ADS 468x60

23 May 2017

படுவான்கரையில் சிறுவர்களுக்கு நடப்பது என்ன? அதிபரின் அதிர்சியூட்டும் தகவல்.

 அதிர்ச்சியில் உறைய வைத்தது அந்தத் தகவல். ஏனைய சமுகம் மூக்கில் விரல்வைக்க காரணமாக இருந்த அதே எமது கல்விச் செல்வம் இன்று அவர்களாலயே பரிகாசிக்கும் அளவுக்கு அது எம்மக்களிடையே பின்தள்ளப்பட்டுள்ளது.

'இந்த போரதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் கிட்டத்தட்ட 345 பாடசாலைச் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் இடையில் நிற்கின்ற அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கல்வியறிவை முழுமையாகப் பெறமுடியாத சமுகமாக உள்ள இந்த மக்கள், நாளாந்த வாழ்க்கையில் அதிகளவான ஏமாற்றங்களையும், பின்னடைவுகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் இங்குள்ள பாடசாலைகள் அதிகஸ்ட்டப் பிரதேசமாக வரையறுக்கப்பட்டுள்ளது எனவும் இதனால் நல்ல ஆசிரியர்களை இங்கு வரவழைத்து கல்வியை முன்னேற்றுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கிழக்குப் பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரையாளரும், மட்/ மகிழூர் வித்தியாலய அதிபருமாகிய திரு.பிரபாகரன் அவர்கள் இந்த மாணவர்கள் பெற்றோர்களிடையே உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
இங்கே வீடியோ இணைக்கப்பட்டுள்ளதை பாருங்கள்

08.12.2012 சனிக்கிழமை எமது ஆர்வலர்களின் உதவியுடன், தொண்டுள்ளம் கொண்ட பல துறைகளிலும் பணிபுரியும் பிரமுகர்கள் இருந்து கிராம மட்டத்தில் இருக்கும் மக்கள் வரை எங்களுடன் கைகோர்த்து இந்த மக்களின் எதிர்கால சுபீட்சத்தில் பங்காளிகளாக மாறிவருவது உன்மையில் தெம்பையும், நம்பிக்கையினையும் ஏற்ப்படுத்தி இருக்கிறது. மட்/ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் அ.த.க பாடசாலையில் உள்ள அனைத்து மாணவர்களையும்(71), அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து அவர்களுக்கான ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்களையும் வழங்கி, அத்துடன் விழிப்புணர்வு நாடகம், பாடல்கள், நடனம் மற்றும் பிரமுகர்களின் அறிவுரைகள் என்பவற்றுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய போசனமும் பரிமாறி இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

'இந்தப் பிரதேசத்திலேயே மிகவும் கல்வியில் பின்தங்கிய பாடசாலை எமது பாடசாலைதான், ஐந்தாம் ஆண்டுவரை உள்ள எமது பாடசாலையில் 71 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இன்னும் குப்பி விளக்கில் குனிந்துகிடக்கும் மாணவர்களுக்கு மின்சார வசதிகூட இல்லை. இருந்தும் அவர்களது தேவை அறிந்து தொலைவில் இருக்கும் இந்த மாணவர்களுக்கு பெரிய உதவியை வழங்கி, அவர்களை நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி அறிவுறுத்தி, அவர்களது பசியாற உணவளித்து மகிழ்வூட்டியமை என்னால் மட்டுமல்ல, இந்த ஊரவர்களாலும் மறக்கமடியாது. இவ்வாறான விழிப்பூட்டல்தான் நம்மக்களுக்கும் மாணவர்களுக்கும் இன்று தேவையாக இருக்கிறது அதனை குறிப்பறிந்து நீங்கள் செய்தமை பாராட்டுதற்க்குரியதே' என இந்தப் பாடசாலையின் அதிபர் எஸ்.கந்தசாமி அவர்கள் குறிப்பிட்டார். அத்துடன் இந்தப்பாடசாலையின் ஆசிரியர்கள் சிலரும் இதில் கலந்து கொண்டமை சிறப்பிற்குரியதே.

