ADS 468x60

06 January 2017

மட்டக்களப்பில் மழுங்கிப்போகும் மரமுந்திரிகைச் செய்கை!


மட்டக்களப்புக்கு இருக்கும் தனித்துவங்களுக்குள் இந்த முந்திரிச் செய்கையும் ஒரு அடையாளமாகும். இருந்தும் கஸ்ட்டப்படுபவன் பலனடையாமல் போகும் நிலைதான் இந்த விவசாயிகளுக்கு நேருகிறது. இவர்கள் பயிராக்கி, வளர்த்து அந்த விளைச்சலில் முழு இலாபமும் அடையமுடியாமல் அவர்களே அவர்களது பொருட்களை அறாவிலைக்கு வாங்கும் துர்ப்பாக்கிய நிலையில் எம்மவர்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறார்கள். இவர்கள் எப்போது எக்ஸ்பிறஸ் றோட்டில் பயணம் செய்வது??.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த யுத்தகாலத்தில் செயலிழந்து போயுள்ள மரமுந்திரிகை செய்கையை மீள் பயிரிடுகை செய்வதற்கும் இந்தச் செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவிக்கவும் பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்இ வரவேற்க்கத்தக்கது.மட்டக்களப்பில் அதிகளவில் மர முந்திரிகை உற்பத்தி நடைபெறும் மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளாக குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, செட்டிபாளையம் மற்றும் தேத்தாத்தீவு என்பன அதற்க்கான மண்வளத்தினைக் கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

( பூத்துக் குலுங்குவதும் மரமுந்திரிகை செய்கை)
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் மர முந்திரிகைச் செய்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் 20 சத வீதமான நிலப்பரப்பிலேயே செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் வழமையாக வருடாந்தம் 75 தொடக்கம் 90 மெற்றிக் தொன்கள் அளவில் இருந்த மர முந்திரிகைப் பருப்பு உற்பத்தி கடந்த ஆண்டு 40 மெற்றிக் தொன் ஆக உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அத்துடன், இந்த மாவட்டத்தில் கிரான் பண்ணை 350 ஏக்கர் நிலப்பரப்பையும் மாங்கேணி பண்ணை 1050 ஏக்கர் நிலப்பரப்பையும் கொண்டுள்ளன. 2008இ மற்றும் 2009 ஆம் ஆண்டு மாவட்ட திட்டமிடல் செயலகத்தின் புள்ளி விபர அறிக்கையின்படி மாங்கேணி மரமுந்திரிகை நடுகைக்குரிய 1050 ஏக்கரில் 100 ஏக்கரிலும் கிரான் பண்ணைக்குரிய 300 ஏக்கரில் 125 ஏக்கரிலும் மரமுந்திரிகை நடுகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பில் 2010 - 2011ம் ஆண்டுகளில் மர முந்திரிகை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றன. அதிலும் மட்டக்களப்பு ஏறாவுர் மற்றும் கோட்டைக் கல்லாறு பிரதேசங்களில் மரமுந்திரிகை பதனிடல் விற்பனையை தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச மரமுந்திரிகைக் கூட்டுத்தாபன தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

மர முந்திரிகை சாகுபடியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக பதனிடப்பட்ட மரமுந்திரிகைப் பருப்பின் விலையும் தற்போது கிலோ ரூபா 1800 - 2000 வரை உள்ளுர் சந்தையில் விற்பனையாகின்றது.அந்த சந்தர்ப்பத்தில்தான் இப்போது அதற்க்கு உகந்த காலமாகக் கொள்ளப்படுகிறது. இங்கு வரும் வழிதோறும் இந்த முந்திரிகை மரங்கள் பூத்து வாழ்சம் வீசுவதும், பூத்துக் குலுங்குவதும் ஒரு தனி அழகு. இம்முறை காலநிலை மாற்றங்கள் ஏற்ப்படா விட்டால் அமோவிளைச்சல் எதிர்பார்க்கப்படும் என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பது என்னவோ மட்டு மண்ணுக்கு சாலவே பொருந்தும் ஒன்று என்பதற்க்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு.

இனிவரும் காலங்களில் அவற்றை உணர்ந்து இந்த உற்ப்பத்தியில் பல இரண்டாம் தர உற்ப்பத்திகளை ஊக்குவிக்க அதிகாரிகள் அரசியல்வாதிகள் இந்த மக்களுக்கு வகை செய்வார்களா??? காலம் பதில் சொல்லுமா பார்க்கலாம்......

0 comments:

Post a Comment