ADS 468x60

19 December 2016

காந்திபுரத்தில் உடுபுடவைகள் கொடுத்து உதவினோம்

 //மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு//. இன்றய நாள் (2013.04.13) முந்திய வருடங்களை விட இனிதாக இருந்தது என்றே எண்ணத்தோன்றுகின்றது. எமது குழுமத்தினர் நேரம் காலம் அறிந்து ஒரு மகத்தான சேவையை செய்து தற்போதுதான் திரும்பினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒளிபொருந்திய புத்தாண்டாக விஜய வருடத்தினை வரவேற்க்க தயாராக இருந்துகொண்டு இருக்கிறார்கள். அப்படி இருந்தும் இன்னும் இருளில் வாழ்க்கையை கடத்திக்கொண்டு நாளாந்தம், விஷ ஜந்துக்களின் தொல்லையால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சமுகத்தினை சின்னக்காந்திபுரம் எனும் இடத்தில் கண்டு அவர்களுக்கு ஒரு தொகுதி உடுபுடவைகளை கொடுத்து உதவினோம்.. 

அது போல் பாம் கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கும் இன்னொரு தொகுதி உடுபுடவைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பிறின்ஸ் மாணிக்கம் அண்ணன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட பெறுமதியான உடுபுடவைகள், மிகவும் வறுமையில் வாடிய மக்களுக்கு கொடுத்து உதவப்பட்டது. அவர்களுக்கு இக்குழுமத்தின் சார்பில் மிக்க நன்றிகள். சின்ன காந்திபுரத்து மக்கள் தெரிவிக்கையில் 'இக்கிராம மக்கள் மிகவும் எல்லா வகையிலும் சிரமப்பட்டுக்கொண்டு சொல்லொண்ணா துன்ப்பப்படுகிறோம், மின்சார வசதி இல்லை, யானை வேலி இல்லை, ஒழுங்கான வீதி இல்லை. இருப்பினும் இந்தக்கிராமத்தில் முதன் முறையாக இவ்வாறான உதவியை எங்கள் காலடியை நாடி கொண்டு உதவியமைக்கு மிக்க நன்றி' என்றார். இந்தக்கிராம மக்கள் அவர்களது புதுவருடத்துக்கான கலாசார நிகழ்வுகளை கண்டுகளிக்க வேறு கிராமங்களுக்கு செல்வதாகவும், அவ்வாறான நிகழ்வை உங்களால் எமது குழந்தைகளுக்கு செய்து காட்ட முடியுமா என்று கேள்வி கேட்டனர்' இந்தக் கேள்வியை எமது குழுமத்தினரிடம் விட்டு, இந்த சேவையில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றியுடன் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

0 comments:

Post a Comment