ADS 468x60

11 August 2017

பட்டிருப்பு தொகுதியில் ஒருங்கிணைப்பின் தேவைப்பாடு

Image may contain: 3 people, people sitting, people eating, pizza, table and foodநான் சென்ற மாதம் எமது பட்டிருப்பு தொகுதியில நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு; அழைக்கப்பட்டிருந்தேன். எனக்குள்ள அக்கறைக்கு பொருத்தமான இரு அதிகாாிகளை சந்திக்க கிடைத்தது ஒருவர் வைத்தியர் சுகுணன் மற்றவர் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி பிள்ளைநாயகம்....

05 August 2017

வாய்ப்பேச்சில் வீரனாய் இருப்பவர்களை நாங்கள் சிரித்துக்கொண்டுதான் பார்க்கிறோம்!

எல்லா பெரியவர்களும் உட்காந்து இருக்கும் மகா சபையில் வீஸ்மர், துரோணாச்சாரியார் உட்பட எல்லாம் கொதிச்சுப்போய் பெண் பாலியல் துஸ்ப்பிரயோகம் கண்முன் நடக்கும் போது அதற்கு எதிராக அந்த மகா சபையில் என்ன செய்தார்கள்? சும்மா பாா்த்துக்கொண்டு இருந்தாா்கள். வீஸ்மர் அல்லது துரோணர் போன்ற மாமேதைகளுக்கு யாரும் சொல்லிக்கொடுக்கணுமா! படித்த மேதாவிகள்தானே! இல்லப்பா இல்லை, அவர்கள் எல்லாரும் (fair weather good people) தட்பவெட்ப சூழ்நிலைகள் நன்னறாக இருக்கும் பொழுது கண்ணுக்கு முன் அபாயம் இல்லாது இருக்கும் பொழுது மாத்திரம் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள். இவ்வாறு எல்லாராலயும் நல்லவனா இருக்கமுடியும் அது ஒன்றும் பொியவிடயமல்ல தானே.

04 August 2017

வேரையறுத்தல்லோ காடை அழித்தோம்!

Related image
வேரையறுத்தல்லோ
காடை அழித்தோம்
காடையழித்தல்லோ
வீடை அமைத்தோம்
வீடையமைத்தல்லோ
பீடை வளர்த்தோம்
பீடைவளர்த்தல்லோ
கோடை ஆக்கினோம்
கோடைவந்தல்லோ
மழையை இழந்தோம்
மழையை இழந்தல்லோ
குழைகள் தொலைத்தோம்
குழைகள்வரண்டல்லோ
உணவை இழந்தோம்
உணவை இழந்தல்லோ
உண்டி வரண்டோம்
உண்டிவரண்டும்
உருவாக்கினானா காட்டை
இல்லை

உப்பூறல் கிராமத்தை பாா்த்து உடைந்துபோனோம்.

ஆறுகள், கடல்கள், காடுகள், மலைகள், வயல்கள், வாய்க்கால்கள் போன்ற வளமார்ந்த நிலபுலம் கடந்து போய்க்கொண்ருந்தோம். அங்கு சென்றதன்பின் இப்படி ஒரு துயரத்தினை பார்த்ததில்லை, கேட்டதில்லை அதனால் வேர்த்துபோனோம். அங்கு வந்திருந்த குழந்தைகளின் நிலையினைக் கண்டு ஏதோ வேற்று சமுகத்தினரை பார்ப்பதுபோல இருந்தது. சீவாத முடி, சிதைந்த உடை, பசியில் வாடிய முகங்கள் ஆனால் பார்ப்பதற்கு நல்ல அகங்கள். ஆம், சூரியன் உதிக்கும் கிழக்குப் பெருமலை, இராவணன் துதித்த திருமலை  இதன் தென்பால் மூதூர் பகுதியில் கடலும், மலையும், குளமும், வயலும், காடும், மேடும் என ஐந்நில வளமும் கொண்ட ஆரோக்கிய பூமியில் அடிமைகளாய், சொந்த நிலத்தில் கூலித்தொழில் செய்யும் ஒரு சமுகத்தினை தரிசிக்கக் கிடைத்தது உப்பூறல் என்னுமிடத்தில். இது மிகவும் பின்தங்கிய கிராமம், அடிப்படை வசதிகளைக் கூட அனுபவிக்கமுடியாத வறியவர்கள் அதிகம் வாழும் ஒரு கிராமம். ஆனால் அவர்களது நிலத்தினிலேயே இன்னொருவருக்கு கூலிவேலை செய்யும் துர்ப்பாக்கியமான குடும்பங்களை அதிகமாகக்கொண்ட மிகப் பின்தங்கிய கிராமம் இது. சுனாமியாலும், யுத்தத்தினாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மிக நலிவுற்ற மக்கள் இவர்கள்.

எங்கும் ஒலி எங்கே ஒளிப்பது?

எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?
மனிதன் இயந்திரமாக்கப்பட்டுள்ளான்
அதனால் பல முறை
மனிதத்தை துலைத்துவிடுகிறோம்..
எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?
உண்ணும் வேளை
உறங்கும் வேளை
களிவறைக்குள்
குளியலறைக்குள்
குழந்தையுடன் இருக்கும் வேளை
குதூகலத்தில் இருக்கும் வேளை
எங்கும் ஒலி
எங்கே ஒளிப்பது?

03 August 2017

மட்டக்களப்பு மண் புகழ்ப் பாடல்!

நீரோடும் நாட்டில் மீன்பாடக் கேட்டு நெல்லாடும் பூமியிது.
மட்டக்களப்பு தமிழகத்தின் தமிழர்களை தமிழால் தமிழில் தமிழ்போற்றி அன்றய எமுத்தாளர்கள் பனையோலை, செப்புத்தகடு, ஆணி இவற்றின் துணைகொண்டு எமது மட்டக்களப்பு தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு, பூர்வீகம் கொண்ட வரலாற்றுப்பதிவுகளை காலத்துக்கு காலம் எழுதிவைத்துள்ளனர். இவற்றையெல்லாம் மகாவித்துவான் அவர்கள் தேடி பொறுக்கி மான்மியத்தை எழுதி பறைசாற்றியது அந்தக்காலம்.

24 July 2017

வக்கியெல்லை கிராமத்து மக்களுக்கு அமெரிக்க பேராசிரியர்களின் விழிப்பூட்டல்.

பச்சை பச்சையாய் வயல், பால் சொரியும் பசுக்கூட்டம், கொச்சை கொச்சையாய் கனிகள் கொஞ்சி விளையாடும் மயில்கள், அச்சம் இல்லாத மக்கள் அண்ணாந்து நிற்கும் மலைகள், இவைகளை கண்டு இரசித்து கடந்து போய்க்கொண்டிருந்தோம் பல மயில்களைக் கடந்து. எமது எல்லை தெய்வங்கள் அங்குதான் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடாமல் இம்முறையும் அவர்களை பலப்படுத்தும், ஊக்கப்படுத்தும் தொடர்புபடுத்தும் ஒரு பயணமாக அமைத்துக்கொண்டேன்.

