ADS 468x60

01 July 2016

சிறுவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கவனமாக கையாளப்பட வேண்டும்!

சிறுவர்கள் எமது எதிர்காலத்தின் நம்பிக்கைச் சொத்தாகும். இதனை பாதுகாப்பதிலேயே ஒரு நாட்டின் அபிவிருத்தி தங்கியிருக்கின்றது.


இன்றைய சிறுவர்களே நாளைய தலை வர்கள் என்பதற்கு இலக்கணமாக பல வளர்முக மேற்கத்தய நாடுகளுக்கு உரித்தான சிறுவர்கள் மேதைகளாகவும், ஆய்வாளர்களாகவும் உருவாக்கப்பட்டு, அவர்கள்தான் கணிசமான அளவு கீழைத்தேய நாடுகளை வழிடத்தும் துர்ப் பாக்கிய நிலையில் இருப்பது வருத் தத்திற்கும் திருத்தத்திற்கும் உரியதாகும்.
சிறுவர்கள் சார்பாக இன்று உலகளாவிய ரீதியில் பெரும் முக்கியத்துவம் செலுத்த ப்பட்டு வருவது அறியக்கிடக்கின்றது.
அவர்களுக்கென்று புதிய சட்டங்கள், உரிமைகள் மற்றும் உரித்துடைமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும் இவ்விடயம் சரியாக மக்களை சென்ற டையவில்லை என்பதையே மேலை த்தேய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது தரவுகள் வெளிக்காட்டுகின்றன.

சிறுவர்களுக்கான ஒளிமயமான எதிர் காலத்தினை உருவாக்குவதற்கும் அதற் கான திட்டங்களை வரைவதற்குமான நேரம் இப்பொழுது கனிந்துள்ளது என் பதனை நாம் அனைவரும் உணர வேண்டியுள்ளது. ஏனெனில், பிள்ளைகள் எங்களது எதிர்காலம். அத்துடன் அவர் கள் தேடமுடியாத அரிய சொத்துக்களு மாகும்.

இலங்கையைப் பொறுத்தவரை சிறுவர் கள் சம்பந்தமான வளர்ச்சிக்கான அணுகு முறையில் முன்னேற்றம் கொண்டிருப் பதையிட்டு ஏனைய வளர்முக நாடு களுடன் ஒப்பிடும் பொழுது பெருமை ப்பட வேண்டியிருக்கிறது.

100 வீதமும் ஆரம்பக் கல்வியினை பெறும் வாய்ப்பு இலங்கைச் சிறுவர் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவை யெல்லாம் நலன்புரித் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டு வருவதனை நாங்கள் சுட்டிக்காட்டலாம். இதனை இலவசக் கல்வி, இலவச சுகாதார வசதிகள் என்பன உறுதிப்படுத்தி நிற்கின்றன.

சர்வதேச ரீதியில் பார்க்கும்பொழுது, கிட்டத்தட்ட 60,000 மாணவர்கள் ஆரம் பக் காலங்களிலேயே வறுமையின் நிமி த்தம் இடைவிலகி விடுகின்றனர். போசா க்கு அவர்களது கல்வியில் செல்வாக்குச் செலுத்தும் மற்றுமொரு காரணியாகும். மலையக மக்களிடையே காணப்படும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் என்பன காரணமாக பல மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு இடை விலக நேரிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது.

இன்னொரு விடயத்தினை நாங்கள் அவதானிப்போமானால் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் வீட்டிலும் சரி, பாடசாலையிலும் சரி இடம்பெற்று வரு கின்றது. ஆனால் அவை அனேகமாக தடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவைகளில் அனேகமானவை ஆசிரியர் களாலும், பெற்றோர்களாலும் மறைக்கப் பட்டே வருகின்றன.

‘சிறுவர் உரிமைகள்’ எனும் துறைச் சொல் வழக்கு இலங்கைக்குப் புதிதாக இருப்பினும் குழந்தைகளின் பாதுகாப்பில் இலங்கை நீண்டதொரு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
நாட்டின் வழமையான சட்டங்கள் பாதுகாவல், மகவேற்பு ஆதரத்துக்கான கடப்பாடு ஆகிய ஏறுபாடுகள் மூலமாக குழந்தைகள் பாது காப்புக்கு ஏற்பிசைவு அளித்தன.

ஒல்லாந்தர் காலத்தில் அறிமுகம் செய்யப் பட்டதும், மீந்திருக்கும் பொதுச் சட்டமாக இன்னும் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வருவதுமான ‘உரோமானிய ஒல்லாந்துச் சட்டத்தில்’, பராயத்துக்கு வராத பிள்ளைகள் தொடர்பாக அரசுக்கும் நீதிமன்றங்களுக்கும் ஒரு பாதுகாப்புப் பங்கினை வகிக்க வகை செய்யும் ‘உயர் பாதுகாவலர்’ எனும் கருத்துப் படிவம் காணப்படுகின்றது.

