ADS 468x60

16 June 2017

நம்புங்கள் முருகன் நல்லவன் .


நான் சிறு வயதில் அப்பாவுடன் மாரிப்போக வேளாண்மை செய்வதன் நிமித்தம், ஆலயடி முன்மாாிக்குள்ள உழவுவதற்காக கலப்பையை கொழுவி இரண்டு வெள்ளை மாடுகளை விரட்டிக்கொண்டு மதிரங்கேட்டியை மரத்தில் வெட்டி எடுத்து, காலைவேளையில் கட்டோரமாக வில்லுக்குளம் நோக்கி நடந்த நாட்கள் ஞாபகம் வருது.
 போகும் வழியில், வெறும் குடத்தை சுமந்து கொண்டு முருகன் ஆலயத்தில் தண்ணீா் எடுத்து வயலுக்குள் சென்ற நாட்களை ,இந்தப் பாடல் நினைவுபடுத்தியது.
அப்போது பாலமுருகன் ஆலயத்தில் அாிதாகவே வெள்ளிக்கிளமைகளில் சிலர் பொங்கல் வைப்பதுண்டு. அதிலும் சிலர் ஒலிபெருக்கி எடுத்து விஸேடமாக பூசை செய்வர். அந்த நாட்களில் காற்றின் திசைக்கேற்ப்ப சில்லூறுகளின் சப்தங்களுக்கு நடுவே ஒலிபெருக்கியில் வரும் TMS பாடல்கள் பாதி கேட்காமலும் பாதி கேட்டும் தூரத்தில் இருந்து நெருங்க நெருங்க ஆசையோடு கேட்ட பாடல் ஒன்று இன்றும் பசுமரத்தாணி போல் பதிந்து கிடக்கிறது. அருமையான பாடல். அதில் வரும் இன்ரலூட் இசையும் அதன் ஆழ்ந்த பொருளும் அழகான குரலும் என்னை ஒரு தடவை முருகனிடமே கூட்டிப்போய்விட்டது.
"அழுபவர் கண்ணீரை முருகன் 
அன்பால் துடைக்கின்றான்- தன்னை
தொழுபவர் வாழ்வினிலே பிறவித் 
துயரைத் தடுக்கின்றான்
இரவும் பகலுமில்லை முதுமை 
இளமை பேதமில்லை-அன்பு
உறவுகொண்டவர்க்கு முருகன் 
உதவ மறுத்ததில்லை"

0 comments:

Post a Comment