ADS 468x60

20 May 2017

மட்டு நகர் மேடை மேலே!

மட்டு நகர் மேடை மேலே
மீன் மகள் பாடுது
வாவி மகள் ஆடுது
பேர் கொண்டது கலையில் பேர் கொண்டது

மட்டு நகர் மேடை மேலே
மீன் மகள் பாடுது
அலையில் சுருதி கூடுது
பேர் கொண்டது கலையில் பேர் கொண்டது

பச்சை சேலையை நீமூடி
பாய்ந்து வரும் நீருடன் விளையாடி
தென்னங் கீற்றுகள் கூத்தாடி
சேர்ந்து வரும் கிளியுடன் இசைபாடி
மழை கொண்ட மேகம் வந்து
மகிழ்ந் இங்கு ஆடுது
மலைக் காற்று வீசுது
பேர் கொண்டது கலையில் பேர் கொண்டது

வயல் ஓடையில் ஒருபாட்டு
மலர் குலுங்கும் வாடையில் ஒருபாட்டு
கடல் ஓரத்தில் ஒருபாட்டு
கவி மழையின் ஈரத்தில் ஒருபாட்டு
வளம் பொங்கி இசை ஊறும்
வரம் கொண்ட தேனகம்
எழில் கொஞ்சும் மீனகம்
பேர் கொண்டது கலையில் பேர் கொண்டது

0 comments:

Post a Comment