ADS 468x60

11 November 2016

விறகு ராட்டி அடுப்புகள் 50 குடியிருப்பு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


பட்டிருப்பு தொகுதியின் பழம் பெரும் கிராமங்களில் ஒன்றான குடியிருப்புக் கிராமம் 38 குடும்பங்களைத் தன்னகத்தே கொண்டு, மட்டக்களப்பின் தெற்கே சுமார் 24 கிலோ மீற்றருக்கு அப்பால் ஆற்றங்கரையில் அமைந்துள்ள வறிய கிராமமாகும். இந்தக் கிராமம் வயல்வெளிகள் சூழ வெண்மணற்த் திடலில் அமைந்திருக்கின்ற போதும், வருடா வருடம் ஏற்ப்படுகின்ற வெள்ள அனர்த்தத்தினில் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. 

இங்குள்ள மக்களின் கல்வி, பொருளாதாரம் என்பனவற்றினை ஏனைய கிராம மக்களுடன் ஒப்பிடும்போது மிக மிக மோசமாக இருந்து வருகின்றது. இங்குள்ளவர்களின் கல்வி முன்னேற்றம் பின்தங்கி காணப்படுவதனால் இவர்களில் ஆனேகர் கூலி வேலைகள், மீன்பிடி, வயல் வேலை மற்றும் மேட்டு நிலப் பயிர்ச் செய்கை என்பனவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் குடும்பங்களின் நிலையை உணர்ந்த எமது குழுமத்தினர் அவர்களை அணுகி, உதவி கருசனை செலுத்த தொடங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாக இயற்கைக்கு பங்கம் இல்லாத தருவிக்கப்பட்ட நல்ல சக்தியை சேமித்து பயன்படுத்தக்கூடிய விறகு ராட்டி அடுப்புகள் 50, 12.03.2013 அன்று பி.ப 5.00 மணியளவில் இந்த மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.



0 comments:

Post a Comment