பிரித்தானியர் காலத்தில் சுகாதாரம், கல்வி, இளம்பராயத்தினர் நீதிநெறி பற்றியும், அனாதைகள் என்ற காரணத் தினாலோ, அல்லது தகுந்த பெற்றோர் பராமரிப்பை இழந்திருந்த குழந்தைகள் பற்றியும் செயல் தொடர்புகொள்ளும் நடைமுறைச் சட்டவாக்கமொன்று புகுத்த ப்பட்டது.

மிக அண்மைக் காலத்தில், சிறுவர் களதும், இளைஞர்களதும் நலன்கள் மிக விசேடமாகக் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. உரிமைகள் மனுக்குலம் சுதந்திரமமா கவும் கெளரவமாகவும் வாழ்வதற்கு வரையறுக்கப்பட்டவையே ஆகும். குறிப்பாக உலகில் பல வழிகளிலும் இலகுவாகப் பாதிக்கப்படுகின்ற வர்க்கம் என்று சொன்னால் அது சிறுவர்கள், பெண்கள் என்றே சொல்லப்படுகின்றது.

அதன் அடிப்படையில் சர்வதேச ரீதியில் 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட சிறுவர் உரிமைப் பட்டயம் முதன்மை பெறுகின்றது. இதனை ஒட்டியே இலங்கை உட்பட்ட பல்வேறு உள்நாட்டுச் சட்டங்களும் சிறுவர்களின் உயரிய நலனையே முதன்மைப்படுத்தி சிறுவர் பாதுகாப்புச் சட்டங்களை ஆக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சமவாயம் 1989 ஆம் ஆண்டு சிறுவர்கள் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக சர்வதேசிய, தேசிய மட்டத்தில் மிக முக்கியம் வாய்ந்த சட்டமூலமாகக் குறிப்பிடப்படுகின்றது.

சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சமவாயம் எல்லாப் பிள்ளை களும் பின்வரும் நான்கு பிரிவுகளில் வரும் உரிமைகளுக்கு உரித்துடைய வர்கள்.
குறிப்பாக ஒரு நாட்டில் உள்ள குழந் தைகள் உயிர்வாழ்வதற்காக அந்நாட்டு அரசாங்கம் அவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள், இருப்பிட வசதிகள், சேவைகள், உணவு, குடிநீர் வசதி என்பன போன்ற குறிப்பிடத்தக்க உரி மைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொருவரதும் தனித்திறமைகளுக்கு அமைவாக அனைத்துச் சிறுவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவது, கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு மற்றும் கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரி மையை வழங்குதல் என்பனவற்றை இது உள்ளடக்குகின்றது.

உடல் உள ரீதியில் ஊனமுற்ற சிறுவர்கள், அநாதைகள், பெற்றோரை விட்டுப் பிரிந்த சிறுவர்கள் மற்றும் சிறு வர் தொழிலாளர்கள் போன்றோரின் பாதுகாப்பினையும், பாலியல் ரீதியான சுரண்டலுக்கு இலக்கான சிறுவர்களது பாதுகாப்பினையும் இது குறிக்கின்றது.
பங்குபற்றுதல் என்பது பிள்ளைகள், யுவதிகள் மற்றும் இளைஞர்கள் என் போர்;
* சுயமாகச் சிந்தித்தல்
* தம் கருத்துகளை வலுவாக வெளிப்படுத்தி, தம் அக்கறை க்குரிய விடயங்களில் பெரியவர் களை ஈடுபடச் செய்தல்.
* ஏனைய மக்களுடன் ஆக்க பூர்வமாக கூடிப் பழகுதல்.
* தம் வாழ்வு, தம் சமூகத்திலும், சமுதாயத்திலும் உள்ள மக்களின் வாழ்வு ஆகியன தொடர்பான தீர் மானங்களில் தீவிர ஈடுபாடு கொள்ளுதல்.
* ஏனைய பிள்ளைகளினது கருத் துக்கு மதிப்பளித்தல் ஆகியன அடங்குகின்றன.
1992 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமை சமவாய த்துக்கு ஏற்புடையதான ஒரு சிறுவர்கள் உரிமைச் சாசனத்தினை இலங்கை அரசு வெளியிட்டது. இதன் மூலம் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பாக தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் ஜனாதிபதியின் தெரிவிற்கு இணங்க கல்வி அமைச்சின் செயலாளர், நீதி, பாது காப்பு, சுகாதாரம் மற்றும் மகளிர் பணிகள், சமூக சேவை, திட்டமிடல், மாகாண சபைகள் என்பனவற்றைச் சேர் ந்த செயலாளர்களும் சிறுவர் உரி மைகளைப் பாதுகாக்கும் அதிகாரிகளும் நியமிக்கப்படுவர்.

