ADS 468x60

11 November 2016

கல்வியில் வறுமை மட்டக்களப்புக்கு சொந்தமானதா?

வறுமை என்பத,, உணவு, உடை, உறைவிடம் பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். 

எமது மாவட்டத்துக்குள்ளும் இந்த வறுமை காரணமாக பல ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. இதில் குறிப்பாக கல்வி பெறும் வாய்ப்பு பல குடும்பத்தில் மிக கஸ்ட்டமானதொன்றாகவே காணப்படுகிறது. இதனால்தான் எம் குழுமத்தினர் அந்தக் கல்வியில் அதிக அக்கறை கொள்ளுகின்றமை தெரிந்த விடயம்.


இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் 26 விகிதமானவர்கள் இளைஞர்கள். அதில் ஏ.எல் மற்றும் ஓ எல் படித்த இளைஞர்களே பல்கலைக்கழக அனுமதி இல்லாமல் வேலை பெற முடியாத நிலையில் பல தீய செயல்களுக்கு ஆளாகும் நிலை தோன்றியுள்ளமை நாளாந்தம் நடக்கும் கொலை சம்பவங்களை காணும்போது விளங்கும்.

எம் சமுகம் திட்டமிட்டு பின்தள்ளப்படும் நிலையில் நாங்கள் எம் இளம் சந்ததி சார்பாக என்ன முயற்சிகளை அல்லது மாற்றத்தினை கொண்டுவரலாம் என சிந்திக்க முடியுமா நண்பர்களேஇ புத்தி ஜீவிகளே!!

0 comments:

Post a Comment