ADS 468x60

31 December 2016

புதிய வருடத்துக்கான ஒற்றுமையை கட்டியெழுப்புதலும் நம்பிக்கையை அதிகரித்தலும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கிருஸ்மஸ் விழாவினை கொண்டாடுவதில் இருந்த ழுரண்பாடுகளை எண்ணிப்பார்கிறேன். ஆனால் இம்முறை புதிய ஆண்டை வரவேற்கும் ஆயத்தங்கள் மற்றும் கொண்டாட்டங்களில் இருக்கும் ஒற்றுமை, உறுதித்தன்மை, திடகாத்திரம் மற்றும் நம்பிக்கை என்பனவற்றை பிரதிபலிக்கும் முறை வித்தியாசமாக அமைந்திருக்கிறது குறிப்பாக ஆசியாவிலேயே மிக உயர்ந்த கிருஸ்மஸ் மரம் மூலம் இவைகள் அனைத்தும் அடையாளம் காட்டப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதொன்றே. 

கடந்த கிருஸ்மஸ் பண்டிகையும் இலங்கையில் நன்றாகவே ஒழுங்கு செய்யப்பட்டது ஆனால் அது தமிழர்களுக்கு ஒரு கொடிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட தருணத்தின் பிற்பாடான ஒரு புதிய நகர்வின் ஆரம்பத்தில் பிறந்ததொன்றாக பார்க்கப்பட்டது. இந்த போர் முடிவடைந்ததை தொடர்ந்து ஒரு சமுக பயம் குறிப்பாக சிறுபான்மை மக்களிடையே தொற்றிக்கொண்டே இருந்தது எனலாம். இவை இன மத ரீதியிலான பாரிய அளவான முரண்பாடுகளை எரியவிட்டிருந்தன எனலாம். பெரும்பான்மையினரின் இன-மத ஆரவாரத்திமிர் இன மத ரீதியான சிறுபான்மை குழுக்களிடையே கட்டவிழ்த்துவிடப்பட்டு அது பயத்தினையும் பீதியையும் அவர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது.

மேலும் இன்னும் சிலர் பெரும்பான்மை சமுகத்தினரை, தமிழர்கள் தோற்கடிக்கப்பட்ட இனமாக பார்கும் ஒரு பிழையான முறைக்கு வழிநடத்தப்பட்டிருந்தனர் அதே போன்று ஏனைய இன மத ரீதியான சிறுபான்மையினரிடையே சிங்களம் என்பதை நேர்மையற்றவிதத்தில் கையாளும் ஒரு தவறான மனப்பாங்கினையும் விதைத்துவிட்டிருந்தனர். புpரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்ட யுத்த வெற்றிவிழாக்கள்கூட சிறுபான்மை சமுகத்தினரிடையே கசப்புணர்வையும் கும்பல் வண்முறைகளையும் அதிகரிக்கச் செய்திருந்தது என்றால் மிகையாகாது.

அதுபோல் யுத்த முடிவின் பின்னர் முஸ்லிங்கள் வாழும் பகுதிகளில் கூட அவர்களது சமய அனுட்டானங்கள், கலாசாரம் ஆகியவை கொச்சைப்படுத்தப்பட்டதுடன், முஸ்லிங்களுக்கு எதிரான பாரபட்சம் அதிகரித்து காணப்பட்டது. அதுபோல் நாடு முழுவதும்; கிறிஸ்த்தவ சமுகத்துக்கு எதிரான பல வன்முறைகள் தலைவிரித்தாடியது, சிறு வழிபாட்டுதடதலங்கள் காணமல் போயிருந்தன.

ஆக, சிறுபான்மை சமுகத்திடையே பல நடவடிக்கைகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பல பிறழ்வான நடவடிக்கைகள் பெருன்பான்மை சமுகத்திடையேயும் மறைமுகமாக ஒரு அச்சத்தினை தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நல்லாட்சியின் கீழ் சமுகங்களிடையே விதைக்கப்பட்டிருந்த குரோத உணர்வுகளின் உக்கிரம் தணியத்தொடங்கியுள்ளதனை அவதானிக்கலாம். அது மக்களிடையே நல்லிணக்கம், நட்பு, புரிந்துணர்வு மற்றும் அனைவருக்குமான சம நீதித்தன்மை என்பனவற்றினை படிப்படியாக ஏற்படுத்தி ஒரு நல்ல சமுகச்சூழலை உருவாக்கியுள்ளதனை காணலாம்.

