ADS 468x60

17 January 2017

ஏன் கிழக்கில் முஸ்லிம்களைப்போல தமிழர்கள் வாக்களிப்பதில்லை!

எழுவான் படுவான் என சூரியன் இரு தோற்றங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டம் வடக்கே வெருகல் தொடக்கம் தெற்கே துறை நீலாவணை வரையுள்ள ஏறத்தாழ 100 கி.மீ தூரத்தை கொண்டுள்ள மிகப் பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ளது.

இங்கு எழுவான் கரைப் பகுதியினிலேயே மக்கள் அதிகம் செறிந்து வாழுகின்றனர். மேற்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக பரந்து வாழுகின்றனர். இதில் முஸ்லிம் சமுகத்தவர் காத்தான்குடி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏறாவூர், பாலமுனை ஆகிய பகுதிகளில் செறிந்து வாழுகின்றனர்.
ஓவ்வொரு பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் ஐனாதிபதித்தேர்தல்கள் போன்றவற்றில் முஸ்லிம்மக்கள் விரைவாக அதேபோல் சரியாக வாக்களிப்பதனை தேர்தல்கள் கண்காணிப்பு மையங்கள் வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் அவதானித்து வந்துள்ளமை வரலாறு கூறும்பாடம். ஆனால் தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் இவ்வாறில்லை என்பதே அனைவரினதும்கணிப்பு.

யுத்தம் ஓய்வுபெற்ற 2009 ஆண்டிற்கு பிறகு தமிழர்கள் ஜனநாயகத்தில் ஓரளவு நம்பிக்கை கொண்டுள்ளனர். இருந்தபோதும் அவர்களுக்கு சரியான அரசியல் விழிப்புணாவு ஏற்படவில்லை.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களும், மணிக்கணக்கில், தமிழர்களின் உரிமை, 13ம் திருத்தச் சட்டம், ஐக்கியநாடுகள் விசாரணை என்பவற்றைக் கதைத்தே காலத்தை கடத்தினர் அல்லது கொப்பி, பேனா பென்சில் கொடுத்து தங்கள் விருப்பு வாக்குகளைப் பெருக்கிக் கொள்ள முண்டியடித்தனரே தவிர ஆக்க பூர்வமான செயல்கள், அபிவிருத்திக்கான எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை.

எமது மக்களுக்கு ஜனநாயத்தின் தேவை குறித்து விழிப்பூட்டவும் இல்லை. இப்போதும் தங்கள், விருப்பு வாக்குகளை குறிவைத்தே பிரச்சாரம் செய்கின்றனர்.

இம்முறை எமது மக்கள் மிகவும் அவதானமாகவும் நேரகாலத்துடனும் வாக்களிக்க தூண்டும் இளையோரின் சேவை இந்த நேரத்தில் எமது மீன்பாடும் நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவை. அனைவரும் ஒன்றுபடுங்கள் மக்களே!, இம்முறை அனைவரும் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்தால் நான்கல்ல ஐந்து ஆசனங்களையும் பெறலாம்..


//முன்பு வௌியான கட்டுரைகளின் பிரதி//

0 comments:

Post a Comment