ADS 468x60

31 December 2016

புதிய வருடத்துக்கான ஒற்றுமையை கட்டியெழுப்புதலும் நம்பிக்கையை அதிகரித்தலும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கிருஸ்மஸ் விழாவினை கொண்டாடுவதில் இருந்த ழுரண்பாடுகளை எண்ணிப்பார்கிறேன். ஆனால் இம்முறை புதிய ஆண்டை வரவேற்கும் ஆயத்தங்கள் மற்றும் கொண்டாட்டங்களில் இருக்கும் ஒற்றுமை, உறுதித்தன்மை, திடகாத்திரம் மற்றும் நம்பிக்கை என்பனவற்றை பிரதிபலிக்கும் முறை வித்தியாசமாக அமைந்திருக்கிறது குறிப்பாக ஆசியாவிலேயே மிக உயர்ந்த கிருஸ்மஸ் மரம் மூலம் இவைகள் அனைத்தும் அடையாளம் காட்டப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதொன்றே. 

27 December 2016

இத்தனையும் மனிதர்களாம்...

புரிந்து நடப்பவரும்
புரியாமல் கிடப்பவரும்
தெரிந்து கொடுப்பவரும்
திட்டமிட்டு கெடுப்பவரும்

துன்பத்தை துடைப்பவரும்
இன்பத்தை படைப்பவரும்
உறவை உடைப்பவரும்
உன்மைகளை அடைப்பவரும்

மழைய நம்பித் தானே- எங்க வெளச்சல் இருக்கு மானே!

பட்ட கௌப்புது பார்
பச்ச வயலு ஊருக்குள்ள
சிட்டுக் குருவி போல
சிறகடிச்சி மனம் பறக்குது
கொட்டு முழக்கம் கொட்டு -மழை 
சொட்ட சொட்ட கொட்டு
வெட்ட வயலில் பட்டு -வெள்ளம்
வரம்பு உயரக் கட்டு

19 December 2016

வாகரை சொந்தங்களை தேடி -ஒரு நிவாரணப் பயணம்.

 //மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு //
குறிப்பாக வாகரை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராமங்கள், பல தசாப்த யுத்த சுவடுகளை இன்னும் சுமந்துகொண்டு, மிகவும் வருந்தித்தான் முன்னேறவேண்டிய தேவை இருக்கிறது. அதிலும் குறிப்பாக இங்கு காணப்படும் எல்லைக் கிராமங்கள் நெடுகிலும் கஸ்ட்டப்படும் ஒரு வறிய நிலையிலேயே இருந்து வருகிறது. இந்த நலிவான தன்மைதான் அவர்களை இலகுவாக அனர்த்தங்களில் அழிவடைய வைத்து விடுகிறது. இந்த நிலமையில் நீங்கள் கொடுத்துதவிய மீன் டின், அரிசு ( 05 கி.கி ), கோதுமை மா (02.கி.கி), பருப்பு (01.கி.கி), சீனி (01.கி.கி) போன்றன மிக மிக அத்தியாவசியமானவை, இந்த கிராமத்தில் உள்ள 38 குடும்பங்கள் சார்பாகவும் எமது பிரதேச செயலகத்தின் சார்பிலும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்' என கிராம சேவகர் விஜயராஜன் அவர்கள் தெரிவித்தார். Jan 25-2013

மட்டக்களப்பு மக்களின் மறுமலர்ச்சி

//மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு // 
இக்கட்டான நிலையில் வாழும் மக்களின் கல்வியினை மேம்படுத்தும் திட்டத்தினை சரியாக இனங்கண்டு மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் திருமலை மாவட்டங்களில் உள்ள யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வியை மீள் எழுச்சி செய்யும் வண்ணம் கனடாவில் நிறுவப்பட்டுள்ள ChiDAES Canada (Children Development Association of Eastern Sri Lanka – Canada) எனும் நிறுவனத்தினரால் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட 5 பாடசாலைகள் இனங்காணப்பட்டு அங்குள்ள மாணவர்களுக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ள பெறுமதிமிக்க புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகள் என்பன வழங்கி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் கட்டமாக உறுகாமம் மட்/ சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 89 மாணவர்களுக்கு இவை 10.02.2013 அன்று சிறப்பாக வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்கான அனைத்து ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளையும் எமது குழுமத்தினர் சிரமம் பாராது சிடாஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து ஏற்பாடு செய்ததுடன், அந்த நிகழ்வை சிறப்பிக்க எமது குழுவின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அங்கத்துவர்கள் பிரசன்னமாகி இந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் மூலம் புதிய நம்பிக்கையினை எமது தமிழ் குழந்தைகள் மத்தியில் ஏற்ப்படுத்தியுள்மை தெட்டத்தெளிவாகும்.