இந்தக் கிராமத்தினைப் பொறுத்தமட்டில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்தினை முன்னிறுத்தி இங்கு இருந்த மக்களுடன் இன்னும் சில குடும்பங்கள்  குடியேற்றப்பட்டிருந்தனா். அதனால் தற்போது  இக்தகிராமம் தமிழ்மக்களின் பூர்வீகக் கிராமமாக இருந்து வருகின்றது. இங்குள்ள மக்கள் பலர் விவசாயத்தினை மேற்கொண்டு வருவதுடன், யுத்தகாலத்திற்கு முன்னர் கிட்டத்தட்ட 550 குடும்பங்கள் இங்கு குடியிருந்ததாகவும் அவர்களில் வெறும் 150 குடும்பங்கள்தான் இந்த இடத்தில் தற்போது இருப்பதாகவும், அதிலும் யானைகளின் அட்காசம் காரணமாக இன்னும் பலா் இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர் என்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இந்த ஊர் இளைஞர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

எமது திட்டமிடலாளர்களின் கிராமியப் பொருளாதார அக்கறை!

எமது மாவட்டத்தினைப் பொறுத்தளவில் கிராமிய அபிவிருத்தி சார்ந்த அணுகுமுறைகள் ஒரு தெழிவு இல்லாமல் இருப்பதனை அவதானிக்கலாம். வளர்ந்து விட்ட நாடுகளைப்போல் கைத்தொழில் அபிவிருத்திக்கு மாறாக எமது கிராமப்புறங்களின் பொருளாதாரம் விவசாயம் சார்ந்து காணப்படுகின்றது. அதற்கேற்ப வளமார்ந்து காணப்படுவதுடன் அவற்றில் பரம்பரை ரீதியான பரீட்சயமும் அவர்களுக்கு இருப்பது முக்கியமானது.

எமது நாட்டின் அபிவிருத்தி வரலாற்றுப்பாதையில் கிராமிய பொருளாதார முன்னேற்றத்திற்கு தேசிய மற்றும் சர்வதேச நிதியியலாளர்கள் பல முதலீடுகளை செய்துள்ளனர், ஆனால் மாவட்ட, கிராம மட்ட செயற்பாட்டாளர்களின் வினைத்திறனற்ற அமுலாக்கல் செயற்பாட்டினால் கொண்ட குறிக்கோளினை அடைந்துகொள்ளாத வரலாறுகள்தான் அதிகம். அவர்கள் அதிகமாக இந்த கிராமப் புற மக்களிடையே நிவாரணம், நஸ்ட்டஈடு கொடுப்பதில் பாதீட்டில் அதிகம் செலவிடப்படுவதனால் மக்கள் தங்கிவாழும் ஒரு மனநிலையில் தள்ளப்படும் ஒரு நோய்க்கு அளாக்கப்படுகின்றனர். இதன் பலனால், பல வறியவர்கள் தன்னம்பிக்கையினை அதுபோல் முன்வருவருகின்ற எண்ணத்தினை மற்றும் முயற்சியாண்மையை இழந்துள்ளனர். அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்ற பல ரூபாய்க்கள், உள்ளீடுகள்; என்பவை வீட்டுரிமையாளர்களின் நுகர்வு தேவையை நோக்கி திசைதிரும்புவதனையும் காணலாம்.

23 July 2017

மட்டக்களப்பில் டெங்கு இடர் அதிகரிப்பதில்; செல்வாக்குச் செலுத்தும் சமுககாரணிகள் மீதான ஆய்வு.

 2017 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தி வரை ஒரு இலட்­சத்து 2,809 டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தோடு இந்­நோ­யினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட 268 பேர் இது­வ­ரையில் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.
இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் கண்­ட­றி­யப்­பட்­டுள்ள நோயா­ளர்­களின் தொகை­யா­னது கடந்த வருடம் முழு­வ­திலும் இனங்­காணப்­பட்ட டெங்கு நோயா­ளர்­களின் தொகையை காட்­டிலும் இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

19 July 2017

மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களின் கல்வி நிலைதான் என்ன??


வானம் தொடும் எல்லை அது. நீண்ட இடைவெளிகளைத் தாண்டி சென்றுகொண்டு இருந்தோம். பாதங்களை பகலவன் பட்ட மலைச் தொடர்கள் சுட்டெரிக்க, வெய்யிலையும் வென்றுவிடும் குளிர்ந்த புன்னகையுடன் குழந்தைகள் நடந்து வந்தனர். இரு வர்க்கங்களாக பிரிந்து கிடக்கும் எமது மக்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை இந்த குழந்தைகளின் முகத்தில் இருந்து அடையாளம் காணக் கூடியதாக இருந்தது.

ஆசை கொள்ளவைக்கும் தேத்தாத்தீவு பாமுருகன் ஆலயம்.

நிலவினை விரித்த வெள்ளை மணல் அருகே நித்திரை கொள்ளவைக்கும் மதிரை நிழல்;  சுற்றி நெல் சொரியும் வயல்வட்டை எங்கும் நெஞ்சினை தாலாட்டும் குளங்குட்டை;  கூடி குரவைபோடும் நாரைகள் சுற்றி பாடி இரையைத் தேடும் பருந்துகள்; விரிந்து சிரித்திருக்கும் கார்த்திகைப்பூ எங்கும் விழுந்து கிடந்திருக்கும் நாவற்ப்பழம்; அலை கொண்டு தாலாட்டும் ஆற்றங்கரை அருகே உவர்ப்பள்ளிச் சொரியும் உப்புத்தரை; சில்லென்று அலைமோதும் வில்லுக்குளம் அதில் அதில் சிலுசிலென விளையாடும் மீன்கூட்டம்;  இது பழகியோர்க்கு மட்டும் பயத்தை நீக்கும் காடு  அதுதான் இன்று பாலமுருகன் உறையும் பால்மணல் மேடு.

கச்சக்கொடிஸ்வாமி மலை தமிழர்களின் பூர்வீக கிராமமா?

அடர்ந்த காடு. இளந்தென்றல். துள்ளிக் குதிக்கும் மான்கள். புதர் மறைவில் முயல்கள். கீச் கீச் பறவைகளின் இசை நாதம். பஞ்சு மெத்தை புற்கள். மலைக்குன்றில் வெண்பனி மேகங்கள். மலை முகட்டில் குதித்து எழும் வெள்ளை அருவி என்பன மகிழ்ந்து இருப்பதுபோல் அங்குள்ள எம் தமிழ் உறவகள் வாழவில்லையோ என்று எண்ணத்தோன்றுகின்றது. மட்டக்களப்பின் தென் மேல் பகுதியில் தமிழ் வரலாற்று முக்கியமான இடங்களை தன்னகத்தே கொண்டுள்ள பகுதிகளுக்குள் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு முக்கியமானதாகும். இங்கு இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள அழகானதும் எல்லைக் கிராமமுமாக திகழ்வது கச்சகொடி சுவாமி மலையாகும்.

