தனமான அழிச்சாட்டியங்களை கைகட்டிப்பார்க்கும் பழக்கம் எமது நாட்டை என்றோ ஒரு நாள் பாலை வனமாக்கும்.

இந்த நிலையில் எமது ஊரில் சிறியதாயினும் அதை பெரியதாக மதித்து பெருமைப்படும் மரநடுகைக் கைங்கரியத்தினை திருவாளர் கமலநாதன் அவர்களின் பண உதவியுடன் செய்து பாலைகளையெல்லாம் சோலையாக்கும் ஒரு நாளுக்கான அடித்தளமாக இந்த செயலை நான் நோக்குகின்றேன். 

மாலைக்காக அரசியல் செய்யாமல் வேலைக்காக களமிறங்கத் தயாராக உள்ள அரசியல்வாதிகளிடம் நான் ஒரு சவாலை விடுகின்றேன். அது கடைசி 10000 பனங் கன்றுகளை தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதேசத்தில் நடுவது. எமது எதிர்கால பொருளாதாரம் சுயமுயற்சியாளர்களை வைத்து நகர்த்தப்படுவதை இன்றே கருத்தில் கொண்டு அவற்றை உருவாக்கி வேலையின்மை என்கின்ற சொல்லை எமது மாவட்ட மக்களிடையே இருந்து நீக்க இதுபோன்ற செயற்பாடுகளை திட்டமிட்டு செயற்ப்பட அனைவரையும் அழைக்கிறேன். அதற்கு எனது தொண்டாண்மையுடனான ஆதரவு என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
'படித்தவன் புத்திசாலியாகிறான் என்ற சொன்னால் மட்டும் போதாது. தன்னை வாழவைத்துக் கொள்கிற தகுதியுள்ளவனாக வெளியே வருகிறான்; தொழில் பயின்றவனாக வருகிறான் என்கிற உரிமை – தகுதி இருக்க வேண்டும்'

0 comments:

Post a Comment