ADS 468x60

24 March 2016

யார் சொந்தக்காரன்?


கொம்புச்சந்திக் கோயில்- எங்க குடியிருப்பு வாயில் இங்கு எத்தனைபேர் சொந்தக்காரன் எத்தனைபேர் உறவுக்காரன் சொல்லுகிறேன்.......

உடைக்கவென ஊற்றெடுத்து –ஆலயம் படைக்கவென ஏற்றம்கொண்டோர், கட்டவைத்த வீட்டுக்கல்லை ஒட்டுமொத்தமாய் கொடுத்தவர்கள்! மண்ணையெல்லாம் கொண்டுபோய் மனமுவந்து கொடுத்தவர்கள், உண்ண உணவு கொடுத்து உள்ளிருந்து உதவிசெய்தோர், வர்ணம் பூசவென லெட்சமாய் வாரிவாரிக் கொடுத்தவர்கள், வேலைக்கு போகுமுன்பே வெண்சாந்து குழைத்தவர்கள், தேனீரும் சிற்றூண்டியும் தேவையறிந்து கொடுத்தவர்கள் இவர்கள் ஆலயத்தின் உரித்துடையவர்கள்.

 வாசலில் உயர்ந்த மரத்தை வரும்போது அறுத்துக்கொடுத்தோர், ஆசையில் சேர்த்த செம்பையெல்லாம் ஓசைமணி செய்ய ஒப்படைத்தோர், வெய்யிலில் கருகி பனியில் உருகி வெளிநாட்டு வேதனங்களை வேளையறிந்து கொடுத்தவர்கள், ஊரூராய் சென்று ஊக்க நிதி திரட்டியோர், அல்லும் பகலும் நின்று கல்லும் மண்ணும் சுமந்தவர்கள், பாடல்கள் படங்கள் செய்து- உலகில் பறை சாற்றியவர்கள் வரி என்று உணராமல் வரும்போதெல்லாம் கொடுத்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து விக்ரகங்கள் தருவித்தோர் இவர்கள் ஆலயத்தின் சொந்தக்காரர்கள்.

பேசாமல் இருந்துகொண்டே பெரிதாய் பணங்கொடுத்தோர், அரை நேர உணவு உண்டு அனைத்தையும் கொடுத்வர்கள், அயலூரானாலும் அனுசரனை தந்தவர்கள், ஒலிபெருக்கி எடுத்து உன்மை நிலை விளம்பியோர், எலிவாகனன் மீது என்றும் மறவா பக்திகொண்டோர், குறைந்த விலையில் கோயில் கட்ட கூடிய பொருள் கொடுத்தோர், நிறைந்த பெருமானுக்கு நீண்டுயர மனத்தோடு அடிக்கல் இட்டோர், சட்டச் சிக்கல்களை சடுதியில் முடித்துக் கொடுத்தோர்- அபிவிருத்தி திட்டங்கள் வரும்போது தேனூருக்கு உதவியவர்கள் இவர்கள் உரிமைக்காரர்கள்.

கம்பு சுமந்தவர்கள் கலை செம்பில் படைத்தவர்கள் சிற்ப்பம் செதுக்கியவர் சிலை நுட்பம் விளக்கியவர், ஓவியங்கள் வரைந்து காவியம் படைத்தவர்கள், மின்சார உதவி செய்து மின்னொளி பாச்சியோர், ஏற்றி இறக்கவென இயந்திரங்களை கொடுத்தோர், இலகுவாக்க சிலவற்றை எடுத்துரைத்து தீர்த்தோர், உலகமே தடுத்தபோதும் உலங்கு வானூர்தி வருவித்தோர், எங்கிருந்தபோதும் வந்து ஏலுமான உதவி செய்தோர், இந்த ஆலயம் உயர மனிதர்கள்  மாத்திரமல்ல மாடும் வயலில் உழைத்தன இவங்கபோல இன்னும் இருக்கிறார்கள் பங்கு கேட்க தகுதியுடை சொந்தக்கரார்கள் பரவி நிதம் தொழும் உரிமைக்காரர்கள். 

நன்றி சொல்ல இருக்கு இன்னும் ஆயிரம் -அதற்கு நான் எழுத வேண்டும் தொண்டர் பாயிரம்

இவர்கள் தொண்டு வளம்பெறட்டும்
இவர்கள் குடும்பம் ஆசீர்பெறட்டும்
இவர்கள் எதிர்காலம் சுபீட்சமாகட்டும்
இவர்களது பக்தி சிறக்கட்டும்
என இறைவனை இறைஞ்சிகிறேன்

0 comments:

Post a Comment