கல்வியில் பின்னிற்கும் எமது சமுகம் கரைசேர்வது எப்போ??

 //மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு //
'உங்கள் உறுப்பினர்கள் இந்த மிகவும் வசதி குறைந்த குழந்தைகளுக்கு வாஞ்சையுடன் கொடுக்கச் சொல்லி கேட்டுக்கொண்டதற்க்கிணங்க பாடசாலைக்கு கொண்டு செல்லும் ஒரு தொகை கற்றல் உபகரணங்கள் களிமடு மற்றும் கற்ப்பக்கேணியில் இருந்து பாவக்கொட்டிச்சேனை மற்றும் இருட்டுச்சோலைமடு போன்ற தூர இடங்களுக்கு பாடசாலைக்கு செல்லும் 79 பிள்ளைகளுக்கு வழங்கி வைத்தமை உண்மையில் எங்கள் அனைவருக்கும் ஒரு சந்தோசத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது' என இங்கு வந்திருந்த கிராமசேவகர் பாராட்டினார். மேலே குறித்த கிராமங்கள் வவுனதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அழகான அதுபோல் கல்வி, பொருளாதாரம் என்பனவற்றில் மிகப் பின்தங்கிய கிராமங்களாகும். 'பாலும் தேனும் பனைக்கதிர் நெல்லும், சாலும் சாலும் எனத்தகு நாடு' என்பதற்க்கிணங்க பாலும் தேனும் மேவி வழிந்து கிழக்கு கரையில் இருந்து வருகின்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்த போடிமார்கள் வாழ்ந்த இடத்தில் இன்று கூலிவேலை செய்யும் கூட்டங்களை உருவாக்கி விட்டிருக்கும் கடந்த மூன்று தசாப்த கசப்பான காலங்கள் அதே மூன்று தசாப்த காலம் பின்னிற்கின்ற ஒரு பாவப்பட்ட மக்களாக எம்மினத்தை மாற்றியுள்ளமை கொடுமையிலும் கொடுமை. Feb, 22.2013.

தும்பங்கேணி விவசாயக் கிராமத்தில் செய்கை பண்ணப்பட்ட சோளச் செய்கை

 //மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு//
தும்பங்கேணி விவசாயக் கிராமத்தில் செய்கை பண்ணப்பட்ட சோளச் செய்கை (March 12-2013) பலனளித்துள்ளது. கிட்டத்தட்ட 5000 கிலோக்கிறாம் விளைச்சலை இது தந்துள்ளது. இம்முறை ஏற்ப்பட்ட பெரு வெள்ளம் காரணமாக அழிவுற்ற நிலையிலும் இந்த விளைவு கிடைத்துள்ளது. எமது குழுமத்தின் முயற்ச்சியில் இவர்களுக்கான முன்மாதிரி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பரீட்சிக்கப்பட்டுள்ளது. 

காந்திபுரத்தில் உடுபுடவைகள் கொடுத்து உதவினோம்

 //மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு//. இன்றய நாள் (2013.04.13) முந்திய வருடங்களை விட இனிதாக இருந்தது என்றே எண்ணத்தோன்றுகின்றது. எமது குழுமத்தினர் நேரம் காலம் அறிந்து ஒரு மகத்தான சேவையை செய்து தற்போதுதான் திரும்பினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒளிபொருந்திய புத்தாண்டாக விஜய வருடத்தினை வரவேற்க்க தயாராக இருந்துகொண்டு இருக்கிறார்கள். அப்படி இருந்தும் இன்னும் இருளில் வாழ்க்கையை கடத்திக்கொண்டு நாளாந்தம், விஷ ஜந்துக்களின் தொல்லையால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சமுகத்தினை சின்னக்காந்திபுரம் எனும் இடத்தில் கண்டு அவர்களுக்கு ஒரு தொகுதி உடுபுடவைகளை கொடுத்து உதவினோம்.. 

