ADS 468x60

28 October 2016

தீபத்திருநாள் வாழ்துகள்!

ஒளிரும் ஒருநாள் உனக்காகவே எழுந்திடு மனமே!
இருள் போகும் போனால் மறையும் துன்பம்
வாழ்ந்திடு இனமே!!
எழுந்திடு மனமே! வாழ்ந்திடு இனமே!!
போருக்குள் வாழ்வைத் துலைத்து
போதாமை உள்ளே வைத்து
தூங்காமல் தொலைத்த காலம் போனதம்மா
கையுண்டு காலுமுண்டு கரைசேர்க்க ஆளுமுண்டு
நம்பிக்கை தீபம் கொண்டு முன்னேறுவோம்
ஒளியின் பக்கம் நடைபோடுவோம்
உன்மை பேசி உறவாடுவோம்
வாருங்கள் கொண்டாடுவோம்- ஒன்றாய்
சேருங்கள் முன்னேறுவோம்.
கைகட்டி பின்னே நின்று
கடிவாளம் முன்னே போட்டு
கொடிதாக வாழ்ந்த காலம் போனதம்மா
பொய்சொல்லி வேடம்போடும் பொழுதொரு பேச்சிபேசும்
பொல்லாத கூட்டம் தனை வேரறுப்போம்
உறிதி உண்டு அறிவும் உண்டு
உழகை்கும் கைகள் எமக்கு உண்டு
தீபங்கள் இருள்வதில்லை- ஒளி
தீமையை மறைப்பதில்லை
ஒளிரும் ஒருநாள் உனக்காகவே எழுந்திடு மனமே!
இருள் போகும் போனால் மறையும் துன்பம்
வாழ்ந்திடு இனமே!!
எழுந்திடு மனமே! வாழ்ந்திடு இனமே!!

0 comments:

Post a Comment