17 July 2017

இப்படியும் வாழும் ஒரு சமுகம் இன்னும் மட்டக்களப்பில் இருப்பதைக் கண்டு வியந்துபோனோம்.

இருட்டிக்கிடந்த மழை கால்களின் இடைவெளிகளுக்குள், காற்றின் கனத்த சத்தத்திற்க்கு மத்தியில் வேற்றுவாசிகளைப் போல் வியந்து பார்த்த அந்த மக்கள் கூட்டத்துக்குள் நானும் எனது நண்பனும் சிரித்துக்கொண்டு நுழைகிறோம்.

அவர்கள் இன்முகத்துடன் அந்த வந்தோரை வாழவைக்கும் குணம் மாறாமல் வரவேற்றனர். அந்த இடம்தான் 'கற்ப்பக்கேணி'. இந்த கிராமம் பல தடவைகள் யுத்தத்தினால் இடப்பெயர்ச்சிக்குள் சிக்கிய ஒரு தனி காட்டுப்பகுதியில் அமைந்துள்ள நலிவுற்ற பிரதேசமாகும். இது மட்டக்களப்பு நகருக்கு மேற்க்கே வவுணதீவுப் பிரதேச எல்லைக்குள் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

யாருக்கு தெரியும் இன்னும் தமிழர்கள் இருட்டுக்குள் கிடப்பது

கால்கள் நகர மறுத்தன ஓங்கிக் குலை(ர)க்கும் நாய்களின் சத்தம், ஓரங்களில் நிற்க்கும் பற்றைக்காடுகள், தேங்கிக் கிடக்கும் மழை தண்ணீர்,  இவற்றுக்கு இடையே மின்னிக் ஒளிரும் குப்பி விளக்குகளின் அடியில் மண்டியிட்டுக் கிடக்கும் குழந்தைகளை போகும் இடம் எல்லாம் கண்டோம்.

எமது நாடு எங்கோ சென்று கொண்டிருக்கிறது, இருந்தும் இன்னும் இருளில் மண்டிக் கிடக்கும் எம் தமிழ் குழந்தைகளின் கல்வியும், இருள் மயமாய் போய்விட்டது. அது ஒரு கசப்பான அனுபவம். சென்ற பரம்பரை அந்த  கல்விச் செல்வத்துக்கு உரித்தற்றவர்களாக நடந்த கொடிய யுத்தம் அவர்களை நிர்க்கதியாக்கியுள்ளது.

உன்னை வரவேற்று வாழ்த்துகிறேன்..

ஓ போகிறாயா ஆண்டே!
மீட்டிப்பார்க்க துடிக்கும் தந்திவழியே, 
நீ தொலைந்து போனாலும்
கருப்புப் பெட்டிபோல்
என் நெஞ்சம் 
கொஞ்சமாய் திரும்பிப் பார்க்கிறது.

16 July 2017

மீன் பாடும் நாட்டில் கொட்டிக்கிடக்கும் அழகு!

உலகம் இன்று விரல் நுனியில் தவழும் அளவுக்கு சுருங்கி விட்டது. மெல்ல நகர்து கொண்டிருக்கும் இந்த உலகத்தினுள் சமிப காலத்தில் பாரிய பொருளாதார, வள வேறுபாடுகள் வேரூன்றி விட்டது. இது 'உலகை ஏழைவர்க்கம் மற்றும் பணக்காற வர்க்கம் என  இரண்டாப் பிரிக்கும் அளவுக்கு விஸ்வரூம் எடுத்திருக்கிறது' என, 1986 இல் ரண்ணன் வெற்ஸ் என்பவர்  குறிப்பிட்டிருந்தார். உலகில் ¾ பங்கினர் 16 சதவீதமான வருமானத்தினை மட்டும் அனுபவிக்க மற்றய 84 வீதமான உலக வருமானத்தினையும் உலகின் 20 வீதமான மக்கள் மட்டும் அனுபவிக்கும் ஏற்றத்தாழ்வான உலகில் எங்கள் வாழ்க்கை நகர்கின்றது.

 ஐக்கிய நாடுகள் சபையின் இப்போதய அறிக்கையின்படி, உலக சனத்தொகை 7 வீதத்தில் இருந்து இது 2050 இல் 9.1 பில்லியனாக உயரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதிசயமும் ஆபத்தான விடயமும் என்னவெனில் இதில் 90 வீதமான மக்கள் தொகை ஆசியா போன்ற வளர்முக நாடுகளிலேயே காணப்படும் எனக்கூறப் பட்டுள்ளது, அப்படியானால் இவர்களுடைய எதிர்கால வாழ்கை, வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் வளப்பகிர்வுகள் எவ்வாறு இருக்கும் என சிந்தித்துகூட பார்க்க முடியாமல் இருக்கின்றது.

15 July 2017

மீனவர் சங்கங்கள் வலுப்பெறவேண்டும்.

நமது கிராம மக்களை முன்னேற்றுவது எமது மாவட்ட ஒருமைப்பாட்டுக்குப் பக்கபலமாக நிற்கும் என்கிற புனிதக் குறிக்கோள்களை நோக்கி நமது லட்சியப் பயணம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இந்தக் குறிக்கோள்களுக்கு கூடத் தடைகள் ஏற்படலாம் என்பதை வரலாறு காட்டுகிறது.

14 July 2017

தொழில் துறை மீதான தவறான பார்வையினை களையவேண்டும்.


நாங்கள் இன்னும், எங்கள் சமுகம் மற்றும் மாணவர்கள் இடையே இருக்கின்ற தொழில் துறை மீதான தவறான பார்வையினை களையவேண்டும். அவர்களை தொழில் துறைக்குள் கவர்ந்திழுக்கும் மார்க்கத்தினை கிராம மட்டத்தில் இருந்து மாவட்ட மட்டம் வரை விாிவாக்கம் செய்ய வேண்டும். 

இன்று எமது நாட்டில் அதிக தொழிலாளர்கள் வேலைபார்க்கின்ற, அதிக வருமானத்தினை ஈட்டித்தரும் துறைகளாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு (பணிப்பெண்கள்), தேயிலை தொழில் சாலை மற்றும் ஆடைக் கைத்தொழில் துறைகள் காணப்படுகின்றன. இவற்றில் வேலைசெய்வோர் அதிகம் திறனற்ற தொழிலாளிகளாகவே இருக்கின்றனர். ஆனால் ஊழியர்கள் ஆகக்குறைவாக அதே நேரம் தொடர்பான திறனுடன் உள்ள தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ளவர்கள் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும்போது பன்மடங்கு வருமானத்தினை ஈட்டித்தருகின்றமை குறிப்பிடதடதக்கது. 

