ADS 468x60

28 August 2016

கல்வியியல் கல்லூரிகளின் மாற்றத்தின் தேவைப்பாடு!!

கௌரவ ரணில் விக்ரமசிங்க கல்வி மந்திரியாக இருந்தபோது பாடசாலைகளில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் தேவையை உணர்ந்த அவர் கல்வியியல் கல்லூரிகளை நிறுவி அதை அமுல்படுத்தி வைத்தார். தற்போது இலங்கையில் மொத்தம் 19 கல்வியியல் கல்லூரிகள் நிறுவப்பட்டு 4000 ஆசிாியா்கள் அதன் மூலம் வெளியேற்றப்படுகின்றமை ஒரு சிறப்பாகும். இந்த கல்வியியல் கல்லூரிகள் மூலம் நல்ல திறமையுள்ள பயிற்றப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி அவர்கள் மூலம் பிரகாசமான எதிர்காலத்தினை மாணவர்கழூடாக தோற்றுவிப்பதனையே இது இலக்காக கொண்டிருந்தது. இந்த கல்லூரிகளுக்கு உ.த சித்தி பெற்ற மாணவர்கள் தெரிவாகி சுமார் மூன்று வருடங்கள் உள்ளேயும் வெளியேயும் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இவர்கள் பல பாடத் துறைகளில் ஆசிரியர்களாக வெளியேற்றப்படுகின்றனர் முறையே கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சுகாதாரம், தொழில் நுட்பம், சமயப்பாடங்கள், விவசாயம், நடனம், மொழி போன்றவற்றை குறிப்பிடலாம். 

சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு அரசாங்கம் இலங்கையில் கல்விக்கு கொள்கை ரீதியாக மிக மிக முன்னுரிமை கொடுத்து வந்துள்ளது. ஆதனை 40 வருட காலத்தில் நாங்களெல்லாம் அறுவடை செய்துள்ளோம் எனச் சொல்லலாம். ஆதன் பயனாக பாடசாலைகளின் எண்ணிக்கை 50% விகிதத்தாலும், மாணவர்களின் எண்ணிக்கை 300% சதவிகிதத்தாலும் அதேபோல் ஆசிரியர் பெருமக்களின் எண்ணிக்கை 400% விகிதத்தினாலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது அதற்கு இந்த கல்வியியல் கல்லூரிகளும் உறுதுணையாக இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் 1980 களில் உத்தியோக பூர்வமான தகவலின்படி 90% வீதமானவர்கள் இலங்கையில் எழுத்தறிவு கொண்டவர்களாக உயர்த்தப்பட்டிருந்தனர். இதனால் தெற்காசிய வலயத்தில் மாத்திரமல்ல அபிவிருத்தி அடைந்து வருகின்ற ஏனைய நாடுகளிடையேயும் முன்னிலை வகித்திருந்தது.

இவ்வாறு கல்வியில் ஒட்டு மொத்தமான வளர்ச்சி இருந்தும் குறிப்பாக எமது கிழக்கிலுள்ள அநேகமான பின்தங்கிய கிராமப்புறப்பாடசாலைகளில் பல சவால்கள் இன்றும் எதிர்கொள்ளப்பட்டு வருகின்றமை சொல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக பாடசாலையை விட்டு இடைவிலகுகின்ற மாணவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகின்றமை, தரமான ஆசிரியர் பற்றாக்குறை, ஏனைய வசதிகள் இன்மை, மாணவர்களிடையே தலைமைத்துவம் வளர்க்கப்படாமை போன்ற இன்னோரன்ன விடயங்களை சுட்டிக்காட்டலாம். கல்வி அதிகமாகக் கற்ற மக்கள் தொகையை கொண்ட நாடு என்பதனைவிட அதன் மூலம் சிறந்த நாகரிகம், பண்பாடு, மனோநிலை அதற்கும் மேலாக ஊழியச் சந்தைக்கு தயார்படுத்தும் தொழில் கல்விக்கான ஆலோகனைகள் என்பனவற்றில் கணிசமான வளர்ச்சியை இந்த ஆசிரியர்களால் அல்லது இந்தப் பாடத்திட்டங்களால் கொடுக்க முடியாமல் உள்ளமையின் வேர்கள் கண்டறிப்பட்டு அவை களையப்பட முயற்சிகள் எடுக்கப்படுகின்றதா என்கின்ற கேள்வியும் உண்டு.

இவற்றை முறியடித்து முன்னேற கூடிய வழகளாவன
கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது குறைந்தது பின் தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கான 50% விகித கோட்டாவை வழங்கி கஸ்ட்ட அதிகஸ்ட்ட பிரதேசங்களில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறைகளை அங்குள்ள படித்தவர்களை கொண்டே நிரப்புவதற்கான ஆவண செய்யப்படவேண்டும்.

4000 ஆக தற்பொழுது 19 கல்விக் கல்லூரிகளிலும் இருந்து வெளியேற்றப்படும் ஆசிரியர்களை குறைந்தது நன்கு பயிற்றப்பட்ட தற்காலத்துக்கு பொருத்தமான 5000 ஆசிரியர்களையாவது வெளியிடுவதற்கான வேலையினை உயர்கல்வி அமைசு மேற்கொள்ள வேண்டும். அதில் கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கணிசமான ஆசிரியர்கள் வெளியேற்றப்படனும்.

புhடசாலைக்காக அடிப்படை வசதிகளை அடையாளங்கண்டு விருத்தி செய்தன் ஊடாக இடைவிலகலினை தவிர்துகொள்ளுதல்.
மாணவர் தலைமைத்துவ பயிற்சியினை, தொழில் துறைக்கான வழிகாட்டல்களை பாடசாலை மட்டத்தில் இருந்தே துறைரீதியாக பிரபல்யமானவர்களைக் கொண்டு அவர்களை புடம்போட வேண்டும்.

பாடப்புத்தகத்தினை மாத்திரம் பின்தொடரும் கற்பித்தல் முறையில் இருந்து விலகி செய்முறையினூடான கல்வியை பல கருவிகளை கொண்டு கற்பிக்கும் முறையினை அமுல்படுத்த வேண்டும் (Integrated teaching approach) 
ஆசிரியர்கள் தாங்கள் நாளாந்தம் தமது மேலதிக அறிவினை வளர்துக்கொள்ள தலைப்படுவதுடன் அவற்றை மாணவர்கிடையே பரிமாறுவதற்கான திறனையும் கொண்டிருக்கும் படி ஆசியர்களுக்கான வழிகாட்டிகள் முகாமை செய்யும் முறையினை ஏற்படுத்தல்.

பாடசாலைகள் தோறும் பழய மாணவர் சங்களை துவங்க வேண்டும். அதன் மூலமாக பாடசாலைகளுக்கும் சமுகத்துக்குமான இடைவெளியை இல்லாதொழிப்பதுடன் பாடசாலையினுடைய தேவைகள் அவற்றை பிரதியீடு செய்வதற்கான சமுகத்தின் இயலளவு என்பனவற்றை சமநிலையில் பேணும் அணுகுமுறையை நிறுவவேண்டும். அப்போது சாதனையாளர்களை உருவாக்கும் பிரதேசமாக எமது இடங்களை மாற்றலாம் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

0 comments:

Post a Comment