ADS 468x60

17 January 2017

ஆயிரம் இளைஞர்கள் துணிந்துவிட்டால் ஆயுதம் எதுவும் தேவையில்லை.


நாங்கள் மீண்டும் ஒரு முறை உங்களுடன் உறவாடலாம் என நினைக்கிறோம். நாங்கள் பல காரணங்களால் கடந்த தசாப்தங்களில் பிளவுபட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு நாலா பக்கமும் தாய் வேறு, பிள்ளை வேறென சிதைந்து, நாடு விட்டு நாடு போய், சில்லாங்கொட்டை போல் கலைந்து கிடக்கிறோம்.

'அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிக்கிற கதையாக' இருக்கிறதோ! எங்களுக்கிடையிலான ஒற்றுமை இன்மை என எண்ணத் தோன்றுகின்றது. நான் நாளாந்தம் பார்க்கும் எம்மக்களின் அவலம் எண்ணிலடங்காது, சொல்லி மாளாது.
வறுமை, கொலைச்சம்பவங்கள், மாணவர் இடைவிலகல், வேலையின்மை, ஓழுக்கச் சீர்கேடு, மதுபோதைப் பாவனை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என எண்ணற்ற பிரச்சினைகளுடன் போராடும் எம் மக்களுக்கு நாங்கள் என்ன செய்யலாம்? என புத்திஜீவிகளும், படித்தவர்களும் சிந்திக்க வழிநடத்த தலைப்பட வேண்டுமே தவிர வேறொன்றும் அல்ல. அதற்க்கு எமது அயல் சகோதரர்களே எடுத்துக்காட்டு.

அப்படித் தலைப்படாத காரணத்தினால் தான் நாளாந்தம் எம் சமுகம் பின்னடைந்து செல்கிறது.ஏங்கித் தவிக்கும் இந்த சமுகத்துக்கு எடுத்துச் சொல்லும் ஒரு இளையோர் படையணி தேவை. இம்மக்களை அக்கவறையுடன் ஒவ்வொரு விநாடியினையும் அவர்களை கரைசேர்க்கும் முயற்ச்சியில் பல வழிகளில் எமது உறுப்பினர்கள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறோம்.

படித்த குறிப்பாக பல்கலைக்கழகத்தில் படித்த படித்துக்கொண்டிருக்கிற அன்புள்ளம் கொண்ட எமது மாணவமணிகளே உங்களை நோக்கி அறைகூவுகிறோம். 

இந்த மாநிலத்தை முன்னேற்றுவதில் எம்முடன் சேர்ந்து உங்களது அறிவுத்தோழைக் கொடுங்கள். அதற்க்காக அனைவரையும் எம்முடன் வந்து சேருமாறு அழைக்கிறோம்.

"படித்தோம், வேலை ஒன்றைப் பிடித்தோம் அழகான மனைவி, வீடு என்று செற்றிலாகிற்று நாட்டுக்கும் நம்மைப் படிப்பித்த சமுகத்துக்கும் பயனற்று அவர்களை நட்டாற்றில் விட்டு செல்லும் மனப்பாங்கை மாற்றுங்கள்".

உங்களால் முடியும் முன்னே வாருங்கள். நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுவதனால்தான் எங்களை முட்டாள்கள் ஆட்சி நடத்துகிறார்கள். "மட்டக்களப்பான் மடயன்" என்று சொல்லும் போது கூனிக்குறுகும் முதலாள் நாங்கள்தான். ஆகவே துடிப்பான விவேகமான அரசியல்வாதிகளை உருவாக்கி எமது நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டுவருவது எமது ஒரே குறிக்கோள்.

"நல்லவர்கள் யாவரும் ஒதுங்கிக்கொண்டால்
நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும்
வாலிப கூட்டனி வானெடுத்தால்
வலப்பக்கம் பூமி திரும்பிவிடும்"

0 comments:

Post a Comment