ADS 468x60

17 January 2017

எமது மாவட்டம் வள அளவில் நலிவுற்றிருக்கவில்லை.


எமது மாவட்டம் வள அளவில் நலிவுற்றிருக்கவில்லை (பின்னடைதல்) ஆனால் தனிப்பட்ட மற்றும் குழு என்ற அளவில் (குறிப்பாக தமிழ் சகோதரங்கள்) மிக மிக நலிவுற்றிருக்கின்றது. இந்த நலிவுறல் நிலை அதிகமாக யுத்தம் காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றது.


இவைதான் மக்களை அரசியல், பொருளாதார மற்றும் சமுக பின்னடைவை அவர்களிடையே ஏற்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக இந்த மக்களுக்கு மாறிமாறி வரும் இடர்களை எதிர்நோக்கும் ஒரு அபாக்கியவான்களாகவே எம் மக்கள் இருந்து வருகின்றனர்.
இதனாலேயே இந்த நலிவுறும் இயல்வுக்குள் இருக்கும் அநேகம் மக்கள் தங்களது கல்வி, சுகாதாரம் என்பனவற்றினை இலகுவில் பெறமுடியாதவர்களாக இருக்கின்றனர். இவர்கள் தங்களுக்கு விரும்பியவற்றை தெரிவு செய்யும் வலு அற்றவர்களாகவும் சமுகத்தில் பல காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

இதன் ஒரு முடிவுதான் மக்கள் அரசியலில் வந்தவனையும் போனவனையும் தெரிவு செய்திருக்கின்றனர் என எண்ணத் தோன்றுகின்றனர். இதனால் அரசியலை நிலைநிறுத்த முன்னர் எம்மிடையே உள்ள நலிவுறும் தன்மையை ஒளிக்க வேண்டும். அதற்க்காக கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள், அரசியல் அறிவு என்பனவற்றினை மக்களிடையே இன்னும் இன்னும் ஒன்றிணைந்து உரிய நேரத்தில் வலுப்படுத்தவேண்டும்.

இந்த நலிவுறும் நிலையால் ஊழியர்களின் வருமான மட்டம் குறைவடைகிறது, குடும்ப நிலை சீர்கெடுகின்றது இதனால் சிறுவயது முதலே போதைக்கடிமையாதல் போன்றவற்றுக்கு இந்தக்குடும்ப குழந்தைகள் இலக்காகும் நிலை தோன்றியுள்ளது அனைவரும் அறிந்தது. இத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேவைக்கதிகமான சாராயத்தவறணைகள் இருந்து தவறுகளை அணைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த மேலதிக தவறணைகளை அகற்றுவதற்க்கான மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும். மலையக மக்கள் இன்று விழித்துக் கொண்டு இவற்றை ஒளிக்க முன்வந்துள்ளதனைப்போல் எமது மக்களை கொண்டுசெல்ல இளைஞர்கள் முன்வரவேண்டும்.

இன்றய நாளின் உங்கள் காதுகளில் போடும் ஒரு விடயம். எம்மக்களின் நலிவுறு நிலையைக் குறைத்து மனித அபிவிருத்திச் சுட்டெண் வரிசையில் ஏனைய மாவட்டங்களுக்கு சமமாக கொண்டுவரும் நிலை உண்டுபண்ணுவோம். அதற்கு பாகுபாடு இல்லாத தொண்டாண்மை கொண்ட நலன்விரும்பிகள், கற்றவர்கள் எம்முடன் ஒன்றிணையுங்கள் என்று இன்னும் ஒரு அறைகூவலை விடுகின்றோம். நன்றி வணக்கம்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை

//ஏற்கனவே முகப்புத்தகத்தில் வெளியான எனது பதிவு//

0 comments:

Post a Comment