ADS 468x60

27 December 2016

மழைய நம்பித் தானே- எங்க வெளச்சல் இருக்கு மானே!

பட்ட கௌப்புது பார்
பச்ச வயலு ஊருக்குள்ள
சிட்டுக் குருவி போல
சிறகடிச்சி மனம் பறக்குது
கொட்டு முழக்கம் கொட்டு -மழை 
சொட்ட சொட்ட கொட்டு
வெட்ட வயலில் பட்டு -வெள்ளம்
வரம்பு உயரக் கட்டு

உப்பட்டிக் கள்ளனப் போல்
ஒதுங்கி ஒதுங்கி போகிறயள்
ஒள்ளுப்பம் எறங்கி வந்து
ஒரு பாட்டம் போஞ்சாலென்ன
கடலில் அள்ளிப் போடு- இந்த
நதிகள் நெறஞ்சி ஓடும்
மழைய நம்பித் தானே- எங்க
வெளச்சல் இருக்கு மானே!

0 comments:

Post a Comment