இந்த ஆட்சியின் ஆரம்பத்தில் இருந்து எமது சமுகம் அந்த வேதனையிலிருந்து, கசப்பான நினைவலைகளில் இருந்து விலகிச்செல்ல மற்றும் எதிர்கால நம்பிக்கை நோக்கி முன்நகர காலம் எடுத்திருக்கின்றது. இலங்கையின் தற்போதைய ஐனாதிபதி மற்றும் பிரதமரின் புதிய ஆட்சியில் எமது நாடு ஒரு நவீன பாதையில் பயனிக்கதொடங்கியிருக்கின்ற ஒரு உணர்வு தோன்ற தொடங்கியிருக்கின்றது. சிதைவடைந்த நிலையில் இருந்த இந்த நாடு மற்றும் எமது பொருளாதாரம் இவற்றை சீர்செய்கின்ற அரசாங்கத்தின் ஒரு போக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை கீற்றை தோற்றுவிக்க தொடங்கியுள்ளது. 

புல அபிவிருத்தி என்கின்ற பெயரில் செய்யப்பட்ட பல திட்டங்கள் இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழவினரால் கிளரி எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற அதே நேரம் செய்யப்பட்ட பல திட்டங்கள் அபிவிருத்திக்கு பதிலாக அழிவுகளையும் ஏற்படுத்தி இருப்பதனை அதன் சுற்றுச்சூழல் மற்றும் நிதிப்பிரயோகம் என்பனவற்றில் உள்ள கருசனை இல்லாமை காட்டிநிற்கின்றது. மீள்பரிசீலனை செய்யப்பட்ட நகர்புற அபிவிருத்திகளை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளை காலம் தாழ்த்தியாவது அரசி ஆர்வம் காட்டி இருப்பது ஐ.நா.ச யினால் பரிந்துரைக்கப்பட்ட நிலையான அபிவிருத்தி இலக்கினை அடைவதற்கான அடிக்கல்லாக கொள்ளும் ஒரு ஒளிக்கீற்றினை நமக்கு புரியவைக்கின்றது.

தேவையான நகர அபிவிருத்திகளை மாத்திரம் குறிப்பாக வீதிகள், பாலங்கள், மற்றும் ஏனைய பொருளாதார உட்கட்டுமானங்களை திட்டமிட்டு செயற்படுத்துவதற்கான அரசின் செயலாற்றுகை முதலீட்டாளர்களிடையே ஒரு விருப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. இவை குறுகிய காலத்தில் இனங்களுக்கிடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்தி இருக்கின்றது என்கின்ற முடிவுக்கு வரலாம்.

எமது கிராமப்புறங்களைப் பொறுத்தவரையில் குறிப்பாக கிழக்கில் சிவில் யுத்தத்தினால் அழிவுற்ற சமுக ஒற்றுமை, தொண்டாண்மை என்பனவற்றை இன்னும் கட்டியெழுப்பமுடியாத நிலையில் இருப்பது எமது இருப்பினை பாரம்பரியத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது. பலர் இந்த நலிவுற்ற சூழலினை  பயன்படுத்தி அரசியல் குளிர்காய நினைப்பது வருத்தத்தினை தருவதுடன், பொருத்தமற்ற அரசியல்வாதிகளின் தெரிவுக்கான தொடர்ந்தேச்சியான திட்டம் எமது மக்களின் பிரதிநிதித்துவத்தில் பலவீனத்தினை கொண்டுவருவதனையே காட்டுகின்றது. அதுபோல் தேவையற்ற மத செயற்பாடுகள் அதற்கான வீணான செலவீனங்கள் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் அந்த சமுகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் தடைக்கல்லாக அமையும் வகையில் கிணத்துத் தவளைகளாக இருக்கும் தலைமைகளின் மூடத்தனம் எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது. 

எது எப்படி இருப்பினும் மாற்றத்துக்கான நம்பிக்கை, ஒற்றுமையினை கட்டியெழுப்புதல் படித்த புத்திசாலித்தனமான இளைஞர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. அது அவர்களிடம் செல்லும் வரை வெல்லும் வாய்பு தடையாகிக்கொண்டே செல்லும். ஆகவே இளைஞர்கள் நாம் மூடத்தனமான தலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சாக்கடையை தூய்மைசெய்யும் ஒருவராக ஒவ்வொருவரும் மாறி எமது சமுகத்தின் விடிவுக்காக பாடுபடுகின்ற மாற்றத்தினை கொண்டுவருகின்ற ஆண்டாக மலர இருக்கும் புத்தாண்டு அமைய வேண்டும் என எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்துகிறேன். நன்றி

0 comments:

Post a Comment