ADS 468x60

13 March 2016

நண்பர்களுக்கு பெரிய மதிப்பு இருக்கும்!

சில சமயம் சிலரைப் பார்த்தால் ஆத்திரம் வரும் சிலரைப்பார்த்தால் பரிதாபம் வரும், எனக்கு யாரைப்பார்த்தும் ஆத்திரம் வருவதில்லை, அப்படி வந்தாலும் யாரையும் நோகடிப்பதில்லை. உங்களுக்கு தெரியும், சிலர் காரணம் இல்லாமலேயே மற்றவங்க மேல பழியப்போடுவாங்க, அதுக்கு பயந்து எதிர்க தெரியலன்னா போச்சி, சங்குதான்!! மல்டி வரல்போல தொடந்து அடிப்பாங்க. ம்ம்ம்... ஒரு காலத்தில செய்யாத குற்றங்களுக்காய் சரசரப்புக்கெல்லாம் பயந்து நடுங்கி இருக்கிறன் அது ஒரு காலம். அப்போ எல்லாம் இந்த 'ஆறிலும் சாவு நூறிலும் சாவு' இதெல்லாம் ஞாபகம் வந்ததில்ல. 'தருமம் தலைகாக்கும்' அது மட்டும் இருந்திச்சி.
ஏன் லைப்ல எப்போதும் நண்பர்களுக்கு பெரிய மதிப்பு இருக்கும். அவங்க யாரா இருந்தாலும் கெட்ட வார்தயால திட்ட மாட்டன். ஆனா என்னிட்ட நண்பர்களாய் நடித்து சிலர் அடார் வைத்த சம்பவங்களும் இருக்கு, 'படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்' மாதிரி அத நான் செய்தால் கவலவரும் ஆனா அவங்க செய்யுறாங்க நாம ஏன்பா கவலப்படனும்? அப்டின்னு பேசாமா போயிடுவன். நல்ல நண்பர்கள் உன்மையானவர்களாக இருப்பாங்க அவங்கட்டத்தான் சில இரகசியங்களையும் சொல்லி வப்பாங்க, ஆனா சில சமயம் அவங்க எமக்கு எதிரியானாலும் கூட சொல்ற இரகசியத்தயும் பத்திரமா பாதுகாப்பாங்க. அது தான் நட்புக்கு கொடுக்கிற மரியாத. ஒ‌‌‌‌வ்வொரு ம‌னிதரு‌க்கு‌ம் அவருடைய வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ம்பகமான ஆலோசக‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர். மு‌க்‌கியமாக ந‌ண்ப‌ர்க‌ள் தேவை‌ப்படு‌கிறா‌ர்க‌ள். ஒருவருடைய ‌சி‌ந்தனைகளையு‌ம், குண‌ங்களையு‌ம் ப‌ட்டை‌ ‌தீ‌ட்ட, உத‌வி செ‌ய்ய அவரை ந‌ன்கு உண‌ர்‌ந்த ஒரு ந‌ண்ப‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர். நான் அவா்கள் யாராக இருப்பினும் இழக்க விரும்புவதுல்லை. 'முகமே தெரியாத முகநூல் நண்பர்கள் ' ' வாய்ஸ் கேட்காத வாட்சப்ப் நண்பர்கள் ' ' ஹைட்டு தெரியாத ஹங்கௌட் நண்பர்கள் ' ' இப்படி இருக்கும் இந்த உலகத்துல ' நல்ல உள்ளங்கள் எப்பொழுதும் என்னுடனே!

0 comments:

Post a Comment