06 July 2017

ஒரு நாட்டின் திறனுள்ள இளைஞர்களே அதன் வளர்ச்சியின் முதுகொலும்பு

அறிமுகம்.
இலங்கை சமுகரீதியான நல்ல கொள்கைகளை அழுல்படுத்தும் பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்ற ஒரு மாதிரி நாடாகும். இருப்பினும் தசாப்த காலமாக இளைஞர்களிடையே வேலைவாய்பை உருவாக்குவதிலும் அவர்களது ஏனைய தேவைகளை நிறைவுசெய்வதிலும் பாரிய சவால்களை அரசு எதிர்நோக்கி வருகின்றது. எவ்வாறாயினும், இளைஞர்களே ஒரு நாட்டின் எதிர்காலத்தின் பிரதிநிகள். அவர்கள் அந்த நாட்டின் அபிவிருத்தியில் பாரிய பங்கினை வகிப்பது அவர்களது கடமை. ஒரு நாட்டினுடைய உற்பத்தி அந்த அரசாங்கத்தின் உதவியைவிட அந்த நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களின் பங்களிப்பில் இருந்து வருகின்ற ஒன்றாகும். ஆக ஒரு நாட்டினுடைய அபிவிருத்தி இளைஞர்களின் தோழ்களிலேயே தங்கி இருக்கிறது. 

05 July 2017

ஏமாற்றப்படும் மட்டக்களப்பு வாழ் மக்கள்.

நாம் எப்படியெல்லாம் ஏமாறுகின்றோம் என்பது தெரியுமா? கட்டாயமாக வரும் ஏமாற்றம், ஆறியாமையினால் வரும் ஏமாற்றம், கவனக் குறைவினால் வரும் ஏமாற்றம், பேராசையினால வரும் ஏமாற்றம். இதில் முதல் மூன்றுவகையிலும் தோ்தல் காலங்களில் எமது மக்கள் செமயா ஏமாந்து விடுகின்றார்கள் என்பதற்கு அப்பால் ஏமாற்றப்படுகின்றனர் என்பதுதான் உன்மை.

இன்று பார்த்தீர்களானால் தேவையில்லாத எதிலாவது எமது மட்டக்களப்பு மாவட்டம் முதலிடத்தினைப் பெற்றுவிடுகின்றது எல்லாம் ஏமாற்றுவதற்கான முஸ்த்தீபுகள்தான். அதில் கடந்த தடவை பா.ம. தேர்தலில் மாத்திரம் 16 அரசியல் கட்சிகளும் 33 சுயேட்சைக் குழுக்கழுமாக மொத்தம் 49 கட்சிகள், ஆக கட்சிகள் அதிகமாக களமிறக்கப்பட்டிருக்கும்  ஒரு மாவட்டமாக எமது மட்டக்களப்பு மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டிருந்தமை இந்த மாவட்ட மக்களை மடையர்களாககி, வாக்குகளை சிதறடிகும் செயற்பாடுகளுக்கு செய்யப்பட்டுள்ள முதலீடுகளாகும் என்பதனைப் புரிந்துகொள்ளலாம்.

01 July 2017

அதிசயமாய் அமைந்த ஸ்ரீ பால முருகன்...

பெரிய அடர்ந்த காடு, வில்லுக்குளத்தின் ஓரங்காரங்களில் ஓங்கி வளர்ந்த மதுரை மரங்களின் இடையே முளைத்து நின்ற பற்றைக்காடுளினுள் ரீங்காரமிடும் சில்லூறுகள், சீனிக்கற்கள் போல் பால் மணல் மண்ணில் உயர்ந்த நாவற்சோலை, அதன் அருகே பெரியவட்டி, சின்ன வட்டி, உப்பு வட்டிக்குளங்களின் பசுமையின் அரவணைப்பில்; பாடித்திரியும் பறவையின் ஒலி, பக்கத்தில் ஆலையடி முன்மாரிக்கண்ட வயல் ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான பயங்கொள்ள வைக்கும் நிஷப்த இடம்.

29 June 2017

மட்டக்களப்பில் கேடு விளைவிக்கும் புற்றுநோய்க்கு சூடு வைக்கும் கருவி அன்பளிப்பு..

"இலங்கையிலயே கிழக்கு மாகாணத்தில்தான் அதிகளவான புற்றுநோயளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்னும் சுகாதார அமைச்சின் அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் தெரிந்த விடயமே'" இருப்பினும் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களுக்குள் பாரிய உட்கட்டுமான வளர்ச்சிகள் ஏற்ப்பட்ட போதிலும் சுகாதாரம், வாழ்க்கைத்தர உயர்வு என்பன பெரிய அளவில் ஏற்படவில்லை என்பது கசப்பான உன்மை.

உலகில் வளர்ந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து காணப்படுவதற்கு அவர்களால் அனுபவிக்கப்படும் தரம் வாய்ந்த அடிப்படை வசதிகளே காரணங்களாகும். கடந்த யுத்த காலத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழுகின்ற மக்கள் இடப்பெயர்வு, வாழ்வாதார இழப்பு, உயிர் இழப்புக்கள், காரணங்களாக தங்களது அடிப்படை வசதிகளைக்கூட அனுபவிக்க முடியாதவர்களாக இருந்து விட்டமை துரதிஸ்ட்டமே.

குறும்படத்தின் வெளியீட்டு நிகழ்வு..

ஜோயல் J.R  இன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள  ''தேவதை Returns'' குறும்படத்தின்  வெளியீட்டு நிகழ்வு, நேற்று   25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்முனைநெற் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் சிறப்பாக  நடைபெற்றது.

திரு. சபா. சபேசன் தலைமையில் இடம்பெற்ற   இந் நிகழ்வில் என்னுடன் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் திரு. வீ.தவராசாவும், கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்  ஆர். முரளீஸ்வரனும்  கலந்து கொண்டு வெளியீட்டு வைத்தனர்.

28 June 2017

எல்லைக் கிராமங்களை எடுத்தேத்துதல்- 40ம் கொலனி

கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையானது மற்றுமொரு தொகுதி இசைக்கருவிகளை 40 ஆம் கொலனியிலுள்ள வம்மியடியூற்று சிவசக்தி கலாமன்றத்திற்கு 26.06.2017ஆம் திகதியன்று வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் இந்த நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக பல கலையாற்றுகை நிகழ்வுகளையும் சிறுவர்கள் அரங்காற்றுகை செய்தனர். அந்தச் சிறுவர்களுக்கு செய்த சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

27 June 2017

சத்துணவுத் திட்ட மீளாய்வு- சுரவணையடியூற்று பாலா் பாடசாலை

கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையின் ஒருங்கிணைப்பில் Nick & Nelly foundation  நிதியுதவியுடன் சுமார் ஒரு மாத காலமாக ஆரம்பிக்கப்பட்ட பாலர் பாடசாலைக்கான சத்துணவு வழங்கும் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை மீளாய்வு செய்யுமுகமாக இன்று பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரகள்;, சங்கங்கள், கழகங்களின் பிரதிநிதிகள் போன்றோரைச் சந்தித்து இந்நிகழ்ச்சித் திட்டத்தின் குறை நிறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. 