கச்சக்கொடிஸ்வாமி மலை வித்தியாலய மாணவர்களுக்கு உதவி

//மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு // 
கிட்டத்தட்ட 1533 மக்கள் தொகையைக் கொண்டுள்ள கச்சக்கொடிஸ்வாமி மலை  ஒரு பழங்கிராமமாகும். இந்த பிரதேசம் பல காலமாக இடம்பெயர்ந்து யுத்தத்தின் கெடுபிடிக்குள் நேரடியாக அகப்பட்ட ஒரு வறிய கிராமமாகும். இவ்வாறான கிராமங்களில் அடிப்படைக் கல்வி கூட மிக மந்தமான நிலையில் இருக்கையில் தொழில்நுட்ப்பக் கல்வி, மருத்துவம் போன்றவற்றின் முன்னேற்றம் பற்றி நாங்கள் எதை எதிர்பார்ப்பது!! இந்த துறைகளில் ஒட்டுமொத்த உலகத்தினரும்; கால் நூற்றாண்டுக்கும் முன்பதாகவே கால் எடுத்து வைத்துள்ள நிலையில் நாங்கள் இன்னும் பின்னுக்கு நிற்ப்பது உலகத் தமிழரின் வளர்;ச்சிப் பங்கில் பின்னடைவையே ஏற்ப்படுத்தக்கூடும். பாடசாலையின் அதிபர் இவ்வாறு கூறுகிறார் கனடாவின் சிடாஸ் அமைப்பினர் எமது மட்டக்களப்பு கிராமங்களில் கல்வி கற்க்கும் வசதி குறைந்த சுமார் 50 மாணவர்களுக்கு, அடிப்படை வசதிகளைக் கொடுத்து உதவும் வகையில் கச்சகொடிஸ்வாமிமலை மகாவித்யாலயம் பாடசாலையில் 27.04.2013 அன்று பெறுமதி மிக்க பாடசாலை சப்பாத்துக்களையும், புத்தகப் பைகளையும் வழங்க உதவியமை வரவேற்க்க தக்க ஒன்றாகும்

கல்விக்கான உதவி நோக்கி- கட்டம் இரண்டு- இருநூறுவில் பாடசாலை

 //மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு// 
வவுனதீவு பிரதேசம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினுள் காணப்படுகின்றது. இது இம் மாவட்டத்துக்குள்ளேயே கல்வியில் மிகவும் பின்தங்கிய இடமாகும். இங்கு காணப்படுகின்ற அநேகம் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் மந்தமாகக் காணப்படுவதுடன் இங்குள்ள மக்களும் மாணவர்களும் கல்வியில் அக்கறையற்றவர்களாகவும், நாட்டம் குறைந்தவர்களாகவுமே காணப்படுகின்றமையை உணர்ந்து, இருநூறுவில் பாடசாலையில் கல்விகற்க்கும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பை மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பான சப்பாத்துக்களை கனடா வாழ் எம் உறவுகளின் சிடாஸ் அமைப்பின் நிதி உதவியுடன் 03.03.2013 அன்று வழங்கி அவர்களை ஊக்குவித்து உதவினோம்..

17 December 2016

எல்லைப்புற பகுதி மக்களிடையே இந்து மத தத்துவங்கள் தெளிவுபடுத்தப்படவேண்டும்

 மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறக்கிராமங்களில் எமது இந்து மதத்தின் அறக் கருத்துக்கள், தத்துவங்கள், அடங்கிய விடையங்களை தெளிவுபடுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகஸ்தர் கி.குணநாயகம் தெரிவித்தார்.
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையினால் மட்டக்களப்பு காந்திபுரம் சிவசக்தி இந்து கலா மன்றத்திற்கு இசைக் கருவிகள், வாழ்வாதார உதவி, உலர் உணவுப்பொதி, மாணவர்களுக்கான கற்றல் புத்தகங்கள், இந்துமத நன்நெறிக் கோவையான பகவத்கீதை, என்பன இன்று காலை வழங்கி வைக்கப்பட்டன.

15 December 2016

வம்மியடியூற்று அரும்புகள் பாலர் பாடசாலை நிகழ்வில்

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் வம்மியடியூற்று இந்து இளைஞர் கலா மன்றத்தின் ஒழுங்கமைப்பில் அரும்புகள் பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் சனிக்கிழமை(3) வழங்கி வைக்கப்பட்டன. 
http://battinaatham.com/description.php?art=6754