ADS 468x60

17 January 2017

மட்டக்களப்பு இன்று நேற்றல்ல பண்டைப் பெருமை மிக்கது.

தேனும் பாலும் சேறாகிக் கலக்கும் புவியியல்பும், நீரரர் எனும் மீன்பாடும் களப்பியல்பும் சுவைதரும் இலக்கிய வளமார்ந்த மட்டக்களப்பு இன்று நேற்றல்ல பண்டைப் பெருமை மிக்கது. ஆயினும் காலக்கரையின் கோலம் இந்த மண்ணிற்க்கே ஒரு பண்டை வரலாறு உள்ளதா! என்று திக்குமுக்காட வைத்துவிட்டது . என்று 'மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடிகள் எனும் நூலில் குறிப்பிடுவது என்னவோ உன்மைதான். 

எம்மையெல்லாம் வழிப்படுத்த நினைககும் அரசியல் புள்ளிகள் வரலாறு படைக்க வேண்டாம் இருந்தாலும் இருக்கும் வரலாற்றை பேணிப்பாதுகாக்கும் முதுகெலும்பில்லாதவர்களாக இருக்கின்றனரே ஐயகோ! இதனால்தான், போடியார் பரம்பரை அழிந்தது, பண்டைய விளையாட்டுக்கள் மறைந்தன, கலைவடிவங்கள் மேலைத்தேய வடிவங்களுக்குள் சிக்கி சின்னாபின்னமாகின (ஏதோ படித்தவர்கள் பண்ணுவதனால்) பாரம்பரிய தொழில் வடிவங்கள் அவற்றுடன் வந்த நடைமுறைகள், கொண்டாட்ட முறை என்று தமிழர் பண்பாடுகளை பறைசாற்றும் மட்டக்களப்பு மண்வாசனை கலந்த எமது வரலாறுகள் எங்கே? அதன் சுவடுகளும் இல்லாமல் சுட்டுத்தீர்த்தவர்கள் எம் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் துர்ப்பாக்கியம் நமது முன்வினை வேறென்ன சொல்ல. இதை சொன்னால் வெட்கக்கேடு சொல்லாட்டி மானக்கேடு...

(இது வயலில் அறுவடை முடிந்ததும் களவட்டிப்பொங்கல் வைத்து பூமாதேவிக்கு நன்றி செலுத்தும் மட்டக்களப்பு நடைமுறையினை இந்தப்படம் சித்தரிக்கின்றது)
//ஏற்கனவே முகப்புத்தகத்தில் வெளியான எனது பதிவு//

0 comments:

Post a Comment