விரிவுரையாளர், வைத்தியர் அருளானந்தம்
கி.ப.க.கழக விரிவுரையாளரும், வைத்தியருமாகிய அருளானந்தம் எங்களுடன் இணைந்து கொண்டார். அவர் ஒவ்வொரு மாணவரும் கைக்கொள்ளவேண்டிய சுகாதாரப் பழக்கவழக்கங்களை அந்த மாணவர்களுடன் இருந்து கற்றுக்கொடுத்ததுடன், அவர்களை சபையின் முன் வரவளைத்து அவர்களை பேசவும், பாடவும், ஆடவும் செய்து அவர்களிடையே மறைந்து இருக்கும் திறமைகளைப் பார்த்து அவர்களின் பெற்றோர்களே அதிரும் படி உழவியல் வைத்தியம் செய்தமை வித்தியாசமாக இருந்தது. அத்துடன் இவர்களைப்போல்தான் எமது குழந்தைகள் அத்தனைபேரும் திறமைகொண்டவர்கள், அவற்றை நாங்கள் முன்வந்து உதவினால் நிச்சயமாக மாற்றத்தினை ஏற்ப்படுத்தலாம் என தெரிவித்தார்.

செயற்திறன்கொண்ட, இந்த மண்ணின் மலர்ச்சிக்காய் பாடுபடும் ஒரு பிரதேச செயலாளர் உதயஸ்ரீதரர் அவர்கள் எம்முடன் இணைந்து கொண்டு கூறுகையில் 'எமது மாவட்டம் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டது, அதனால் மற்ற சமுகத்துடன் ஒப்பிடும்போது நாங்கள் இன்னும் எங்கோ நிற்கிறோம் என்ற கவலை வருகிறது. மக்களாகிய நீங்கள் இதனை உணரவேண்டும். நீங்கள் நினைப்பதுபோல் எங்கள் கல்வி மட்டும் சிதைந்து போகவில்லை அதனுடன் தொடர்புபட்டு எமது கலாசாரம், வர்த்தகம், செல்வாக்கு, பண்பாடு அத்தனையும் மழுங்கிப்போய்விட்டது.கல்விதான் அனைத்துக்கும் முக்கியமானது' என இங்கு கூடியிருந்த பெற்றோர்களையும் பிள்ளைகளையும் தெழிவுபடுத்தினார். அத்துடன் பல கதைகளையும் இம்மாணவச் செல்வங்களுக்கு புத்தியாகச் சொல்லி இந்த நேரத்தினை பிரயோசனமானதாக மாற்றியிருந்தார்.

Eng Student Kalaichelvi, Sillikodiyaru
'நானும் படுவான் கரையைச் சேர்ந்தவள்தான், எனது அப்பா வயல் செய்துதான் என்னை உயர்தரம் மட்டும் படிக்க வைத்து இன்று பொறியியல் கற்ப்பதற்க்கு பல்களைக்கழகம் தெரிவாகி உங்கள் முன் நிற்கிறேன். நாங்கள் யாரும் முட்டாள்கள் அல்ல, எல்லோராலும் படிக்கமுடியும். நான் என்னை ஈன்ற பெற்றோருக்கும் இந்த மண்ணுக்கும் நன்றிகூறுவதோடு எனக்கு உதவி செய்யும் இந்த சகோதரர்களுக்கு நான் நன்றியுடையவனாகவும் இருக்கிறேன். அதற்க்காக நான்,எமது மக்களுக்கு உதவ என்னை ஈடுபடுத்துவேன்'  என கலைச்செல்வி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்தது அந்த மக்களுக்கு முன்மாதிரியாக இருந்தது.

கி.ப.க.கழக பொருளியல் துறை விரிவுரையாளர்களான சுரேஸ் மற்றும் திருமதி சுரேஸ் ஜெயப்பிரபா ஆகியோர் கலந்துகொண்டு இந்த நிகழ்வை நடாத்த அரும்பாடுபட்டமை குறிப்பிடத்தக்கது.'இந்தப்பிரதேசத்தின் மாணவர்கள் கல்விலை கட்டியெழுப்ப பெற்றோர்களின், பழய மாணவர்கள் மற்றும் அனைத்து சங்கங்கள், கழகங்கள் போன்றவற்றின் ஒத்துழைப்பு மிகவும் தேவையானது' என சுரேஸ் குறிப்பிட்டமை கருத்தில் கொள்ளவேண்டியதே. அத்துடன் இந்நிகழ்வினை சிறப்பாக நடாத்துவதற்கு என்னுடன் ஜீரரெட்ணம் மற்றும் பகிரதன் ஆகியோரும் இணைந்து கொண்டு உதவினர்

