ADS 468x60

04 January 2017

சுபீட்சமான பாதையை நோக்கிய ஏமாற்றங்களில்லாத ஆண்டாக மலர 2017ஐ வரவேற்கிறோம்

கடந்து வந்த கசப்பான பாதைகளின் பயணங்களை இன்னும் நாங்கள் ஒரு முன்னேற்றத்துக்கான வழிகளாக கொண்டு எங்களை நாங்கள் புதிதாக்கிக் கொள்ளவேண்டும்;. பரந்து கிடக்கும் வயல் நிலங்களும், மீன் பாடும் வாவி மகளும், கனிகள் கொட்டும் சோலைகளும், அலைகள் மோதும் ஆழ்கடலும் வருமானமும் வளர்ச்சியும் கொண்ட சமுகத்தை ஏற்ப்படுத்த போதுமான வளங்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இருந்தும் இன்னும் எம்மக்களை எடுத்தேத்தும் உணர்வுள்ள, தொண்டுள்ளம் கொண்ட, மனிதாபிமானமான ஒரு சமுதாயத்தினை உருவாக்கவேண்டும் என்கின்ற உறுதிமொழியே இன்று எம் சமுகத்தின் முன் நிற்க்கவேண்டும்.
இல்லாமை நீக்க வேண்டும் 
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும் 

என்பதற்க்கிணங்க மக்களுக்காக தொண்டு செய்வதனை நாம் எல்லாரும் சத்தியம் செய்து கொள்ளவேண்டும். பணி செய்து வாழ்வதனையே பணியாகக் கொள்ள வேண்டும். கடந்து சென்ற ஆறாத் துயரங்களில் பலர் வாழ்ந்தும் இருக்கிறார்கள் பல பலபேர் வீழ்ந்தும் இருக்கிறார்கள். வீழ்ந்தவர்கள் வீழ்ந்தவர்களாகவே கைவிடப்பட்டு வாழும் போது இறைவனை சுயநலத்துக்காக பாமாலையும் பூமாலையும் கொண்டு வணங்குவதனால்; இறைவனின் ஆசிர்வாதம் ஒருபோதும் கிடைப்பது இல்லை.  இதை தான் அன்னை தெரேசா இன்னொரு வழியில் சொல்லி இருக்கிறார் அது 'பிரார்த்தனை செய்யுங்கள் கடவுளின் அருகே நீங்கள் போகலாம், பிரார்த்தனை செய்ய முடியவில்லையா அதற்கு பதிலாக சேவை செய்யுங்கள் கடவுள் உங்கள் அருகில் வருவார் "என

வேலைவாய்ப்பின்மை, கல்வியின்மை, வருமானம் இல்லை என்று அழுது தங்கள் மானத்தையும் விற்று வயிற்றுப் பசிக்காக சோரம் போகும் எம் சமுகத்தினை மௌனியாக கைகட்டி பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்துக்குள் நாங்களும் இருக்கக்கூடாது. ஒரே மக்களாக சந்தோசமாக வாழும் வாய்ப்பினை சிந்திக்கவேண்டுமே தவிர, எம்மக்களை பூச்சாண்டிகாட்டி முருங்கை மரத்தில் ஏற வைக்கும் ஒரு பிரதிநிதித்துவத்தை அடியோடு களையும் முனைப்பு நமக்கு இருக்க வேண்டும்.

இரட்டை வேடம், ஏமாற்றம், புறக்கணிப்பு என்ற மட்டமான ஆண்டுகளுக்குள், அநாதைகளாக காலத்தை கழித்துவிட்ட இந்த மட்டு மாநில மக்களுக்கு, ஒரு சுபீட்சமான ஆண்டாக இந்த புதிய வருடம் அமையவேண்டும். தானும் தின்னாமல் பிறரும் அனுபவிக்காமல் ஏதோ நாடகம்போடும் கூட்டங்களை எண்ணி ஏங்கித் தவித்த அந்த பொழுதுகள் கழிந்து, புதுப் பொழுது புலர்ந்து இருக்கிறது.

பாவம் நம்மவர்கள், ஓடி ஓடி கோடிக் கோடியாய் செலவு செய்து வீர வசனம் பேசி மக்களை மாக்களாக்கிய பேச்சாளர்கள், வெள்ளம் அடித்து மக்களை பள்ளத்தில் வீழ்த்தியபோது, காற்றடித்து தூக்கியெறிந்தபோது, தொழில் இன்றி துவண்டு விழுந்தபோது இவர்களில் பலர் எங்கே சென்றார்கள்?? அவர்களுக்கெல்லாம் மக்களில் அக்கறை இல்லை, எமது சமுகத்தில் பரிதாபம் இல்லை. பிறந்திருக்கும் ஆண்டிலாவது மக்கள் நம் பாதுகாப்பான, நம்பிக்கையான எதிர்காலம் பற்றி சிந்திக்க தலைப்பட வேண்டும். 

நாங்கள் வெறுத்தொதுக்கும் உத்தியோகத்தர்கள்தான் அனர்த்த காலங்களில் உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்கள், இரவு பகல் பாராது பாடுபட்டிருக்கிறார்கள். நாங்கள் உன்மையானவர்கள் யார்? போலியானவர்கள் யார்? என்பதனை கண்டு கொள்ள கடவுள் எங்களுக்கு தரும் சந்தர்ப்பங்களாக இவற்றை நினைத்துஇ எங்கள் மக்கள், எங்கள் சமுகம்இ எங்கள் குழந்தைகள் என்ற மனநிலையில் வாழுவதன் மூலம் இந்தச் சமுகத்துக்கு உதவி செய்தவர்களாக மாறுவோம்! என்று உறுதி கொள்ளுவோம்.

அனைவருக்கும் சுபீட்சமும் ஆசீர்வாதமும்,  மாற்றமும் நிறைந்த ஆண்டாக மலர வாழ்த்துக்கள்.

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா!
பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா!

0 comments:

Post a Comment