ADS 468x60

08 August 2016

உண்மையைத் தேடி!!

இதயமும், மூளையும் சரியான விகிதத்தில் இயங்கப்பெற்ற சரியான வார்ப்புக்களாக நாங்கள் இருக்கவேண்டும். நமது பிரதேச மக்களின் வறிய, பின்தங்கிய நிலை குறித்து நம்மில் ஒவ்வொருவருக்கும் அக்கறையும் கவலையும், பல நேரங்களில் கொளுந்து விட்டு எரிந்து அவை அந்த பின்னடைவுகளை குறிவைத்து நகரவேண்டும். எமது கல்வி, அனுபவம், தொடர்பாடல்கள் என்பனவற்றை முற்றாக இந்த மக்களை முன்னேற்ற பயன்படவேண்டும் என்பதில் அதிக அக்கறை உடையவா்களாய் இருப்போம்.
அதனாலே சிலர் குறைகளையாவது வெளிச்சம்போட்டுக்காட்டஇந்த சிறு ஊடகத்தை பயன்படுத்துகிறேன். எமது மக்களுக்கு இன்று தேவையான முதல் விடயம் மனமாற்றம், தைரியம், வழிகாட்டல், தொழில்பயிற்சி, அன்பு அரவணைப்பு போன்ற எல்லோராலும் கொடுக்கக்கூடிய விடயமே. அதை என் அறிவுக்கு எட்டியவரை எடுத்துணர்த்தி வருகிறேன்.
ஒரு கிராமத்துக்கு சென்று திரும்பினேன். அதில் மனதை உருக்கிய ஒரு சம்பவம். ஒரு வயது போன அம்மாவை எனது நண்பர் ஒருவர் காட்டி அழைத்துச் சென்றார், அவர் நடக்க ஒரு காலை இழந்தும், பிடிக்க ஒரு கையை இழந்தும், கடிக்க உள்ள பற்களை இழந்தும் யானையின் துவம்சத்துக்கு ஆளாகி நடைப்பிணமாய் இருந்தவரைப் பார்த்தேன்.
'என்னால் எல்லோருக்கும் தொல்லை மகனே, மல சலம் கழிக்கும் நிலையிலும் இல்லாத நிலையில் என்னை ஆண்டவன் படைத்துள்ளான். அந்த யானை என்னை சாகடித்து இருக்கலாம். யாரிடம் இதை சொல்லி அழுவது என நினைத்து கவலைப்படுவேன் நீங்க வந்து இருந்து கதைத்து எனது நிலையை அறிந்து போவது எனக்கு மிகப் பெரும் ஆறுதலை தருகிறது. உன்ன என்ட பிள்ளையா நினைத்து ஒரு உதவி கேட்டால் செய்ய முடியுமா என்று என்னிடம் கேட்டார்."
"சொல்லுங்கள் அம்மா" என்று சொல்ல. என்னால் எனது மகள் கஸ்ட்டப்படுவதை சகிக்க முடியவில்லை அவர்களும் அன்றாடம் கூலித் தொழில் செய்து பிழைப்பவள் எனக்கொரு ‪#‎வீல்செயாரு‬இருந்தா பெரிய உதவியா இருக்கும்டா மகனே! என்றார்.'
தும்பங்கேணி கொச்சிப்பாம் எனும் குடியேற்ற கிராமத்தில் வாழ்ந்துவரும் இவர்களால், இன்னொரு இடத்துக்கு சென்று வாழ முடியாத வயதாலும் வறுமையாலும் நலிவுற்ற நிலை. இப்பொழுதும் தனது கணவனும் நடக்கமுடியாத வயதை அடைந்து இருவரும் பாதுகாப்பற்ற குடிலில் வாழ்ந்துவருகின்றனா்.
"தன்னுடைய சுயநலத்தை மட்டும் கவனித்துக் கொண்டு, சுக போகத்துடன் வாழும் ஒருவனுக்கு நரகத்திலும் இடம் கிடைக்காது."விவேகானந்தரின் சிந்தனை்

0 comments:

Post a Comment