இவர்கள் ஐ. நா. இன் சமவாயத்திற்கிணங்க சட்ட சீர்திருத்த ங்களை மேற்கொள்ளல், அவற்றை சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுடன் ஒப்பிட்டுக் கருத்துகளை வெளியிடல், சமவாயத்தின் சட்ட திட்டங்களை அமுல்படுத்துதல், அவற் றைக் கண்காணித்தல் என்பன இக் குழுவுக்கு உரிய பணிகளாகும்.

சிறுவர்களால் செய்யப்படுகின்ற கொலைகள், கொலை முயற்சிகள், திட்ட மிட்ட கொலைகள் போன்ற பாரிய குற்ற வியல் நடவடிக்கை தவிர்ந்த ஏனைய குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இச்சிறுவர் நீதிமன்றங்களிலேயே இடம்பெறுகின்றன.

சிறுவர், இளவயதினர் தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் போது அவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பது நீதிமன்றங்களின் நோக்கமாகும். சிறுவர் களுக்கு பொருத்தமான இடங்களில் குறிப்பிட்ட சுற்றுச் சூழலில் அப்புறப் படுத்துதல், கல்வியும் பயிற்சியும் பெறு வதற்கு வழிவகுத்தல் போன்றவற்றின் மூலம் சிறுவர் நலனைப் பேணுவதற்கு சிறுவர் நீதிமன்றங்கள் வழிவகுக்கும்.

ஏனைய குற்றவாளிகளில் இருந்து சிறுவர்கள் குற்றவாளியாக கருதப்படும் இடத்து அவர்கள் பிரத்தியேகமாகக் கையாளப்படுதல் வேண்டும். இவர்களை நீதிமன்றங்களில் நிறுத்த முன்னர் இது தொடர்பாக அப்பிரதேசத்துக்குரிய சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.

சிறுவர்கள், இளவயதினர் போன்றோரை தடுத்து வைத்து நீதிமன்றங்களுக்கு ஆஜர்படுத் துவதற்கு முன்னர், நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்கின்ற போது, அவரது உறவினர்கள் அல்லது குடும்ப அங்கத் தவர்கள் தவிர்ந்த ஏனையோருடன் தொடர்புகொள்ள அனுமதிக்கக் கூடாது.குற்றவாளி பெண் பிள்ளையாக இருக்கின்ற பட்சத்தில் பெண் பாதுகாவ லருடன் வைத்திருத்தல் வேண்டும். குறிப்பாக சிறுவர்கள் சம்பந்தமாக வழக்குகள் நடைபெறுகின்ற போது அவர்களது வழக்குச் சம்பவங்கள் பத்திரிகைகளிலோ, சஞ்சிகைகளிலோ பிரசுரிக்கப்படலாகாது.

சிறுவர்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றில் மாத்திரம் இச்சம்பவங்களை பிரசுரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் யார் எனச் சுட்டிக்காட்டும் வகையில் ஒன்றையும் பிரசுரிக்க முடியாது. சிறுவர்கள் அல்லது இளையவர்கள் குற்றம் இளைக்கின்ற போது அவர்கள் விசேடமாக நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றங்கள் வலியுறுத்துகின்றன. அவ்வாறு சிறுவர்கள் தொடர்பாக அமுல் படுத்தப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் பின்வருமாறு :-

