ADS 468x60

04 March 2017

கனிவின் பொக்கிசம்,

என்னை பிள்ளை என்று
சொல்லும் போதே
எல்லை இல்லாது போகுது மனம்

அன்பினால் ஆசுவாசப்படுத்தும்
கனிவின் பொக்கிசம்,
கரைகள் இல்லாத பாராட்டை
திரைகள் போடாமல் தெரிவிக்கும்
உங்கள் உத்தமம் எப்பொழுதும்
உங்களை ஆசிர்வதிக்கும் தாயே!
உலகின் மேல் பக்கத்தில் இருந்தாலும்
கீழே என்னைப் பார்கும்
ஈர்ப்பு தாயன்பை என்னில்
தடவி விடுகிறது தூரத்திலிருந்தும்..

இதயத்தை கொடுக்கும் உங்களுக்கு
இதயத்தை கெடுக்கும் வலி தொடராது
உங்கள் அன்பு 
அந்த வலிக்கு வலிகொடுக்கும்
நீடு வாழ வழிதிறக்கும்..
எல்லாருக்கும் பொதுவான இறைவன் ஆசி
உங்களுக்கு என்றும் கிடைக்க பிரார்த்திக்கிறேன் அம்மா!!




0 comments:

Post a Comment