ADS 468x60

22 February 2017

என்ற ஊரு!!

நாங்கள் வளர்ந்து மரமாக; மரமாய் கனி கொடுக்க;
உரம் சேர்த்த அன்னை,
பார்தால் பசி போக்கும் பசும் சோலையாக
தேத்தா மரங்கள் நிழல்தந்த தேத்தாத்தீவு தான்
எங்கள் தேனூர்க் கிராமம்

தோட்டமும் தொரவும் வயலும் வாய்காலும்
கடலும் களப்பும் குளமும் குட்டையும்
கலையும்  சிலையும் அலையும் அழகும்
நிலமும் நீருமென வளம் பல கொண்ட ஊரு!!

14 February 2017

காதலுக்கு எதுக்கடி பரிசு?

காதலுக்கு எதுக்கடி பரிசு?
மனசுக்குள் இருபதுதான் பெரிசு!
காதலிக்க கவிதை வேணுமா-உன்னை
கனவிலும் மறக்காத ஆணுமா

இன்றைக்கு கொடுக்கனுமா றோசி
அதுபோன்ற காதலெல்லாம் தூசி- இது
தெரியாதவங்க வாழ்க்கையில மோதல்
தெரிங்சிருந்தா அதுதானப்பா காதல்

உயிரிருந்தும் வாழாதே செத்து
உறவு மட்டும் மாழாத சொத்து
பயிர் விழைந்தால் வருகும் வித்து
பாசம் நுழைந்தால் காதல் முத்து

காதல் பழசுபட்டுப்போன உறவுகளில் துளிர்விடுவதில்லை

காதலர் தினம் காதலருக்கான ஒரு விடுமுறையாகக் கொள்ளப்படுகின்றது. காதலில் அன்புதான் அதை தூண்டி விட, பற்றவைக்க, ஊக்கப்படுத்த துரிதமாக இயங்கும் ஒரு கருவியாகும். இது வாழ்து அட்டைகளாலும், நகைப் பரிசுகளாலும், மலர்கொத்துக்களாலும் பரிமாறப்படும் வெறும் தினமல்லாமல் உள்ளத்தின் தேடல், கூடல், காணாமல் வாடல் கண்டதும் ஆடல் என்கின்ற உணர்வுகளின் சேருமானத்தினை பெறுமானம் சேர்த்து வெளிக்காட்டுகிற நாள்.

காதல் தேங்கிக் கிடக்கும் பழசுபட்டுப்போன  உறவுகளில் துளிர்விடுவதில்லை, இன்னும் இந்தக் காதலர் தினம் எம்முன் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் ஆசையினை, அன்பினை, உறவினை வெளிக்கொணரும் ஒரு சந்தர்ப்பம். அதனால் நீண்ட, உறுதியான, அழகான உறவின் அடிக்கல்லாக இருக்கும் காதலருக்கான ஒரு நாள் எனக் கொள்ளலாம். ஆனைத்து காதலர்களுக்கும் எனது வாழ்த்துகள்.