ADS 468x60

17 January 2017

பூமாலைகள்,புகழ் மாலைகள்

பூமாலைகள்,புகழ் மாலைகள்
புதிது புதிதான வரவேற்புக்கள்
'கூலிங் கிலாசு'களோடு சில
அதிகாரிகள்,
தலையில் செருகிய
கண் கண்ணாடி,
சுத்தமான பூசாரிக் கோலம்,
மாணவருக்குப் பாதணி
வழங்கிய அதிகாரியின் ஒரு படம்,

பஸ்தரிப்பு நிலையக்
கல்லுவைப்புக்கும் ஒரு வரவேற்பு ,
கடன் கொடுக்கிறதுக்கும்
ஒரு பெரும் விழா ,
நியமனக் கடிதம் கொடுக்கிறதுக்கும்
போஸ் கொடுத்துப் படம்,
இப்படியாக இணையத்திலெல்லாம்
அதிகாரிகள்,அரசியல்வாதிகள்
கலக்குகிறார்கள்;
ஆனால் .................................
மனித நேயச் செயற்பாடுகள்,
வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள்,
சூழல் அபிவிருத்திச் செயற்பாடுகள்,
புள்ளிவிபரத் தகவல் சேகரிப்புகள்,
போக்குவரத்து சீரமைப்புக்கள்,
பொது நிதியக் குறிக்கோள்கள்,
இளையோர் சீர்திருத்தங்கள்,
சமூக விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் ,
அனாதைகள் பாலான கவன ஈர்ப்புகள்,
கைம்பெண்கள் கவனிப்புகள்,
அகதிகள் அரவணைப்புக்கள்,
ஆகிய எதையுமே எங்கள் தலைவர்களிடம்
காணக் கிடைப்பதாயில்லை.
பகட்டுக் காட்டுகிறார்கள் ;ஆனால்
பயன்பாட்டுக் காரர்களாக இல்லை,
இதுதான் எங்கள் தொடர் கதையா ?

0 comments:

Post a Comment