ADS 468x60

28 December 2015

மட்டு மண்ணே வணக்கம்

காடு மலை மேடு எல்லாம்
கண்ட படி நடந்தேன்
நாடு விட்டு நாடு போயி
நாலு பேரை அறிந்தேன்
கூடு விட்டு கூடு பாய்ந்து
உன்னைத் தேடும் மனமே

வளம் பொங்கும் வயலினில் கால்பட அலைந்தேன்
கண்கள் உன்னைத் தேடுதே
கலை மீன்கள் பாடுதே
ஆசை என்னை இழுக்கிறதே
அடிக்கடி ஐம்புலன் நினைக்கிறதே
உலகில் உன்போல்
உறவே இல்லை
ஆதலால் உன்மடி தேடினேன்!

மட்டு மண்ணே வணக்கம்
மட்டு மண்ணே வணக்கம்
மட்டு மண்ணே வணக்கம்
மட்டு மண்ணே வணக்கம்
வந்தே பாரடா .... வந்தே பாரடா- நீ
வந்தே பாரடா

கூத்தில்கூட வீரம் ஊட்டி
கலைகளை வளர்த்தாய்
விபுலா நந்தன் பிறந்து
முத்தமிழ் விதைத்தாய்
வயல் வட்டை வளம்கொஞ்ச
வாவிகள் கொடுத்தாய்
பாலும் தேனும் மலிந்து
பஞ்சம் நீக்கினாயே
நீ வந்தோரை அணைத்தாய்-- வந்தோரை அணைத்தாய்
களம் தந்தென்னை வளர்த்தாய்!
தமிழ் பண்பாடு விதைத்தாய்
சலங்கை கொஞ்சும் கடலளித்தாய்
என்றும் நீயே
எங்கள் தாயே
நெஞ்சமும் இன்பமாய் போகுதே

மட்டு மண்ணே வணக்கம்
மட்டு மண்ணே வணக்கம்
மட்டு மண்ணே வணக்கம்
மட்டு மண்ணே வணக்கம்
வந்தே பாரடா .... வந்தே பாரடா- நீ
வந்தே பாரடா!!

மண்ணே உந்தன் பெருமைகள் சொல்ல
மீன்மகள் கூடப் பாடுவாள்
தலைமைகள் எல்லாம் படித்தோர் கையில்
நடைமுறை மாற்றி ஆளுவோம்
தாய் தந்த உணர்வில் பிறந்தவர் நாம்
அன்பு தமிழினம் உயர்ந்திட உரமாவோம்
தேனகம் போல் ஒரு தேசமில்லை
மட்டு மண் எங்களின் சுவாசமே

மட்டு மண்ணே வணக்கம்
மட்டு மண்ணே வணக்கம்
மட்டு மண்ணே வணக்கம்
மட்டு மண்ணே வணக்கம்
வந்தே பாரடா .... வந்தே பாரடா- நீ
வந்தே பாரடா

0 comments:

Post a Comment