ADS 468x60

21 August 2016

மட்டக் களப்பின் ஓரம்

மாலை வருடும் நேரம்
மட்டக் களப்பின் ஓரம்
மெல்லச் சிவக்கும் வானம்
மேகம் கொள்ளுது நாணம்
சல சலக்கும் ஓடை
சிலு சிலுக்கும் வாடை
கல கலக்கும் காடை-இது
களிப்பு ஊட்டும் மேடை
அந்தி வெயில் சாயும்
அலையில் கயல்கள் பாயும்
பாரம் எல்லாம் தீரும்
பா புனைய சேரும்
நெடு வயல்கள் குனியும்
நெஞ்சில் இன்பம் கனியும்
கூடுசேர குருவி; பறக்கும்
குறைகளெல்லாம் மனது மறக்கும்
இது மாலை வருடும் நேரம்

0 comments:

Post a Comment