24 June 2017

தலைவர்களாக வரத் தகுதியானவர்கள்!

இந்த முகங்களில் நீங்கள் எதை படித்துக் கொள்ளுகிறீா்கள்! இவைகள் இலகுவில் ஏமாறக்கூடிய முகங்கள்! ஏங்கித் தவிக்கும் முகங்கள், பசியில் வாடிய முகங்கள், பாசத்துக்கு ஏங்கும் முகங்கள் இல்லலையா! ஆம், பாதுகாப்பால், பணத்தால், இடத்தால், வசதியால் கல்வியால் மிகவும் பின்தங்கிய குழந்தைகள், மிக்க நலிவுற்றவர்கள் எதிலும் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்கள்... இதனால்தான் இவா்களை இலவில் மதமாற்றிக் கொள்ளுகிறார்கள், திருமணம் செய்து இடையில் விட்டுச் செல்லுகிறார்கள், இவர்களது வியர்வை சிந்திய உற்பத்தியை கண்ணைப் பொத்தி களவாடுகிறார்கள், இவா்களது ஆட்டையும் மாட்டையும் அடாத விலைக்கு ஆட்டைபோடுகிறார்கள், அஞ்சிக்கும் பத்துக்கும் நிலத்தை சுவீகரிக்கிறார்கள் பாவம்.

21 June 2017

பெற்றவா்கள் எல்லாம் அப்பாக்கள்!

கூடு கட்டும் குருவி
வயலில் பாயும் அருவி
தோகை விரிக்கும் மயில்
தொடர்ந்து பாடும் குயில்

வண்டி இழுக்கும் காளை
பொதி சுமக்கும் கழுதை
நிழல் தரும் மரம்
நிலவினை தொட்டவர்
அத்தனையும் அப்பாக்கள் தான்

இருந்தும்,

16 June 2017

நஞ்சை உண்ணுகிறோம்!

எம்மைப் பொறுத்தளவில் உழவுத் தொழில் அல்லது விவசாயம்; என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான். 

நம்புங்கள் முருகன் நல்லவன் .


நான் சிறு வயதில் அப்பாவுடன் மாரிப்போக வேளாண்மை செய்வதன் நிமித்தம், ஆலயடி முன்மாாிக்குள்ள உழவுவதற்காக கலப்பையை கொழுவி இரண்டு வெள்ளை மாடுகளை விரட்டிக்கொண்டு மதிரங்கேட்டியை மரத்தில் வெட்டி எடுத்து, காலைவேளையில் கட்டோரமாக வில்லுக்குளம் நோக்கி நடந்த நாட்கள் ஞாபகம் வருது.

06 June 2017

நதியாக நான் மாறவேண்டும்

நதியாக நான் மாறவேண்டும்-அதில்
சுதியோடு மீன்பாட அலை பாய வேண்டும்
கதிராக நான் மாற வேண்டும்-களத்தில்
கவிவந்து செவியோரம் தேன்பாய வேண்டும்
கடலாக நான் மாற வேண்டும்-மறவர்
துயில்கொள்ள மடி தந்து தாலாட்ட வேண்டும்..

04 June 2017

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- தொடர் 02

என்னதான் இருந்தாலும் '''பழையன கழிதலும், பதியன புகுதலும் வழுவல.'' என்கிறது தொல்காப்பியச் சூத்திரம் சொல்லுவதுபோல் காலத்திற்கும், தேவைக்கும், சூழலுக்கும் பொருந்தாதவற்றை தவிர்த்துவிடுவதும், உகந்தவற்றை புதிதாக உள்வாங்கிக் கொள்வதும் தவறல்ல. ஆக இது பண்பாட்டிற்கும் பொருந்தும். இன்னுமொருபடி சொல்வோமானால் மாற்றம் என்ற சொல் வேண்டுமானால் மாறாமல் இருக்கலாம். ஆனால் மாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். என்றார் கால்மாக்ஸ்.

இதைத்தான் மானிட இயங்கியல் என்கிறார்கள். பண்பாடும் இவ் மனிதஇயங்கியல் வயப்பட்டதுவே. இன்றைய காலத்தின் தொழில் நுட்பவளர்ச்சி, உலகமயமாக்கம், மனிதத் தேவைகள், அரசியல், பொருளாதார சமூகவியல் நிலைகள். பண்பாட்டியல் கூறுகளில் மாற்றங்களையும், மருவல்களையும் ஏற்படுத்துவது தவிர்க்கமுடியாதது.

மட்டக்களப்பின் வரலாற்றுப் புத்தகத்தில் புரட்டிப் படிக்கவேண்டிய ஒருவா்.

நெடு நாள் ஆசை ஒன்று, அது மட்டக்களப்பின் முது பெரும் அரசியல், இலக்கிய, கலை ஆர்வமிக்க ஒரு பேராளன் ஒருவரை பார்க்க வேண்டும் என்றுதான். அது தானாகவே எனக்கு கனிந்து வந்தது ஒரு நாள். அவரின் வாழ்க்கை பற்றி அறிய ஆசைப்பட்டேன், நேரில் சந்தித்தேன், நிறையவே பகிர்ந்து கொண்டார், அது வேறு யாருமில்லை சொல்லின் செல்வர், நாவல்லவர் செல்லையா இராசதுரை அவர்கள் தான். 

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- தொடர் 01

 'நாங்கெல்லாம் அந்தக்காலத்தில ஒரு கிணற நாலுபேரு சேந்து தோண்டி முடிப்பம், பக்கத்தில ஒரு கள்ளுக் கொடம் இருக்கும், மரவள்ளிக் கிழங்கு அவியல், கச்சான், கடல இதெல்லாம் வந்தவண்ணம் இருக்கும், கிணறும் முடிய கள்ளுக் கொடமும் முடியும்' என வீர தீரமாய் அப்போ வேலை செய்தாங்களாம் இப்படி  ஒருவர் சொன்னார். 

சனத்தொகை குறைந்த காலம், இயந்திர மயமாக்கல் இல்லாதிருந்த காலம் மனித நாகரிகம் வளர்ச்சியின் ஆரம்பத்தில் மனிதாபிமானத்தை மாத்திரம் கொண்டிருந்த காலம், இவன் என்ன செய்யுறான், அவள் என்ன செய்யிறாள் என யாரும் நோட்டமிட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அன்று சிசிரிவி கமறா, கூகுள் மப், ஸ்மாட்போன் என்பன வந்திருக்கவில்லை, ஆனால் இன்று மாறிப்போச்சி உலகமே ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு வகையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

02 June 2017

சிலப்பதிகார பாட்டுடைத் தலைவிக்கு மட்டக்களிப்பில் மண்மணக்கும் சடங்கு..