இந்த நிகழ்வு அமரத்துவமடைந்த J.P யும் முன்னாள் மட்/பழுகாமம் கண்டுமணி வித்தியாலய ஓய்வு பெற்ற அதிபருமாய் இருந்த க.விநாயகமூர்த்தி மற்றும் அமரத்துவமடைந்த அவரது பாரியார், அதே பாடசாலையில் கற்ப்பித்து, ஓய்வு பெற்ற ஆசிரியையாக இருந்த திருமதி விநாயகமூர்த்தி ஞானம்மா ஆகியோரது ஞாபகார்த்தத்துக்காய் அவரது மகன் சிவம் அவர்களின் வேண்டுகோளின்படி இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர்களின் ஆத்மசாந்திக்காய் இந்த இடத்தில் வேண்டிக்கொள்கிறோம்.

இந்த நிகழ்வினூடாக வெவ்வேறு துறைசார்ந்த எமது தொண்டர்களால் கல்வி மற்றும் அடிப்படை சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது அதுபோல் இந்தப்பகுதியில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களைக் கொண்டு அவர்களுக்கு கல்வியின் அவசியம் பற்றியும் அதனை அடையும் வழிமுறைகள் பற்றியும் உதாரணம் காட்டப்பட்டது. தேனுகா கலைக்கழகத்தின் நாடகத்தின் ஊடாக இடைவிலகல் மற்றும் கல்வியை தொடராமை போன்றவற்றினால் எம் சமுகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதுபோல இந்தக் கல்வியை தொடர்வதனால் நாம் பெறும் இன்பம் என்பன எடுத்து உணர்த்தப்பட்டது. 

பாடசாலையின் அதிபர்
அதுபோல மாணவர்களுக்கு கல்வியில் விருப்பத்தினை ஏற்ப்படுத்த பாடசாலை உபகரணங்களான அப்பியாசக் கொப்பிகள், கவராயப் பெட்டிகள், பென்சில், தண்ணீர்போத்தல்கள், அழிறவர்கள், போன்ற இன்னோரன்ன பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதுபோல பல்கலைக் கழகத்துக்கு தெரிவான மாணவிக்கு கௌரவிப்பு நிகழ்வும் பரிசு வழங்குதலும் நிகழ்த்தப்பட்டது. இறுதியாக மதியபோசன நிகழ்வுடன் இந்த நிகழ்வினை இனிதே நிறைவு செய்தோம். 


சாதி, சமயம், பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக, பணகாரர்களின் பிள்ளைகள் தரமான கல்வியையும், பணமில்லாத மக்களின் பிள்ளைகள், தரம் குறைந்த கல்வியையும் பெறும் சூழல் நிலவி வருகிறது .இது சாதி, மத பேதத்தை விட கொடியது, இதனை சமநிலைப்படுத்தவேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.

'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்றார் ஒளவை. இந்த உலகில் ஒருவர் பெறுகிற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி எனப்படும். அவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்க வேண்டும். தரமான கல்வியைப் பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்களாக,மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்புப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.இதுவே இன்று சிதைந்துபோன எமது கல்வியைக் கட்டியெழுப்பதேவையாக இருக்கிறது. இதுபோன்ற பல கிராமத்து மாணவர்களையும், மக்களையும் இன்னும் முன்னேற்ற நாங்கள் ஒன்றுபடுவோம். நாங்கள் கற்றறிந்து வளர்ந்த இடத்தினையும், எம்மை தாலாட்டி வளர்த்த இந்த மண்ணையும் மறந்துவிட்டு வாழ்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட நாம் பிறருக்காக வாழும் மகிழ்ச்சி இறைவனாலும் ஆசீர்வதிக்கப்படும்.

நிகழ்வுகளின் நிழல்கள்.

பாடசாலை கற்கை உபகரணங்களை வழங்கி வைத்தபோது

பாடசாலையின் அதிபர்
பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர்


                            அண்ணன் நிர்மலன்

விரிவுரையாளர் சுரேஸ்
                                                 மதியபோசண நிகழ்வுகளில் 

0 comments:

Post a Comment