ADS 468x60

22 January 2017

ஜல்லிக்கட்டு

இது மாட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல தமிழ் நாட்டுக்கான போராட்டமாக இருப்பது மிக்க மகிழ்சி. இன்று இது உலகத்தில் ஒரு புரட்சியாகப் பார்கப்படுகின்றது. அது மாணவர்களின் திரட்சியாக நோக்கப்படுகின்றது. நெடுநாளாக அவதானித்து பெருமை கொண்டிருந்தேன், உலகத்தில் தமிழன் இவளவு தானே என்றெனக்கிருந்த சிறுமை கொண்றிருந்தேன்.
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன. இந்த பாரம்பரியம், உரிமை, பண்பாடு இவற்றை பாதுகாக்க இன்று இளைஞர்கள் துணிந்து நிற்பது பெருமை எம் தமிழுக்கும் தமிழர்களுக்கும்.

சாதாரமானவர்களை பிரபல்யமாக்கியவர்கள் பின்தொடர்ந்தார்கள் அன்று ஆனால் பிரபல்யங்களே பின்தொடர்ந்தார்கள் உங்களை இன்று. இது கூண்டுக்குள் அடைத்த இளஞ் சிறுத்தைகளின் சக்தி அநீதிகளை வேரறுக்க மேலெழுந்த கூரான கத்தி. அது தமிழ் மீது இவர்கள் கொண்டுள்ள அழியாத பக்தி. இன்று தலைமையே பயந்ததால் நமக்கு கிடைத்த பெரும் வெற்றி வெற்றி. 

மறப்போர் தழுவிய மன்னர்களின் பிள்ளைகளின்; அறப்போர் கண்டு வியக்கிறேன். மாட்டைப்போலவே மாற்றான் மொழியையும் எம் நாட்டுக்குள் புகுத்தி செம்மொழி அழிய திட்டம்போடும் மேலைத்தேயத்தின் மேழி பிடித்தடக்கிய உங்கள் தோழை நினைத்து உயிர்கிறேன்.

காலில் விழும் அரசியலை கவிழுங்கள் கட்டிவைத்திருக்கும் உங்கள் உரிமையெல்லாம் அவிழுங்கள். தோழில் வீரமிருக்கு, உங்கள் தொனியில் ஈரமிக்கு, கூரிய அறிவிருக்கு, கூன்விழுந்தா நீ பிறந்தாய் கண்டவனின் காலில் எல்லாம் விழ, இதே உணர்சியோடு கையிலெடு தலைமையை. கூத்தாடும் சினிமாக்காரணை கூப்பிடாதே உனை ஆழ. அவன் நடிக்கமட்டும் தெரிந்தவன், அதனால் இத்தனை நாள் உன்னை வசப்படுத்தினான். அதை கண்ணுற்று நாங்கள் வெட்க்கப்பட்டோம் தமிழனாக ஆனால் இன்று அவன் உந்தன் வசப்பட்டு உனக்கு இரசிகனாகிறான்.

ஏறு தழுவு அது எமது எதிர்காலத்தின் கலப்பற்ற விவசாயத்தின் உழைப்பாக இருக்கட்டும். மாற்றானின் சீமைப்பசுக்கனை சேய்மையில் வை. எமது தூய்மைப் பசுக்களை ஏறை விட்டு தாய்மையில் வை. பசித்தால் ஆறு வருடத்துக்கு கிடைக்கும் தாய்ப்பால், பசுத்தாய் நூறு வருடத்துக்கும் தருவாள் பசுப்பால். பசு நிலைக்க ஏறு வளர், ஏறு வளர ஏறு தழுவு. 

எம் கீழைத்தேய உழைப்பை உறிஞ்சிய உனக்கு தேவைப்படலாம் பீட்டா, எமக்கு வேண்டாம் அங்கேயே போ திரும்பி டாடா. இந்த இளைஞர்கள் நியாயத்துக்காய் சேருகிறார்கள் கூட்டா. இனி ஒவ்வொருவரும் அநியாயத்துக்கு உங்களை கிழிக்கும் தோட்டா. மேலினமே இருந்தாலும் நன்றி உனக்கு ஏனெனில் நீங்கள் உருவாக்கிய இன்ராகிராம், டுவிட்டர், பேஸ்புக் தான் உங்கள் கருவாகிய பீட்டாவை விரட்டும் தெருவில் இனி.

0 comments:

Post a Comment