ADS 468x60

09 August 2016

நான் கவிஞ்சனும் இல்லை!

கவிதை எழுதி கனகாலம்- என
கண்ணை மூடி அமர்தேன்
அடைத்த வீடு
ஆருமில்ல தனிமை
விருப்பமற்ற உணவு
வேலையில் அழுத்தம்
வீட்டுக் குறைகள்
நாட்டு நடப்புகள்!!
பந்திப பந்தியாய்
முந்தி வருகிறது! எனக்குள்!

தியாகங்களுக்குள்
திணித்துவிட்ட வருடங்களை
திரும்பிப் பார்க்க நினைக்கலாமா?
அழுத்தி வரவளைக்க எண்ணுகிறேன்
இவைகளை,
பூக்கள் குலுங்கும் வாசல்
புன்னகைக்கும் தோழி
ஓடி உழைக்க வேலை
ஓய்வெடுக்க வீடு
காலையில் சமையல்வாசம்
கண்முளிக்க குழந்தை முகம்
சின்னச் சின்ன சண்டை
சிரித்து மகிழும் அண்டை
வேலியில் தவழும் கொடி
வேதனையில் தலைக்கு மடி
கோலம் போட்ட காலைநேரம்
குழலொலிக்கும் மெல்லிசை
புறவை தங்க பழமரம்
பனியுறங்க புல் வெளி
காற்று ஓட யன்னல்
கயிற்றில் ஆடும் கட்டில்
அணைத்த படி பயணம்
நினைத்த படி வாழ்கை
அழுத்தி வரவளைக்க எண்ணுகிறேன்
விளத்தி விளத்தி போகிறது
வெற்றுக் கனவுகளாக
விரும்புகின்ற நினைவுகள்!

0 comments:

Post a Comment