ADS 468x60

17 January 2017

எங்கட வட்டவிதானயார் என்ன சொல்லுறாரு??


'அன்றிருந்தது வேற இப்ப இருக்கிற நிலவரம் வேற தம்பி' வட்டவிதானையார் ஞாபகங்களை கிளர ஆரம்பித்தார். "இந்த தும்பங்கேணி பழுகாமம் றோட்டு வெட்டுக்காலம் வந்தா திருவிழாத்தான்.

வெட்டுறவன், சூடுபோடுறவன், வண்டிக்காரன், சோத்துப்பொட்டலம் சொமக்கிறவன், கதிரு பொறக்கிறவங்க எண்டு வௌ்ளாப்பில இருந்து மயண்ட வரரைக்கும் ஒரே கூட்டமாத்தான் இருக்கும்.
என்ன, அண்டைக்கு மனிசனப் பாத்தம் இண்டைக்கு மெசினப் பாக்கிறம்.
அப்ப எல்லாருட வீட்டிலயும் வருசக்கணக்கில நெல்லு குவிந்து கிடக்கும். மட்டக்களப்புல இருக்கிறவங்க எல்லாம் அத வைச்சி சாப்புடுவாங்க. இப்ப கூலி வேல செய்யிறவனுக்கு நெல்லக் குடுத்தாகூட அது வேணாம், காசத்தாங்க என்கிறான். கேட்டா கடயில குத்தரிசி வேண்டிச் சாப்பிடுறம் அப்படிங்கிறான்.

குறுக்கே கேட்டேன், இப்ப வயல்வேல செய்தவங்களெல்லாம் எங்கய்யா போய்டாங்க எண்டன்? அவா் சொன்னார் 'நாட்டுக்குத்தான் என்று' என்னதான் நவீனம் வந்தாலும் உடல வருத்தி சம்பாதிக்கிறதில ஒரு சுவ இருக்கி தம்பி.

அது மட்டுமா அண்டைக்கு இருந்த வழக்காறுகள் இண்டைக்கு இல்லாமப் போயிற்றம்பி. விதைக்கிறப்ப, கதிருகாணுறப்ப, கதிர் அறுக்கிறப்ப, சூடுபோடுறப்ப எண்டெல்லாம் பொங்கலும் வழிபாடும் சேர்ந்திருந்தது. அண்டைக்கு தொழிலில ஒரு பயமும் பக்தியும் இருந்திச்சி.... இண்டைக்கி ம்கும்ம்"' எனப் பெருமூச்சிவிட்டவர், சற்று நிமிந்து தலைப்பாகையை அவிழ்த்து அந்த வயற்காடுகளை பார்த்துவிட்டு தொடர்ந்தார்.

"ராப்பகலா நெற்றி வேர்வை நெலத்தில சிந்தி பாடுபடுற நம்ம பயலுக்கு இப்ப என்னப்பா லாபம் கிடக்கு? வெட்டிமுடிய யார் யாரோ வந்து இந்த உற்ப்பத்தியெல்லாம் அவடத்த வைச்சே வேண்டித்துப்போய் அரிசி, மா, தின்பண்டம், உமி, தவுடு என்டெல்லாம் கொண்டுபோட்டு எங்கட்டயே விக்கிறாங்க. உழைக்கிற காசை அவங்கட்டேயே கொட்டி சாகும்மட்டும் நம்மட சனங்கள் கடன்காரன்களாகவே வாழுதுகள்". என்று கவலையோடு இந்த வட்டவிதானையார் சொன்னது முற்றிலும் உன்மை.

தொழிலாளர் வர்க்கமாகவே நாங்கள் இருப்பதைத்தான் எமது தலைவர்கள், வழிகாட்டிகள் என்று அழைக்கப்படுபவா்கள் விரும்புகிறார்கள்.

என்றைக்கு எமது இனம் முதலாழி வர்க்கமாவது? போடியார் பரம்பரையை விடுதலைப்போர் துவங்கி அழித்தீர்கள், முதலாளி வர்க்கத்தை ஓடவிட்டு அழித்தீர்கள் மிஞ்சியது என்ன? புறத்தியானுக்கு கூலிவேலை செய்யக் காத்துக்கிடக்கும் கூலிப்படைதான்.

புத்திஜீவிகள் இல்லாத மாவட்டமாக வைப்பதற்குத்தான் வந்தவரையும் போனவரையும் அரசியல்வாதிகளாக்கி இருக்கறீர்கள். இன்றைக்கு ஆண்டு ஒன்றில் மாணவர்களைச் சேர்ப்பதற்க்குகூட சில பாடசாலைகளில் அம்மா படித்திருக்கிறாரா அப்பா படித்திலுக்கிறாரா என்று கேட்டும் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யும்போது மட்டும் ஏன் இதனைக் கேட்பதில்லை?

மழைக்கும் கூட பல்கலைக்கழகம் ஒதுங்காத படிக்காதவா்களை பிரதிநிதிகளாக வைப்பதனால்தான் எங்களை 'மட்டக்களப்பான் மாடன் என்கிறார்கள்' இதையெல்லாம் எங்கு நீங்கள் சிந்திக்கப்போகிறீர்கள்!

அதுகிடக்க, இன்று நாட்டில் ஒரு நல்ல நிலை தோன்றியுள்ளது. எமது மண்ணின் தமிழ் முதலீட்டாளர்களே உங்களை நாங்கள் அறைகூவி அழைக்கிறோம். எம்மிடம் இருக்கும் முலப்பொருட்களை முடிவுப் பொருளாக்கும் கைத்டதொழில் பேட்டைகளை இங்கு வந்து நிறுவுங்கள்.

அதன்மூலம் இங்கு வேலைப்பிச்சை கேட்டு அடிமைபோல் கிடக்கும் எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை உண்டுபண்ணுங்கள், ஏற்றுமதி வியாபாரத்தில் எமது உள்ளுர் பொருட்களைச் சந்தைப்படுத்துங்கள், அழகான மட்டக்களப்பை அப்போது காண்பீர்கள். நான் மிகவும் மனம்வருந்தி இதனை எழுதுகிறேன் இதில் ஏதும் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். இதனை அனைவரும் உங்கள் பக்கங்களில் செயார் பண்ணுங்கள். நன்றி வணக்கம்.

0 comments:

Post a Comment