கோடை மழை பெய்ய வேண்டும், கொடும்பாவம் அகல வேண்டும், நாடிவரும் அடியவர்கள் துன்ப துயரம் அறவேண்டும். பாடி ஓடி ஆடி வரும் அடியவர்கள் தேடி தேடி கண்ட பொருள், உன்மை, அறம், ஒழுக்கம் என பல உன்மைகளை இந்த சடங்கு விழாக்களுக்குள் புதைத்து மக்களை ஒன்றுபடுத்தி,  சகோதரத்துவம், ஒத்தாசை, விட்டுக்கொடுப்பு, விருந்தோம்பல், கொல்லாமை போன்ற நல்ல பண்புகளை புகட்டும் இந்த பண்பாட்டு மரபுகள் அன்று மட்டமல்ல இன்றும் நின்று நிலைப்பதை மீன் பாடும் தேனாட்டில் எங்கும் காணலாம்.

01 June 2017

மட்டக்களப்பு தமிழ் எல்லைக் கிராமங்களை எடுத்தேத்த என்ன வழி செய்கிறார்கள்!!

கானல்நீர் ததும்பும் காய்ந்த வயல்வட்டைகள், குன்றும் குழியுமான உடைந்த வீதிகள், தலையில் மொக்காடு போட்டு தண்ணீருடன் செல்லும் மங்கையர், கொம்பை நீட்டி குளத்தில்; குளிக்கும் எருதுகள் இடையிடையே வரண்டு போய் வாடி நிற்கும் விருட்சங்கள் என பல காட்சிகளை கடந்து தும்பங்கேணி வம்மியடி சந்தியில் கிறுகி ஒரு தீவகற்பமாக இருக்கும் துரவந்தியமேடு கிராமத்தினை அடைந்தோம். 'கண்களில் வரட்சி இருந்தாலும் சின்னக் கைகளில் செவ்வரத்தம் மாலையுடன் எங்களை வரவேற்க ஆரம்பமான சிறார்களின் சுதந்திரமான ஆரோக்கியமான அந்த பாடசாலை நாட்களை தேடும் கண்களை அடையாளங்காட்டிக்கொண்டிருந்தது அவர்களது முகங்கள்'

31 May 2017

கல்வியில் வறுமை மட்டக்களப்பு மக்களுக்கு சாபக்கேடா!

இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மட்டக்களப்பு ஒரு புராதன, பாரம்பரியம் வாய்ந்த தமிழ் மக்களை அதிகம் கொண்ட வரலாற்று முக்கியம் பெற்ற வளமார்ந்த இடமாகும். 'ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்' என்றாள் ஒளவை இந்த அழகுக்கு அழகு சேர்கும் வாவிகள் நிறைந்த, கடற்கரைகள், வயற்புலங்கள், காடுகள் மலைகள் என அனைத்து நிலவமைப்பையும் கொண்ட வளம் நிறை நாடு எமது மீன்பாடும் தேநாடு ஆகும் பெருமைதான்.

29 May 2017

யார் இந்த மயில்வாகனன்!

மீன் மகளின் மூத்த வாரிசு
மேன்மைகொள் சமயப் பிதாமகன்
முத்தமிழை தத்தெடுத்த வித்தகன்
மூவுலகும் வணங்கும் துறவி

வெள்ளையனின் ஆதிக்கத்தில்
வேரறுந்த எம்மினத்தை
பள்ளிகள் கட்டி பாரில் உயர்தியவர்..

26 May 2017

விபுலாநந்தர் பணியில்

இவர் பணியில் செல்ல இலகில்
எவர் உண்டு இன்னும் உலகில்

மட்டு மாநிலத்தின் சொத்தாய்
எட்டுத் திசையும் மலர்ந்தகொத்தாய்
முருகனின் அருளால் மயில்வாகனனாய்
முத்தமிழில் உருகி வித்தகனாய்

துறவில் கலந்து விபுலாநந்தராய்
தமிழை உயர்த்தும் பேராசானாய்
மொழியில் தேர்ந்த விஞ்ஞானியாய்
அறிவில் தெழிந்த கலைஞ்ஞராய்

23 May 2017

படுவான்கரையில் சிறுவர்களுக்கு நடப்பது என்ன? அதிபரின் அதிர்சியூட்டும் தகவல்.

 அதிர்ச்சியில் உறைய வைத்தது அந்தத் தகவல். ஏனைய சமுகம் மூக்கில் விரல்வைக்க காரணமாக இருந்த அதே எமது கல்விச் செல்வம் இன்று அவர்களாலயே பரிகாசிக்கும் அளவுக்கு அது எம்மக்களிடையே பின்தள்ளப்பட்டுள்ளது.

'இந்த போரதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் கிட்டத்தட்ட 345 பாடசாலைச் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் இடையில் நிற்கின்ற அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கல்வியறிவை முழுமையாகப் பெறமுடியாத சமுகமாக உள்ள இந்த மக்கள், நாளாந்த வாழ்க்கையில் அதிகளவான ஏமாற்றங்களையும், பின்னடைவுகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் இங்குள்ள பாடசாலைகள் அதிகஸ்ட்டப் பிரதேசமாக வரையறுக்கப்பட்டுள்ளது எனவும் இதனால் நல்ல ஆசிரியர்களை இங்கு வரவழைத்து கல்வியை முன்னேற்றுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கிழக்குப் பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரையாளரும், மட்/ மகிழூர் வித்தியாலய அதிபருமாகிய திரு.பிரபாகரன் அவர்கள் இந்த மாணவர்கள் பெற்றோர்களிடையே உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

20 May 2017

மேலும் தண்ணி கீழும் தண்ணி புலம்பும் இடம்பெயர்ந்த மக்கள்..

'வெள்ளம் விட்ட பாடில்லை இன்னும், ஆடு, மாடு எங்கட வீடு எல்லாம் தண்ணிலதான் கிடக்கு ஓடி வந்து இங்க கொடுவாமடு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறம்' என்று ஒரு அம்மா அடிக்கும் மழையின் நடுவில் கொடுகிக் கொண்டு சொன்னார்.

