ADS 468x60

24 August 2016

மட்டக்களப்பில் சுகாதாரமும் இடை குறைந்த பிள்ளைகளின் அதிகரிப்பும்.

 பொருளாதார, அரசியல், இனம், பிரதேசம் மற்றும் சமுக அபிலாசைகள் கடந்து சுகாதாரம் சுகாதாரம் அனைத்து உயிர்களுக்குமான ஒரு அடிப்படை உரிமையாகும். ஒரு சமுகத்தின் துடிப்பானஇ உற்பத்தித்திறனுடைய மனிதர்களை கட்டியெழுப்புவதில் ஒரு மனிதனின் உடல் மற்றும் உள சுகாதாரம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் இன்றய உலகில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வறுமை குறைப்பு ஆகியவற்றில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில் இது நடுநாயகமாக இருந்து வருகின்றதுஇ WHO கூறுவதற்கமைய ஒரு மனிதனின் ஆரோக்கியமான உடல் உளம் என்பனதான் அவனது பாடசாலைக் கல்வி மற்றும் அவனது அதிகளவான உற்பத்தி திறன் உன்பனவற்றுக்கு ஊற்றுக்கண் என தெரிவித்திருப்பது எமது நாட்டின் பொருளாதாரத்தை முன்னகர்த்துவதில் சுகாதாரத்தின் மேலான கவனம் அதிகரிக்கப்படனும் எனக் கூறுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் ஆண்களைவிட பெண்கள் சுகாதாரமான வாழ்க்கை வாழ்கின்றனர் என UN அறிக்கை கூறுகின்றது

எமது மாவட்டத்தில் ஐந்து வயதிற்கு குறைந்த பிள்ளைகளிடையே அதிக இடை குறைந்த பிள்ளைகளை கொண்ட மாவட்டங்களில் முன்னிலை வகிப்பது வதுளை இது 32.8 விகிதமாக இருக்க அடுத்தபடியாக மட்டக்களப்பு மாவட்டம் 27.5 ஆக உள்ளதென என ஆய்வு தெரிவித்திருப்பது கவலைக்குரியதாகும். இது நேரடியாக அந்த மாவட்டத்தின் வறுமையை அதிகரிக்கும் என்பதற்க்கமைவாக எமது மாவட்டத்தின் வறுமையின் அளவு அதிகரித்துக் காணப்பட்டமை அனைவரும் அறிந்தது.

எனவே மக்களின் நல்ல வாழ்க்கையை ஏற்ப்படுத்த மந்த போசனையை குறைவடையச் செய்யவேண்டும். இது பிள்ளைகளின் இடையில் குறைவினை ஏற்படுத்தி அவர்களது கற்றல் செயற்ப்பாட்டினை குறைப்பதுடன் நோய்க்கு ஆட்படுத்தி அவர்களின் சுகாதார செலவினை அதிகரிக்க வைக்கின்றமையினைக் காணலாம். இது இக்குடும்பங்களின் வினைத்திறனான உற்பத்திக்கு தடைக்கல்லாக இருந்துவருவது புத்திஜீவிகள் கருத்தில் எடுக்கவேண்டியதொன்றாகும்.

  • இவற்றை இல்லாது செய்ய மக்களிடையே ஒருங்கிணைந்த தெழிவிவை விழிப்புணர்வினை அதிகரிக்கவேண்டும்
  • மாவட்டத்தின் உணவு உற்பத்தித் திறனை அதிகரிக்க விவசாயிகளை ஊக்கப்படுத்தவேண்டும்
  • அவர்களுக்கான மானிய வசதிகள்இ சந்தைவாய்புக்களை அதிகரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கரிசனை கொள்ளவேண்டும்.
  • கிராமப் புறங்களுக்கான நகரும் சுகாதார சேவைஇ நடமாடும் சுகாதார சேவையை ஒருங்கிணைந்த வகையில் அதிகரிக்க ஆட்சேபனை செய்யப்படவேண்டும்.

0 comments:

Post a Comment