ADS 468x60

20 September 2016

மட்டக்களப்பில் தொடர்சியாக அதிகரித்துவரும் விபத்துக்கள்

மட்டக்களப்பில் தொடர்சியாக அதிகரித்துவரும் விபத்துக்கள் மக்களிடையே மிக்க அதிர்சியையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் உலகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் ஒன்றாக வீதி விபத்துக்களும் விளங்கு கின்றது. ஏனைய விபத்துக்கள்போல் வீதிகளில் இடம்பெறும் வாகன விபத்துக்கள்  அதிகாித்துள்ளன.

அந்த வகையில் இன்று வீதி விபத்துக்கள் இடம்பெறாத மணித்தி யாலமே இல்லை என்றளவுக்கு நிலைமை வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இந்த வீதி விபத்துக்களால் மரணங்கள் மாத்தி ரமல்லாமல் உடல், உள உபாதைகளும் ஏற்படவே செய்கின்றன. மேலும் வாகன விபத்துக்களால் ஏற்படும் சேதங் களையும் மறந்து விடமுடியாது.

இப்போது வருடா வருடம் 12 இலட்சம் பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர். இவர்களில் 02 இலட்சத்து 70 ஆயிரம் பேர் பாதசாரிகளாவர். ஆனால் வருடமொன்றுக்கு 50 மில்லியன் பேர் வாகன விபத்துக்களால் காய மடைகின்றனர். இக்காயங்களில் மிகப் பாரதூரமான காயங்கள் குறிப்பிடத் தக்களவில் இடம்பெறுகின்றன.
இவ்வாறான காயங்களுக்கு உள்ளாகின்றவர்கள் பெரும்பாலும் உடல் உள உபாதைகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்ப்பது சிரமமானது. குறிப்பாக இவ்வாறான விபத்து காயங்களுக்கு உள்ளாகின்றவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாகவும், பெளதீக ரீதியாகவும் அடுத்தவரில் தங்கி இருக்க வேண்டிய நிலைக்கே உள்ளாகின்றனர்.
அதேநேரம் வீதிவிபத்துக்களுக்கு உள்ளாகின்றவர்களில் பெரும் பகுதியினர் வளமான வயது மட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அதாவது 20-45 வயதுக்கு இடைப் பட்டவர்கள். இவ்வாறு மட்டத்தைச் சேர்ந்தவர்கள் விபத்துகள் மூலம் உயிரிழப்பதும், உடல், உள ஊனங்களுக்கு உள்ளாவதும் சமூக, பொருளாதார ரீதியில் பலவிதப் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியதாகும். குறிப்பாக அவர்கள் வறுமை நிலைமைக்குள் தள்ளப்படுவர்.
மேலும் வீதி விபத்துக்களுக்கு உள்ளாகின்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும்,சேதமடையும் சொத்துக்களை சீரமைக்கவுமென கோடிக்கணக்கான ரூபாய்களை உலகம் செலவிடுகின்றது. இது உலகம் தற்போது எதிர்கொள்கின்ற முக்கிய பொருளாதார இழப்புக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இவ்வாறு பலவிதமான பாதிப்புக்களை தரக் கூடிய இவ்வீதிவிபத்து இலங்கையில்   அதிகளவில் இடம்பெறும் மாவட்டமாக  மட்டக்களப்பு காணப்படுகின்றது. 
அனர்த்தங்களை குறைப்பதற்கென நிறுவகங்கள், திணைக்களங்கள், காரியாலயங்கள் உருவாக்கப்படுவதற்கு முன் ஏற்பட்ட அனா்த்தங்களின் எண்ணிக்கையினை விட இவையெல்லாம் உருவாக்கப்பட்ட பின்னா் நடந்தேறும் சம்பவங்கள் அவற்றை விஞ்சிவிட்டமையே நாளுக்கு நாள் நடந்தேறும் சம்பவங்கள் காட்டுகின்றன.

வீதிச் சமிக்ஞைகள், வீதி நடைமுறைகள், கடல் பாதுகாப்பு விதிமுறைகள், அனர்த்த தவிர்ப்பு முன்னாயத்த செயற்பாடுகள், பரீட்சார்த்த நடவடிக்கைகள் என்பன பல்வேறு தரப்பினரால் எடுத்துவரப்பட்டும், இவ்வாறான அனா்த்தச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டாளா்கள் மீது கேள்வி எழுப்பியுள்ளதனைக் காணக்கூடியதாக உள்ளது.

நேற்று முந்தினம் பாசுக்குடாவில் இருவர் ஒரே குடும்பத்தில் இருந்து கடலில் காவுகொள்ளப்பட்ட சம்பவத்தினைத் தொடர்ந்து அவர்களது பெற்றோர் இருவரும் தூக்கிட்டு கொண்டு மாய்த்துள்ள துன்பியல் சம்பவம் எமது மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவச் அல்லது அனா்த்த குறைப்பு முன்னேற்றத்தில் உள்ள பாரிய இடைவெளியைக் காட்டி நிற்கிறது.

இனியாவது இவர்கள் விழித்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பாா்களா? என்கின்ற கேள்வியை அவர்களிடமே விட்டுவைக்க விரும்புகிறேன். இவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அத்துடன் ஒவ்வொரு பிள்ளைகளும் தங்களை நம்பி இருக்கும் பெற்றோர்களை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்கான ஒரு பாடமாகவும் இச்சம்பவம் அமைந்துள்ளது.

உயிா்களின் பெறுமதியை மதித்து பாடசாலை, சமுக மட்டத்தில் விழிப்புக் குழுக்களை ஏற்ப்படுத்தி அவற்றை செயற்படுத்த வேண்டும்.

0 comments:

Post a Comment