ADS 468x60

17 January 2017

ஏன் பிறரிடம் கடுஞ்சொற்களைக் கூட்டி பேசவேண்டும்?


இனிமையாக தான் பிறரோடும், தன்னோடு பிறரும் உரையாடுதலின் இன்பத்தினை அறிந்து உணர்ந்தவர்கள், எதற்காக, ஏன், பிறரிடம் கடுஞ்சொற்களைக் கூட்டி பேசவேண்டும்? 

பிறர் தன்னிடம் பேசும் இனிய மொழிகளிலே இன்பம் அடைகிறவர்கள், மற்றவரிடத்திலே தாங்கள் பேசுவது வன்மொழியாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நுகர்வோருக்கான குறைந்தளவு பண்பு அது.
பிறரிடத்தின் இன்மொழி பேசுபவர்களுக் கூட, சில சமயங்களில் வருத்தம், வெகுளி கொள்ள நேரும்போது, தங்கள் பேசும் இன்மொழியிலே இருக்கக்கூடிய இன்பத்தை இழக்கவேண்டுமா என்று சிறிது சிந்திக்கவேண்டும். கபிலரின் இன்னா நாற்பது “அறமனத்தார் கூறுங் கடுமொழியின்னா” என்கிறது. அறமனத்தோர் கூறுகின்ற கடுமையான மொழியானது துன்பத்தைத்தரும் என்கிறார் கபிலர். அறமொழியினராக இருப்பின், வன்மொழி பேசுதல் இராது. 

அப்படிஅவர்களே வருந்தி பேசும்போது, அது பிறர்க்கும் ஊறு விளவித்து, அவர்களுக்கே கூட மனவருத்தம் என்கிற துன்பத்தைத் தந்துவிடும். சங்க நீதிநெறி நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகை “நாவன்றோ நட்பறுக்கும் தேற்றமில் பேதை” என்றும் “கல்லா ஒருவர்க்கு தம்வாயிற் சொற்கூற்றம்”, “வைததனால் ஆகும் வசையே வணக்கமது செய்ததனால் ஆகும் செழுங்கிளை” என்கிறது.

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது."

0 comments:

Post a Comment