ADS 468x60

17 January 2017

மட்டக்களப்பு மாநிலம் பூர்வீக தொன்மை வாய்ந்ததே!

மட்டக்களப்பு பிரதேசத்தின் வரலாற்றை இராவணன் ஊழிக்காலம், அதன் பின் சிங்கள மன்னர்களின் ஆட்சிக்காலம் அதன் பின் வெளி நாட்டவரின் ஆட்சி என்பனவற்றின் போது கிடைக்கும் ஆதாரங்களை வைத்து ஆன்றோரும் சான்றோரும் சான்றாதாரங்களை காட்டி நிறுவி உள்ளனர். சான்றாதாரங்களுள் குறிப்பாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரராலய மற்றும் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயில் பட்டயங்கள், தட்சிண கைலாய புராண விபரிப்பு, திருக்கோயில் கோயில் கல்வெட்டு, குளக்கோயில் கல்வெட்டு, மட்டு பிரதேச வீச்சத்தில் அகழ்வாய்வில் பல்வகைப்பட்ட தொல் பொருட்கள், பழந்தழிழ் பாடல்கள் ஆகியன முக்கியமாக இருக்கின்றன.

ஒரு மக்களின் வரலாற்றைச் சொல்ல பல ஆதாரங்கள் தேவை, பலம் மிக்க பேரரசுகள் ஆட்சி செய்த பொலநறுவை, அனுராதபுரம் போன்ற இராசதானிகளின் வரலாறுகளை கண்டறியும் ஆதாரங்கள் கூட அரையும் குறையுமாக இருக்கும் போது அடிக்கடி கடற்கோளாறுகள் வந்து கிள்ளுப்பட்டுக் கிடக்கும், குறுநில மன்னர்கள் ஆட்சி புரிந்த மட்டக்களப்பில் அது கடினமே. 

இருப்பினும் மக்கள் வாழ் இடம் இல்லாத இடம் காடு என்பர். எனவே மட்டக்களப்பு என்றொரு நாடு இருந்திருப்பின் அங்கு மக்கள் வாழ்ந்துதானே இருப்பர். அது போலவே குடி இருந்தால் அங்கே முடியும் இருந்திருக்கும் அல்லவா? ஆகவே மட்டக்களப்பு மாநில பூர்வீகம் தொன்மைவாய்ந்ததே. இருப்பினும் இவற்றை மிக நுணுக்கமாகச் சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் வரலாற்று ஆசான் இல்லை என்று உங்கள் முன் அடங்கி நிற்க்கிறேன்.

//ஏற்கனவே முகப்புத்தகத்தில் வெளியான எனது பதிவு//

0 comments:

Post a Comment