ADS 468x60

19 December 2016

தும்பங்கேணி விவசாயக் கிராமத்தில் செய்கை பண்ணப்பட்ட சோளச் செய்கை

 //மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு//
தும்பங்கேணி விவசாயக் கிராமத்தில் செய்கை பண்ணப்பட்ட சோளச் செய்கை (March 12-2013) பலனளித்துள்ளது. கிட்டத்தட்ட 5000 கிலோக்கிறாம் விளைச்சலை இது தந்துள்ளது. இம்முறை ஏற்ப்பட்ட பெரு வெள்ளம் காரணமாக அழிவுற்ற நிலையிலும் இந்த விளைவு கிடைத்துள்ளது. எமது குழுமத்தின் முயற்ச்சியில் இவர்களுக்கான முன்மாதிரி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பரீட்சிக்கப்பட்டுள்ளது. 

இந்த சோளச் செய்கையில் விவசாயிகள் புதியதோர் அனுபவத்தினை பெற்றுள்ளதாக தெரிவித்தனர். சந்தையுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தும் முயற்ச்சி பலிதமாகி உள்ளது. எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பாதை வரையப்பட்டுள்ளது என்றே இதைப் பார்க்கும்போது தெரிய வருகிறது. இவை அனைத்தும் நேரடியாக பெறுமதி சேர்க்கப்பட்ட உற்ப்பத்திகளை கொண்டுவருவதற்க்காக கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருப்பினும் கவிஞ்ஞர் வைரமுத்து சொன்னதுபோல், இலங்கை விவசாய நாடுதான். ஆனால் இது இன்று விவசாயிகளுக்கான நாடு அல்ல. இன்று விவசாயம் என்பது கல்வி கற்காத மனிதனின் கடைநிலைத் தொழில் என்று ஆகிவிட்டது. விலங்குகளைப் போல உழைக்கிறவனும் தன் விலங்குகளுக்கும் சேர்த்து உழைக்கிறவனும் விவசாயிதான். ஆனால் விலங்குகளுக்கு இருக்கும் உத்தரவாதம் விவசாயிக்கு இல்லை. ஏனென்றால் விலங்குகள் தற்கொலை செய்துகொள்வதில்லை
  


0 comments:

Post a Comment