ADS 468x60

11 March 2016

இது மனிதர்களுக்கு, எருமைகளுக்கு அல்ல

படிப்பு பட்டம் எல்லாருக்கும் வாய்க்கிறது இல்ல, அது வாய்த்தவங்க எல்லாருக்கும் பயன்படுறதும் இல்ல. என்னங்க நான் பாத்த பலபேரு எப்படி படிச்சாங்க? யாரு படிக்க உதவினாங்க?  எதுக்கு படிச்சம்? என்ற கேள்விகள தங்களுக்கு தாங்களே கேட்டுகொள்றததே இல்ல. இவங்க தங்களுக்கு மண்டியிடணும், அவங்க சொல்றத கேட்கணும் என்ற வர்க்கத்த எதிர்பார்க்கிறாங்க அதனால அவங்களுக்கு இயல்பாகவே இருக்கும் அழகு, மதிப்பு, பெருந்தன்மை எல்லாத்தையும் அவங்களுக்கு தெரியாமலேயே படிப்படியா எழந்திடுறாங்க. 

அறிவும் திறனும் பதவியும் வந்து சேரும்போது தலை கனக்கக் கூடாதுங்க. நெல்லப் பாருங்க கதிராக வெளிவரும்போது உள்ள ஒண்ணுமே இராது ஆனா ஆது நீண்டு வளர்ந்திருக்கும். அதன்பிறகு அதில பால் ஏறி பின் காயாகி முத்தி பழுக்கும்போது பாருங்க தலை குனிந்து நெல்லாக பயனை மட்டும் வாரித்தரும். அப்படிப்பட்ட மனிதர்கள இந்த கலியுகத்தில காணுறது மிக மிக அரிதுங்க. இன்னும் ஒன்று நம்ம மேல மற்றவங்க வைத்திருக்கிற அன்ப தராதரம் பார்த்து கணிப்பிடக்கூடாதுங்க அது திரும்பவும் நமக்கு மேல உள்ளவர்களால நாம வைத்திருக்கும் அன்பை புறக்கணிக்க வைக்கும் இல்லையா. //தலைக்கனம் இல்லாது வாழுவோம்//

0 comments:

Post a Comment