ADS 468x60

07 January 2017

வாகரைத் தமிழில் வசப்பட்டு வந்தேன்!

இன்று எனக்கு மிக மிக மகிழ்சியான நாள், வாகரை தமிழ் கமழ்ந்து வந்தேன். கம்பன் என்ன கொம்பனா? என என் மனம் என்னைப் பார்த்து வம்பளக்கிறது. 

அத்தனை தங்கத் தமிழ் சிங்கங்களின் கோட்டையாக, வெந்து புண்பட்டு சிவந்த மண் இன்னும் சுட்ட பொன்போல் பளிச்சிடுவது, நானும் மட்டக்களப்பில் பிறந்தேன் என பெருமை கொள்ளச் செய்கிறது. 

கதிரவெளிப் பாடசாலையில் நடந்த பட்டிப் பொங்கல், அதனுடன் அரங்கேறிய கூத்துப்பாடல் என்னை மெய் சிலுக்க வைத்து விட்டது. அத்தனை மக்களுக்கும் மத்தியில் என்னையும் பேச அழைத்து விட்டனர். ஏதேதோ அத்தனை ஆயிரம் பேருக்கும் முன் மடைதிறந்தாற்போல் பேசினேன். 

முடிந்ததும் அத்தனை உள்ளங்களும் என்னை நெருங்கி வாழ்த்தி, தொலைபேசி இலக்கத்தினை பெற்றுக்கொண்டுஇ என்னிடம் அதிக அதிகமாக வேண்டுகோள்களை முன்வைத்தனர். அது எமக்கு உங்கள் பேச்சை கேட்கும்போது உட்சாகமாக இருக்கிறது, எங்கள் கலைகளை கடைசி இந்த மாவட்ட மக்கள் மத்தியிலாவது அழியவிடாமல் கொண்டு செல்ல உதவுங்கள் தம்பி என வேண்டிக் கொண்டனர். 

போங்கடா நாங்க எல்லாம் தமிழனாய் பிறந்தும் தழிழ் பண்பாட்டை, நாகரிகத்தை கிலோ என்ன விலை என்கிற நிலையில இருக்கிறம். ஆனா கிராமப் பகதியில இருக்கிற நம்ம மக்கள்தான் சனத்தொகைய பெருக்கிறத்திலயும்இ உணவை உற்ப்பத்தி செய்வதிலும் அதுபோல் நமது பாரம்பரியத்தை பறைசாற்றுவதிலும் முன்னுக்கு இருக்கிறார்கள். ஆனா கல்வியில், பொருளாதாரத்தில் பின்னுக்கு இருப்பது வேதனை.






0 comments:

Post a Comment