மெதுவாக ஆனால் பாரிய சேதத்தினை ஏற்ப்படுத்தும் அனர்த்தங்களில் வெள்ள அனர்த்தம் முக்கியமானது. இலங்கையில் தாழ்ந்த பிரதேசங்களில் கிழக்கு மாகாணம் தொடர்ந்து வெள்ளத்தினில் பாதிக்கப்பட்டு வருவது பதிவாகியுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேசத்தின் வேப்பவெட்டுவான் பகுதியில் இருந்து 18.12.2012 அன்று அவசரமாக இடம்பெயர்ந்து கொடுவாமடு பாடசாலை மற்றும் அங்குள்ள பிரம்பு தொழிற் பயிற்சி நிலையங்களில் தங்கியுள்ள 143 பாதிக்கப்பட்ட மக்களை பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் வேண்டிக்கொண்டதற்க்கிணங்க 22.12.2012 அன்று பார்வையிட்டு அவர்களுக்கான ஒரு தொகை உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தோம்.

மட்டு நகர் மேடை மேலே!

மட்டு நகர் மேடை மேலே
மீன் மகள் பாடுது
வாவி மகள் ஆடுது
பேர் கொண்டது கலையில் பேர் கொண்டது

மட்டு நகர் மேடை மேலே
மீன் மகள் பாடுது
அலையில் சுருதி கூடுது
பேர் கொண்டது கலையில் பேர் கொண்டது

18 May 2017

நினைக்க முடியாத பிரிவில்

என் இனத்தின் சாவைக்கூட 
நினைக்க முடியாத பிரிவில்
நானும்!
கொத்துக் கொத்தாக உயிர்கள்
ஆகுதியான போது - அதில்
மகிழ்ந்து, 

முள்ளி வாய்க்கால் முற்று!

முள்ளி வாய்க்கால் முற்று
முடிந்து போகாத கூற்று
ஆப்பாவி மக்களின் பாவம்
அடங்காது அவர்களின் சாபம்

18 April 2017

கல்வியில் முன்னிற்கும் இலங்கைப் பெண்களின் ஊழியச்சந்தையின் நிலைப்பாடு

உலகலாவிய ரீதியில்; கிழக்கின் நாகரிகம் எப்பொழுதும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றது. பெண்னே குடும்பத்தின் தலைவியாகவும், அந்தக் குடும்பத்தின் பாரங்களை சுமக்கும் ஒருத்தியாகவும் இருந்து வந்துள்ளாள். அதனால்தான் பல கீழைத்தேய நாடுகள் பெண்களை தெய்வமாக வணங்கி வருகின்றமை ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றது. 

இதனால் பண்டைக் காலத்தில் சமுகத்தில் அவர்கள் மதிப்பினையும், முக்கிய வகிபாகத்தினையும் கொண்டிருந்தனர். இந்த நிலை மேலைத்தேயத்தவர்களின் வருகையின் பின்னரே அவர்களது எழுத்துக்களால், சிந்தனைகளால் மற்றும் விமர்சனங்களால் மாற்றடைய ஆரம்பித்தது. அத்துடன் பல நாடுகளை அவர்கள் கைப்பற்றி ஆளத்துவங்கியதுடன் சமுக அந்தஸ்த்து ஆண்களிடம் கைமாறியது. இவர்கள் மதம், மற்றும் ஆயுதம் என்பனவற்றினை கருவியாக கையிலெடுத்து போராடியமையூடாக அவர்களை சமுகத்தில் ஆஐானபாகுவாக காட்டியது எனலாம்.

மக்களின் மனதில் நிற்பவர் யார்?

'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?'  என்கின்ற கேள்விக்கு பதிலாக மனிதன் மனிதனாக, மனிதனுக்காக வாழுகின்றபோதுதான் பிறர் மனதில் நீங்காத ஞாபகத்தினை விதைத்துவிடுகிறான் என்பது பொது. இவ்வாறு அகமும் புறமும் நேர்மறையான முறையில் அனைத்து காரியங்களையும் செய்து, சாதித்து எமது பிரதேச மக்களின் மனதில் என்றும் நீங்காத இடத்தினைப் பிடித்து, மறைந்தும் மறையாமல் அனைவரதும் நன்மதிப்பினைப் பெற்று நிற்பவர்தான் இறைபதம் அடைந்த அமரர் பெ.வ.ஆறுமுகம் ஐயா அவர்கள்.

அன்னாருடன் இரண்டாவது தலைமுறையின் வரிசையில் பல காலம் கலை மற்றும் ஆண்மீகப் பயணத்தில் ஒருங்கே செயலாற்றியவன் என்ற முறையில், இவர் இன்றும் எவ்வாறு மக்கள் மனதில் நிலையாக நிற்கின்றார் என்பதனை அன்னாரது கலை, கல்வி மற்றும் சமூக ஆண்மீகப் பணிகளின் ஊடாக நிறுவலாம் என எண்ணுகிறேன்.

17 March 2017

அற்புதம் பல கூறும் கதிர்காம யாத்திரை,


இப்பொழுது அடியவர்கள் எல்லாம் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற தலமான கதிர்காமத்துக் வனங்களின் மத்தியால் நடந்து செல்லத் தொடங்கியுள்ளனர். அங்கு அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான எல்லாளனுடனான போரில்இ சிங்கள மன்னனான துட்டைகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும்இ போரில் வென்றப் பின்னர்இ இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் மகாவம்சம் நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

என்னாலும் இன்னொருவரை அப்படியே பார்த்து அதேபோன்று வரைய முடியும்.

ஒரு காலத்தில் நானும் ஓரளவு வரை கலையில் வல்லவன்தான். ஆலயங்கள், பாடசாலை, பல்கலைக்கழகம், மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என்ற எல்லா இடங்களிலும் என் கைவண்ணம் இருந்தது. என்னால் நிறைய நிறைய போஸ்ட்டர்கள், வன்னர்கள், கலைத் தோரணங்கள் என்றெல்லாம் படைப்புகள் நீண்டு சென்றன.
முந்திய தசாப்தத்தில் எனது பொழுதுபோக்கு சித்திரம் வரைதலாகவே இருந்தது. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. இருப்பினும் அதனை மேம்படுத்த போதிய வசதிகள் என்னிடம் இருந்ததில்லை, அதுபோல் எனக்குள் இருந்த இந்த சிறு திறமையை யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. அதனால் அது பெரிதாக நிலைக்கவில்லை. இருப்பினும் அது எனக்கு இறைவன் தந்த கொடையாக நினைக்கிறேன். நான் 90ம் ஆண்டுகளில் வரைந்த மகாத்மதகாந்தி. இதுதான் எனது முதல் படம். அதை இங்கு பிரசுரிக்கிறேன்.

04 March 2017

கனிவின் பொக்கிசம்,

என்னை பிள்ளை என்று
சொல்லும் போதே
எல்லை இல்லாது போகுது மனம்

அன்பினால் ஆசுவாசப்படுத்தும்
கனிவின் பொக்கிசம்,
கரைகள் இல்லாத பாராட்டை
திரைகள் போடாமல் தெரிவிக்கும்
உங்கள் உத்தமம் எப்பொழுதும்
உங்களை ஆசிர்வதிக்கும் தாயே!

