ADS 468x60

11 November 2016

என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!


மீண்டும் ஒரு முறை உங்களுடன் உறவாடலாம் என நினைக்கிறேன். நாங்கள் பல காரணங்களால்; கடந்த தசாப்தங்களில் பிளவுபட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு நாலா பக்கமும் தாய் வேறு, பிள்ளை வேறென சிதைந்து, நாடு விட்டு நாடு போய், சில்லாங்கொட்டை போல் கலைந்து கிடக்கிறோம். 



'அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிக்கிற கதையாக' இருக்கிறதோ! இந்த மத வாதம், மொழிவாதம் என எண்ணத் தோன்றுகின்றது. நான் நாளாந்தம் பார்க்கும் எம்மக்களின் அவலம் எண்ணிலடங்காது, சொல்லி மாளாது.

வறுமை, கொலைச்சம்பவங்கள், காலநிலை மாற்றம், மாணவர் இடைவிலகல், வேலையின்மை, ஓழுக்கச் சீர்கேடு, மதுபோதைப் பாவனை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என எண்ணற்ற பிரச்சினைகளுடன் போராடும் எம் மக்களுக்கு நாங்கள் என்ன செய்யலாம்? என புத்திஜீவிகளும், படித்தவர்களும் சிந்திக்க தலைப்பட வேண்டுமே தவிர வேறொன்றும் அல்ல. அதற்க்கு எமது அயல் சகோதரர்களே எடுத்துக்காட்டு.

அப்படித் தலைப்படாத காரணத்தினால் தான் நாளாந்தம் எம் சமுகம் பின்னடைந்து செல்கிறது. இவற்றுக்கெல்லாம் இந்த மதம் சார்ந்த வாக்குவாதம் ஒன்றும் தீர்வு தந்து விடப்போவதில்லை, ஏங்கித் தவிக்கும் இந்த சமுகத்துக்கு; பிரிவினை சொல்லும் கருத்துக்கள் வழி காட்டப்போவதும் இல்லை.

இந்த இடத்தில் மற்றவரை தேவையற்று குறைகூறும், அபாண்டம் செய்யும் எந்தவித முயற்சியையும் செய்யவேண்டாம். அதற்கு இந்தக் குழும நிர்வாகி என்றவகையில் இடமளிக்கவும்மாட்டேன். நான் இந்த மட்டு மண்ணின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நாளாந்தம் திரிபவன். எனது குடும்பம், எனது வாழ்க்கை எல்லாவற்றையும் விட என் மக்களைப் அதிகம் நேசிப்பவன். அதுபோலவே ஓவ்வொரு விநாடியினையும் அவர்களை கரைசேர்க்கும் முயற்ச்சியில் பல வழிகளில் இந்தக் குழும உறுப்பினர்கள் திட்டம்தீட்டிக்கொண்டிருக்கிறோம்.

அதுக்காகவே இந்தக் குழுமம் உருவாக்கப்பட்டது. எத்தனையோ விடயங்களைச் செய்து விட்டோம், செய்யத் தீர்மானித்தும் உள்ளோம்.
எவ்வளவோ நல்ல பல விடயங்கள் அலசவேண்டி ஆராயவேண்டி இருக்க ஏன் தேவையற்ற விடயங்களை போட்டு என்னையும் குழப்பி எல்லோரையும் குழப்ப நினைக்கிறீர்கள்! உங்களுக்கு எதையாவது பேசவேணுமாயின் தயவுசெய்து என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் உடன் உதவுகிறேன் அது எம்மக்களின் இன்னலுக்கு யன்னலாக இருக்கும்.

மொழி சார்பில் பிரச்சினையில்லை, அது இங்கு எமது இலக்குமில்லை அது ஒரு ஊடகம், அதைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்ப்படின் எத்தனையோ புத்தி ஜுவிகள் உதவ தயாராக உள்ளனர். நான்கூட புரியாவிடின் தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்துகொள்வதுண்டு.

இங்கு தமிழ் தெரியாத பிற நாட்டவரும் இந்த குழுமத்தின் செயற்பாடுகளை கண்டு விளங்கி எமது மக்களின் நிலைமையை மற்றவரும் உணரும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! நீங்கள் எம்மக்கள் பற்றி சிந்திக்க, கருத்துப் பகிர, உதவ மதமும் மொழியும் தடையல்ல, அரசியல் மட்டுமே தடையாகும்.

இவற்றை எல்லாம் விட்டு, மக்களது நலனில் முன்னேற்றத்தினைக் கொண்டுவரும் எந்தப் பிரச்சினையினையும் பேசுங்கள், வாதிடுங்கள் அவற்றிற்க்கான திட்டங்களை ஒன்றிணைந்து தீட்டுங்கள் அது உசிதமாக அமையும், பயனுள்ளதாயும் இருக்கும்.

"இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும்
நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும்
நாம ஒண்ணோடு ஒண்ணாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்"

0 comments:

Post a Comment