ADS 468x60

27 April 2016

பயனுள்ள கல்விதானா இவைகள்?

எம்முன்னோா் கல்வி பற்றி பல விடயங்களை கூறியுள்ளனா். ‘அனைத்து அறிவும், புலமையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே புதைந்துள்ளது‘ என்று ரவீந்திரநாத் தாகூர் கூறுகிறார். மனிதனுக்குள்ள ஆற்றலை வெளிக்கொணர்வது இந்திய கல்வி முறையாக இருந்தது. ஆனால், வெளியில் இருப்பவற்றை மனித மனதிற்குள் ஏற்றுவதுதான் பிரிட்டிஷ் கல்வி முறை. அது ஊக்கம் அளிக்கும் கல்வி முறையல்ல; தகவல் அளிப்பது மட்டுமே கல்வியாக உள்ளது. இதுதான் கல்விமுறையில், மனிதனின் புரிதலைப் பற்றிய அடிப்படை வேறுபாடு.

படித்த வாரிசுகளை எமது சமுகம் வன்முறையாளா்களாக பாா்க்க விரும்புவதில்லை.

இன்றய காலத்தில் கல்வி மனிதனை அழிக்கவும் அதுபோல் பாதுகாக்கவும் இருக்கின்ற ஒரு கருவியாகிவிட்டது. அதனால் கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் ‎கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது கல்வியைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய அளவில் ஒவ்வொரு கல்விக்குமென ‎தனித் தனியான மதிப்பீடுகளை அரசாங்கமும் நிர்ணயித்துள்ளது. 

அது போன்றே காசுக்காக பட்டங்கள் ‎வழங்கவும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் தோன்றியுள்ளன. இவ்வாறு அரசும், தனியார் நிறுவனங்களும் ‎கல்வியைத் தாராளமயமாக்கி விட்டதால் கற்றவர்களின் எண்ணிக்கையும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் ‎பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன.

18 April 2016

இன்னும் எழுச்சியடைவேன்!


என் எழுத்து
சில சமயம் விழும்
பல சமயம் எழும் - அது
ஒரு கிழக்குச் சூரியன்!
நான் கீதை சொல்லும் கண்ணன் இல்லை- தழிழ்
போதை உண்ணும் மன்னன்!
நான்
நரசிம்மன் கிழித்த இரணியனல்ல!
அந்தியில் பட்டுப் போக,
நரம்பையும் மீட்டும் இராவணன்!
நான்
மாடுகள் மேய்க்கும் மாதவனல்ல- உங்கள்
வீடுகளில் உதிக்கும் ஆதவன்!

நான் வேறமாதிரி!

நான் ஒன்றும் சுத்தமாய் இல்லை
ஆனால் நலம் வேண்டும் அன்பர்க்கு
நல்லதோர் பிள்ளை
பாரம் பரியமாய்ப் போனா
இன்று வேலையற்றவன் போல
பாக்குது வீணா

கைகட்டி வாழ்பவன் நானா
மூடர் கதை கேட்டு மூர்கமாய்
எழுகிதென் பேனா
இடர்பட்டு கிடப்போரின் ஆளு
என்னை எள்ளினால் தலை கொய்யும்
கூரான வாளு

யாரும் இல்லை என்னை அடக்க
வந்தால் வேறு முகம் கொண்டு
ஏறுவேன் முடக்க
பட்டி தொட்டி எல்லாம் திரிவேன்
அவர்கள் துன்பத்தை தலைக்கொண்டு
பழுதூக்கி முறிவேன்!

08 April 2016

ஒரு மாற்றம்ஒரு மாற்றம்
தடு மாற்றம்
உண்ண முடியாமல் ஒரு கணம்
உறங்க முடியாமல் மறுகணம்
தீக்குள் இருக்கிறேன் சுடவில்லை
மழையில் நிக்கிறேன் படவில்லை

இல்லாததை தருகிறாள்
இல்லாதபோதும் வருகிறாள்
என்னமா சிரிக்கிறாள்
ஏக்கத்தை எரிக்கிறாள்

சொல்லவும் தெரியவில்லை
சொன்னாலும் புரியவில்லை

ஒற்றை நாளில் வந்தாள்
உள்ளத்தை அள்ளி சென்றாள்
ஒளிய நினைக்கிறேன் தொலைந்து
இருந்தும் அவளைத் தேடுகிறேன் வலிந்து

03 April 2016

நீ மட்டும் தூரத்தில்

வெண்ணிலவே உன்னை தேடுது மேகம் -
உன்னைஎண்ணி விண்ணில் கூடுது மோகம்
பனித்துளி உறங்க பருவங்கள் வளர்த்தாய்
நான் அணைக்கும் நல்லநாள்; எது

நீ மட்டும் தூரத்தில்
நீர் சொட்டும் ஓரத்தில்
ராத்திரியும் சுமையாச்சே
மலர்களும் ஏங்குது
மனங்களும் தூங்குது
மழைத் துளியில் மறைந்தாயே
கோபத்தை விடு நீ
பாவம் உன் அழகு
நீ உதித்தால் மட்டும் நான் இருப்பேன்!
வெண்ணிலவே உன்னை தேடுது மேகம் -
உன்னைஎண்ணி விண்ணில் கூடுது மோகம்!!