1. பொலிஸ், நீதிமன்றம், வேறு இடங்களில் சிறுவர் இளவயதினரை ஏனைய வயது வந்த குற்றவாளிகளிடம் இருந்து பிரித்து வைத்தல்.
2. பிணை வழங்கும் சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாது காவலரின் பிணையில் விடுதலை செய் தல்.
3. பிணை வழங்க முடியாத சந்தர்ப்பங் களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களை சிறைச்சாலைக்கு அனுப்பா மல் நன்னடத்தை இல்லங்களில் அல்லது பொறுப்பானவர் ஒருவரின் பாதுகாப்பில் தடுத்து வைத்தல்.
4. வழக்கு தொடர்பான விடயங்கள் இடம்பெறுகின்ற எல்லா சந்தர்ப்பங் களிலும் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் நீதிமன்றங்களுக்கு செல்ல அனுமதியளித்தல்.
5. நீதிமன்றில் நிறுத்தப்பட்ட சிறுவருக்கு பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அதிகாரிக்கு அறிவித்தல்.
6. சிறுவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளி க்கும் போது வழக்குடன் தொடர்புடைய வர்கள் தவிர்ந்த ஏனையவர்களை நீதிமன்றில் இருந்து அகற்றுதல்.
7. சிறுவர் தொடர்பான நீதிமன்ற அறிக் கையினை பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரிப்பதனை தடைசெய்தல்.
8. சிறுவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்படுமிடத்து அதனை ஏதே னும் ஒரு விடயத்துக்கு பொருத்தமற்ற தாகக் கருதலாகாது.
9. குற்றவாளியாகக் கருதப்படும் சிறுவர்கள், இளவயதினருக்கு தண்டனை வழங்கும்போது. அவர்களுக்கு நன்மை பயக்கும் விதத்திலான தண்டனைகளை வழங்க வேண்டும்.
10. அவர்களுக்கு அளிக்கப்படும் தீர்ப்பிற் கிணங்க சிறைச்சாலைக்கு அனுப்பப் படுவோரை தடுப்புச் சட்டம் அல்லது பதிவு செய்யப்பட்ட பாடசாலைகள் அனுமதிக்கும் பாடசாலைக்கு அனு ப்புதல்.
11. குற்றத்திற்கு அபராதம் விதிக்கும் சந்தர்ப்பத்தில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அபராதத் தொகையை செலுத்தக் கூடியதாக இருத்தல்.
12. சிறுவர், இளவயதினருக்கு உடல் ரீதி யான தண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு சிறு பிரம்பினால் ஆறு அடிகள் வழங்கு வதற்கு நியமித்தல் வேண்டும்.
13. சிறுவர், இளவயதினர் தொடர்பான வழக்குகளின் போது குற்றவாளி, வழக்குத் தீர்ப்பு எனும் சொற்களுக்கு பதிலாக தவறு செய்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
14. அக்கண்டுபிடிப்பின் விளைவாக ஆணை இடப்படுகின்றது எனும் சொற் பிரயோகங்களைக் பயன்படுத்துவது.

சிறுவர் சார்பாக நடவடிக்கை எடுக்கப் படும் இடங்கள் :
* சிறுவர் நீதிமன்று,
* தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை,
* பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் மேசை,
* சிறுவர் பரிவாச திணைக்களம்.
ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் உரி மைப் பட்டயத்தினை இலங்கையில் அங்கீகரித்ததன் பின்னர் இச்சட்டங்கள் காலத்துக்கு காலம் மாற்றம் செய்யப் பட்டன.
குறிப்பாக 1995 இல் நடை முறைப்படுத்தப்பட்ட 22ம் இலக்கச் சீர்திருத்தம் உட்பட பல சீர்திருத்தங்கள் மூலம் சிறுவர்களுக்கு எதிரான குற்ற ங்கள், துஷ்பிரயோகங்கள் இவற்றைத் தடுப்பதற்கும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டனைக்கு உட்படு த்துவதற்கும் பொருத்தமான சட்டங்களும் தண்டனைச் சட்டக் கோவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சீர்திருத்தத்திற்கு உட்படு த்தப்பட்ட சட்டங்கள் உட்பட சிறுவர் உரிமைகளுடன் தொடர்புடைய தண்ட னைச் சட்டக் கோவையில் உள்ளடக் கப்பட்டுள்ள தண்டனைக்குரிய சட்டங் கள் கீழே குறிப்பிடப்படுகின்றன.
1. முறைகேடான உறவுகளில் சிறுவர் களை ஈடுபடுத்தல்.
2. பன்னிரண்டு வயதிற்கு குறைந்த ஒரு பிள்ளையை கைவிட்டு நிர்க் கதி ஆக்குதல்.
3. சிறுவர்களை இம்சைப்படுத்துதலும் சித்திரவதை செய்தலும்.
4. சிறுவர் துஷ்பிரயோகமும் கடத்த லும்.
5. பாலியல் வாரியான நடவடிக்கை களில் சிறுவர், சிறுமியரை ஈடு படுத்தல்.
6. அவர்களை பாலியல் வாரியான சுரண்டலுக்கு உட்படுத்தல்.
7. சிறுவர்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்ற நடவடிக்கைகள்
8. உறவினர் அல்லது சிறுவர்களைத் தத்தெடுப்போர் சிறுவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தல்.
9. சிறுவர்களுக்கு ஆபாச சஞ்சி கைகளை விற்பனை செய்தலும் ஆபாசப் படங்களைக் காண்பித் தலும்.
ஆகவே சிறுவர்கள் செயற்பாட்டு கணிப்பீட்டுக்கிணங்க எமது நாட்டில் உள்ள 18,639,000 மக்கள் தொகையில் 6,163,000 பேர் சிறுவர்கள் என கணிக்க ப்பட்டுள்ளது.
எமது எதிர்காலமாக உள்ள சிறுவர்களுக்கு இன்றைக்கு தேவையான வழி சமாதானமும், சாந்தியும் உள்ள புனித வழியே ஆகும்.
http://archives.thinakaran.lk/2009/10/14/_art.asp?fn=f0910144&p=1

0 comments:

Post a Comment