ADS 468x60

27 February 2016

யார் மன்னன்?


உணவை ஊருவாக்கி
வளத்தை வருவாயாக்கி
களத்தில் காத்து நிற்ப்பவன்
நீயும் ஒரு குறுநில மன்னன்
சேறு பறக்கும் நிலத்தில்
ஏரு பூட்டி விதைப்பவன்
ஆறு தரும் நீரைவைத்து
அறுவடை பண்ணுபவன்
வேறு வளம் சேர்பவர்க்கு
சோறு கொடுத்து உதவுபவன்
நெற்றி வியர்வை சிந்தி
நிலம் விளைப்பவன்
படைப்பதால் நீயும் ஒரு பிரம்மா
அவன் உலகைப் படைக்கிறான்
நீ உணவைப் படைக்கிறாய்
நீ விளைத்தால்தான் எமக்கு சோறு
நீ இழக்கும் போது உனக்கு யாரு

கொம்புச் சந்தியானே!

தேத்தா மரத்து ஓரத்தில
தீர்த்தக் குளத்து ஈரத்தில
கொம்பு முறித்து ஆடினோமே வெள்ளையப்பா- அங்கே
கொம்புச் சந்தியான் அருள்தான் கொள்ளையப்பா

நம்பிவரும் மனிதருக்கு தும்பிக்கையான் துணையிருப்பான்!
நாடிவரும் கயவருக்கும் நல்லருளை புரிவானே!
வந்தவங்க வரம் குறைந்து போனதில்லே!
எங்க ஊரினிலே கலையின் பேரினிலே
எல்லாமே ஆனைமுகன் அருள் ஒளியின் ஊற்றம்மா!
ஏங்கித் தவிக்கும் மனதை இங்கே ஆற்றம்மா!

மீன்பாடும் தேனாட்டில் தேனூரில் குடியமர்ந்தாய்
நான்பாட நாவிருந்து நல்லருளை நீதந்தாய்!
அற்புதங்கள் நாளுக்கு நாள் செய்தாயே!
வில்லுக் குளக்கரையில் வில்வ மரத்தடியில்
ஆனாகப் பட்டவரெல்லாம் அறிவைப்பெற்று போனாங்க
பாவம் நீங்கிப் பக்குவமாய் ஆனாங்க-
---------------------------------------------------------------------
//இங்கு அழகுற அமர்ந்து எமக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கும் கொம்புச் சந்தியான் அப்பனுக்கு எனக்கு சமர்ப்பணம்//

கைத் தொழிலை கையில் எடு


கைத் தொழிலை கையில் எடுத்து
காசி நிறைய பையில் நிரப்பி
வருமானத்தை கூட்ட வேண்டும் சின்னத்தம்பி- நீயும்
திறணை வளர்க்கப் பாடுபடனும் செல்லத்தம்பி
படிப்பு உனக்கு பத்தலெனா
பார்த்த தொழிலும் கிட்டலன்னா
சுயமா வேல தொடங்க வேணும் சின்னத்தம்பி- நீயும்
சொந்தக் காலில் நிற்கப் பழகு செல்லத்தம்பி
உலகம் போற போக்கப் பாரு
உழைகலன்னா கேட்கும் ஊரு
களவு எடுத்து புழைக்கணுமா சின்னத்தம்பி- இங்க
கடவுள் கூட ஒழைக்கிறாண்டா செல்லத்தம்பி
நீயும் ஒரு மனித வளம்
நிறைய இருக்கு வளரக் களம்
கூலி வேல பார்த்த போதும் சின்னத்தம்பி -இன்னும்
கூட நாலு வேல தரணும் செல்லத்தம்பி