ADS 468x60

28 October 2016

தீபத்திருநாள் வாழ்துகள்!

ஒளிரும் ஒருநாள் உனக்காகவே எழுந்திடு மனமே!
இருள் போகும் போனால் மறையும் துன்பம்
வாழ்ந்திடு இனமே!!
எழுந்திடு மனமே! வாழ்ந்திடு இனமே!!
போருக்குள் வாழ்வைத் துலைத்து
போதாமை உள்ளே வைத்து
தூங்காமல் தொலைத்த காலம் போனதம்மா
கையுண்டு காலுமுண்டு கரைசேர்க்க ஆளுமுண்டு
நம்பிக்கை தீபம் கொண்டு முன்னேறுவோம்
ஒளியின் பக்கம் நடைபோடுவோம்
உன்மை பேசி உறவாடுவோம்
வாருங்கள் கொண்டாடுவோம்- ஒன்றாய்
சேருங்கள் முன்னேறுவோம்.

27 October 2016

'மட்டக்களப்பு மாநிலம் என்னும் மண்ணுக்கும் ஒரு வரலாறு உண்டு' .

'மட்டக்களப்பு மாநிலம் என்னும் மண்ணுக்கும் ஒரு வரலாறு உண்டு' என்பது மறுக்க முடியாத ஒன்று. இருந்தும், மட்டக்களப்பு பிரதேசத்துக்கு வரலாறு கிடையாது, அல்லது நீண்ட பண்டை வரலாறு இல்லை என்றுதான் அனேகர் நினைக்கின்றார்கள். மட்டக்களப்புக்கு போர்ந்த பண்பாடு இல்லை என்பது பலரது மனதில் தீர்க்கமாய் உறைந்திருக்கிறது.

இலக்கியம் கலை, மொழிச் செழுமை, வித்துவத்திறன், பிரதேச சமுக மேன்மை ஆகியவற்றில் மட்டக்களப்பு பிரதேச சமுதாயம் ரொம்பவும் பிற்ப்பட்டது என்கின்ற எண்ணப்பாடு நீண்ட காலமாக உலவுகிறது.

11 October 2016

நீர் ஓடிடும் தேனாட்டில்

அ) மீன்பாடுற நம்ம நாட்டில நம்மட நாட்டு வளம் கலை கலாசாரம் பற்றி ஏன் நம்ம ஒரு பாட்டு பாடக்கூடாது? 
ஆ) அது தானே

நீர் ஓடிடும் தேனாட்டில்
மீன் பாடுது கேளுங்களேன்
ஏர் பாய்ந்திடும் வளநாட்டில்
நெல் ஆடுது பாருங்களேன்

கூத்து கும்பி கரகம் வசந்தன்
பூத்துக் குலுங்கும் கலையிடும்
சேத்து காவியம் காதில் ஒலிக்க
உடுக்கை முழங்கும் தமிழ் நிலம்