ADS 468x60

31 January 2017

உதவாதவா்கள் உள்ளவரை உருப்படாது ஒன்றும்.

மரத்தை தெய்வமாய் வழிபட்டனர் ஏன்? மரம் கனி தந்தது, காய் தந்தது, இலை குழை தந்தது, நிழல் தந்தது, நிலம் காத்தது, படுக்க மெத்தை, உடுக்க துணி, எடுக்க பை, அடுக்க அலமாரி, சுவாசிக்க காற்று, வாசிக்க கடதாசி இன்னும் எத்தனையே எத்தனையோ! ஆனா எங்க ஊரில இந்த தெய்வத்தை வைத்து பலன்பெறத் தெரியல்ல
கவலையாக இருக்கிறது, யாரும் பராமரிப்பார் இல்லை, நாட்டி நாலடி உயரமாக கூட்டி வளர்த்த இந்த மரங்களை சுற்றிய கம்பிக்கூடு, கூட இருந்த கம்புத்தடி என்பன சிலவற்றை களவாடிவிட்டனர்.
அப்பப்போ போகும்போது அழனும்போல தோணுது. ஊரில் எத்தனையோ சங்கம் கழகம் இருக்காம், எத்தனையோ உறுப்பினர்கள் இருக்கிறாங்க அது தவிர தொண்டர்கள் இவர்களுக்கு எல்லாம் ஏன் இந்த அக்கறை வருவதில்லையோ தெரியவில்லை. கோபால் எனும் ஒரு தொண்டா் எனக்கு அப்பப்போ உதவியாய் இருப்பது ஒரளவுக்கு ஆறுதலாக இருக்கிறது.
இதை பாதுகாக்க, உருவாக்க ஏதாவது சங்கம் மற்றும் கழகம் தொண்டர்கள் முடியுமானால் முன்னுக்கு வாருங்கள் இந்த நல்ல கைங்கரியத்தை எடுத்து, நீங்கள் இருந்து பயனுள்ள வேலை செய்தீர்கள் என பெயர்பெறுங்கள். ஏதாவது கழகம் விரும்பினால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்!

0 comments:

Post a Comment