22 February 2017

என்ற ஊரு!!

நாங்கள் வளர்ந்து மரமாக; மரமாய் கனி கொடுக்க;
உரம் சேர்த்த அன்னை,
பார்தால் பசி போக்கும் பசும் சோலையாக
தேத்தா மரங்கள் நிழல்தந்த தேத்தாத்தீவு தான்
எங்கள் தேனூர்க் கிராமம்

தோட்டமும் தொரவும் வயலும் வாய்காலும்
கடலும் களப்பும் குளமும் குட்டையும்
கலையும்  சிலையும் அலையும் அழகும்
நிலமும் நீருமென வளம் பல கொண்ட ஊரு!!

14 February 2017

காதலுக்கு எதுக்கடி பரிசு?

காதலுக்கு எதுக்கடி பரிசு?
மனசுக்குள் இருபதுதான் பெரிசு!
காதலிக்க கவிதை வேணுமா-உன்னை
கனவிலும் மறக்காத ஆணுமா

இன்றைக்கு கொடுக்கனுமா றோசி
அதுபோன்ற காதலெல்லாம் தூசி- இது
தெரியாதவங்க வாழ்க்கையில மோதல்
தெரிங்சிருந்தா அதுதானப்பா காதல்

உயிரிருந்தும் வாழாதே செத்து
உறவு மட்டும் மாழாத சொத்து
பயிர் விழைந்தால் வருகும் வித்து
பாசம் நுழைந்தால் காதல் முத்து

காதல் பழசுபட்டுப்போன உறவுகளில் துளிர்விடுவதில்லை

காதலர் தினம் காதலருக்கான ஒரு விடுமுறையாகக் கொள்ளப்படுகின்றது. காதலில் அன்புதான் அதை தூண்டி விட, பற்றவைக்க, ஊக்கப்படுத்த துரிதமாக இயங்கும் ஒரு கருவியாகும். இது வாழ்து அட்டைகளாலும், நகைப் பரிசுகளாலும், மலர்கொத்துக்களாலும் பரிமாறப்படும் வெறும் தினமல்லாமல் உள்ளத்தின் தேடல், கூடல், காணாமல் வாடல் கண்டதும் ஆடல் என்கின்ற உணர்வுகளின் சேருமானத்தினை பெறுமானம் சேர்த்து வெளிக்காட்டுகிற நாள்.

காதல் தேங்கிக் கிடக்கும் பழசுபட்டுப்போன  உறவுகளில் துளிர்விடுவதில்லை, இன்னும் இந்தக் காதலர் தினம் எம்முன் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் ஆசையினை, அன்பினை, உறவினை வெளிக்கொணரும் ஒரு சந்தர்ப்பம். அதனால் நீண்ட, உறுதியான, அழகான உறவின் அடிக்கல்லாக இருக்கும் காதலருக்கான ஒரு நாள் எனக் கொள்ளலாம். ஆனைத்து காதலர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

31 January 2017

வந்து உன்னை அள்ளுகிறேன்.....

கால் கழுவ களனிக்காடு
கண்டு மகிழ களத்து மேடு
பால் நிறைந்த வெள்ளைக் கதிர்
பருவம் வந்தால் தின்னும் புதிர்

வில்லுக் குளத்து வீச்சிமீன்
விடியக் கிளம்பும் சூரியன்
பல்லுத் தீட்ட ஆலங்குச்சி
பக்கத்து கோயில் மணி

உதவாதவா்கள் உள்ளவரை உருப்படாது ஒன்றும்.

மரத்தை தெய்வமாய் வழிபட்டனர் ஏன்? மரம் கனி தந்தது, காய் தந்தது, இலை குழை தந்தது, நிழல் தந்தது, நிலம் காத்தது, படுக்க மெத்தை, உடுக்க துணி, எடுக்க பை, அடுக்க அலமாரி, சுவாசிக்க காற்று, வாசிக்க கடதாசி இன்னும் எத்தனையே எத்தனையோ! ஆனா எங்க ஊரில இந்த தெய்வத்தை வைத்து பலன்பெறத் தெரியல்ல
கவலையாக இருக்கிறது, யாரும் பராமரிப்பார் இல்லை, நாட்டி நாலடி உயரமாக கூட்டி வளர்த்த இந்த மரங்களை சுற்றிய கம்பிக்கூடு, கூட இருந்த கம்புத்தடி என்பன சிலவற்றை களவாடிவிட்டனர்.
அப்பப்போ போகும்போது அழனும்போல தோணுது. ஊரில் எத்தனையோ சங்கம் கழகம் இருக்காம், எத்தனையோ உறுப்பினர்கள் இருக்கிறாங்க அது தவிர தொண்டர்கள் இவர்களுக்கு எல்லாம் ஏன் இந்த அக்கறை வருவதில்லையோ தெரியவில்லை. கோபால் எனும் ஒரு தொண்டா் எனக்கு அப்பப்போ உதவியாய் இருப்பது ஒரளவுக்கு ஆறுதலாக இருக்கிறது.

22 January 2017

ஜல்லிக்கட்டு

இது மாட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல தமிழ் நாட்டுக்கான போராட்டமாக இருப்பது மிக்க மகிழ்சி. இன்று இது உலகத்தில் ஒரு புரட்சியாகப் பார்கப்படுகின்றது. அது மாணவர்களின் திரட்சியாக நோக்கப்படுகின்றது. நெடுநாளாக அவதானித்து பெருமை கொண்டிருந்தேன், உலகத்தில் தமிழன் இவளவு தானே என்றெனக்கிருந்த சிறுமை கொண்றிருந்தேன்.

19 January 2017

நான் கற்ற பாடசாலைக்கு சென்றிருந்தேன்

நான் 16.01.2014 அன்று நான் கற்ற பாடசாலைக்கு சென்றிருந்தேன், அங்கு புதிதாக வந்திருக்கும் சின்னஞ்சிஞசுகளை ஆசையோடு பார்க்கச் சென்றேன். குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து குட்மோணிங் சொல்லி வரவேற்றது என்னை ஒரு கணம் பழய நினைவுக்கு கொண்டு சென்றுவிட்டது. 

17 January 2017

எமது மாவட்டத்தில் பெண்களின் நிலை கவலைக்குரியதே!!


பொதுவாக இலங்கையில் 150000 மாணவர்கள் வருடம் ஒன்றுக்கு உயர்தரத்தில் தோற்றுகின்றனர். அதில் 25000 மாத்திரம் தேசிய பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர். ஏனைய 125000 பேரின் நிலை? கேள்விக்குறியாகவே போகின்றது. "ஆசியாவின் அறிவு மையம்" என்ற எடுகோள் சரியான திட்டமிடல் இன்மை காரணமாக வேலையற்ற, வழியற்ற சமுகம் ஒன்றினை தோற்றுவித்துவரும் அபாயம் இன்று காணப்படுகின்றது.